Wednesday 23 October 2019

கலை நுணுக்கம் அறிந்த மன்னன்...!

அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தபோது, பணியாளர்களுடன் சேர்ந்து அக்பரும் தாயின் பல்லக்கை சுமந்திருக்கிறார். அந்தளவிற்குத் தாயை மதித்து வந்தார்.

அப்படிப்பட்டவர் ஒரு முறை தாயின் கட்டளையை ஏற்க மறுத்து விட்டார், போர்ச்சுகீசியர் ஒரு முறை முஸ்லிம்களின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினார்கள். அந்தக் கப்பலில் கிடைத்த 'குர்ஆன்' நூலை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, ஓர் மூஜ் நகரத் தெருவிவிலே விட்டு, அடித்துத் துரத்தி விட்டார்கள். இதற்குப் பதில் நடவடிக்கையாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை ஒரு கழுதையின் கழுத்தில் கட்டியடிக்க வேண்டும் என்று அக்பரின் தாய் அவரிடம் கூறினார்.

அதற்கு அக்பர், “அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது ஓர் அரசனுக்கு அழகல்ல. எந்த மதத்தைப் பழித்துக் கூறினாலும் அது கடவுளை அவமதிப்பதேயாகும். எனவே, உயிரற்ற அந்தப் புத்தகத்தின் மீது வஞ்சம் தீர்த்து, அந்த மதத்தினரைப் பழிக்க நான் விரும்பவிலை” என்று கூறிவிட்டார். அக்பர் ஆட்சிக்கு வந்து (கி.பி. 1556 - 1605), ஆளத்தொடங்கிய போது, பெருபான்மையான மக்கள் இந்துக்கள் மற்றும் அவர்களது ஒத்துழைப்பு, உழைப்பு, உதவி இல்லாமல் பாரதம் முழுவதையும் யாராலும் ஆட்சி செய்ய முடியாது என்பதனை அறிந்து கொண்டார்.

தெற்கே 1336லிருந்து விஜயநகர சாம்ராஜ்யம் இருந்தது, அது 1646 வரை சிறந்து விளங்கியது. ஒரு தடவை அதிரடியாகத் தாக்கி, குறிப்பிட்டப் பகுதியில் உள்ள ஆட்சியாளரை வென்று விடுவதால் மட்டும் அப்பகுதி முகலாய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்களது வேலைகளை சாதாரணமாகத்தான் செய்து கொண்டிருந்தார்கள், மேலும், முகமதியரைப் பற்றி வெறுப்பைத்தான் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டார்.

முகமதியர் என்றாலே, மோசமானவர்கள் என்றுதான் தீர்மானித்துள்ளார்கள், அவ்வாறுதான் *மிலேச்சர், துருக்கர்” என்று குறிப்பிடப்பட்டு நடத்தப் படுகிறார்கள் என்றறிந்து கொண்டார். அதனால், அவர்கள் அரசுடன் சுமுகமாக இருக்க வழியைத் தேடினார். அப்பொழுது உருவான எண்ணம் தான் “தீன் இலாஹி”. அல்லாவுத்தீன் கில்ஜியும் 14-ம் நூற்றாண்டில் அத்தகைய திட்டத்தை வைத்திருந்தாலும், அவர் கத்தியால் சாதிக்க நினைத்தார், ஆனால், அக்பர் பணம் மூலம் சாதிக்க முடிவு செய்தார், அதாவது உரையாடலுக்கு வந்தவர்களுக்கு பரிசளித்தார். அவர் இந்துஸ்தானத்தின் இதர மதங்கள் கொண்ட மக்களிடையே ஒன்றிணைந்து இருக்கவே விரும்பினார். இந்து, கிருத்தவம், சீக்கியம் மற்றும் பொத்த மதக் கூறுகளை உள்ளடக்கிய புதிய சமயத்தினை உருவாக்கினார்.

ஆனால், இது இஸ்லாத்தின் வழிப்பாட்டு முறைகளுக்கு முரணாக இருந்தது. பரந்துப்பட்ட தேசத்தினை கட்டமைக்க விரும்பிய அக்பருக்கு இந்துஸ்தான் தேசத்தின் தனிச் சிறப்பியல்புகள் சவால் நிறைந்ததாகவும், கவனிக்கத் தக்கதாகவும் இருந்தன. தனித்தனியான வழிப்பாட்டு முறைகளில் மக்கள் பிளவுப்பட்டிருப்தை ஒன்றிணைக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். இதர மதத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை உருவாக்கினார். அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி, தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர்.

அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர், தனது ஆட்சியின்போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.

கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா, அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன், பலரும் புகழும் கட்டடங்களைக் கட்டினார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டைக் கட்டினார்.

மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டுபிடித்தார். அக்பர் மத சம்பந்தமான வாதங்களை சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும், இடையே நடத்தினார். கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் (Portugal) இருந்து வந்த யேசு சபையினருடனும், இசுலாமிய அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும். இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது. அவருக்குப் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.

No comments:

Popular Posts