Tuesday 9 October 2018

நெகிழியின் தீமைகள்

பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டதாகும். நெகிழிகளை தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை களின் மூலம் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. நாம் செய்ய வேண்டியவைகள்.. தரமான துணிப்பைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் அடைத்த குடிநீர், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000-ம் ஆண்டுகள். எனவே பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. நெகிழிப்பை களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும். நம் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகத்திற்கு துணை நிற்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts