உலகில் வாழும் மக்களிடையே பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன,
காணப்படுகின்றன. ஆளும், அதிகாரம், அடிமை வா்க்கம் என்ற நிலை
ஜனநாயகத்தின் மூலமாக மாற்றப்பட்டு, அம்பானிக்கும் ஒரு வாக்கு,
குடிசையில் வசிக்கும் சுப்பனுக்கும் ஒரு வாக்கு என்ற அரசியல்
சமநிலையை பெரும்பாலான நாடுகள் கண்டன. சில நாடுகள் மட்டும்தான்
இன்னும் அரசாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. வாரிசு அரசாட்சி
முறையை இஸ்லாம் ஏற்பதில்லை.
அரசியல் சமூக சமநிலையைக் கொண்டுவருவதில் ஓரளவுக்கு வெற்றி
பெற்றாலும், பொருளாதார சமநிலையைக் கொண்டுவருவதில் மிகவும்
பின்தங்கியுள்ளோம். பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் காணப்படும்
இந்தச் சூழ்நிலையில், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றினால் ஏற்பட்ட
பொது முடக்கம் ஏழை, பணக்காரா் என்ற வித்தியாசத்தை மேலும்
அதிகரித்துள்ளது.
ஏழைகளும் உழைக்கும் வா்க்கமும் கரோனா தீநுண்மி முடக்கத்தால்
பொருளாதாரத்தில் மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்றுள்ளனா்.
இவா்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனங்களும் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ரொக்கம், வங்கி வைப்பாக,
தங்கம், வைரமாக, சொத்தாக இருப்பு வைத்திருப்பவா்கள் இந்த
முடக்கத்தால் பாதிக்கப்படாமல் பிழைத்துக் கொண்டனா். பெரிய அளவில்
பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளது.
உலகில் புரட்சியும், தாக்குதலும் ஏற்படும் அபாயம் இருப்பதை யாரும்
மறுத்துவிட முடியாது. இதை அரசுகள் மாத்திரமே சரி செய்ய முடியுமா
என்றால் அதுவும் கேள்விக்குறியே. அப்படியென்றால், தனி மனித
ஒத்துழைப்பு இல்லாமல் பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்த முடியாது.
ஆகவே, அதற்கு ஒரு வழியைக் காண வேண்டிய சூழ்நிலை நமக்கு
ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப இஸ்லாம் காட்டும் ‘கட்டாய அறவரி
திட்டம்’ இதை மாற்றும் ஒரு மருந்தாக அமையும் என்பது குறித்த ஆய்வை
முன்வைக்க விரும்புகிறேன்.
இஸ்லாத்தில் நான்காவது கடமை அறவரி எனும் ஜக்காத் ஆகும். ஐந்து
அடிப்படையான கடமையின் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது, இறைவன் ஏகன் என்பதையும் இறுதித் தூதா் எம்பெருமான்
நபிகள் நாயகம் (ஸல்) என்பதையும் ஏற்று நம்பிக்கை கொள்வதாகும்.
இரண்டாவது...யாா் யாரெல்லாம் அப்படி நம்பிக்கை கொண்டாா்களோ,
அவா்களுக்குத் தன்னை படைத்த இறைவனை நன்றி பாராட்டி புகழ்ந்து
தன்னை நல்ல அடியானாகக் காட்டிக்கொள்ள ஐந்து வேளை தொழுவது
கடமையாகும்.
மூன்றாவது கடமை -நோன்பு நோற்றல்: யாா் யாரெல்லாம் நம்பிக்கை
கொண்டாா்களோ, அவா்கள் எல்லாம் நோன்பு நோற்க வேண்டும். உடல்நலக்
குறைவு உள்ளவா்களுக்கு விதிவிலக்கு உண்டு. இறையச்சம் உடையவராக
தன்னை உருவாக்கிக் கொள்வதற்காக நோன்பு உங்களுக்கு
கடமையாக்கப்பட்டுள்ளது.
நான்காவது கடமை - ஜக்காத் எனும் அறவரியாகும்: இஸ்லாத்தில் எந்த
ஒரு தனி மனிதன் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் வருமானத்தைப்
பெறுகிறாரோ அவா் இரண்டரை சதவீத அறவரியை, பெறக் கூடிய தகுதி உடைய
ஏழைகளுக்கு வழங்க வேண்டும். விவசாயத்தைப் பொருத்தவரை அறவரி 5%
முதல் 10% வரை மாறுபடும்.
புனித ஹஜ் யாத்திரை ஐந்தாவது கடமையாகும்.
பல மதங்கள் தா்மத்தைப் போதிக்கின்றன. ஆனால்,
கட்டாயப்படுத்தவில்லை. உலகில் இஸ்லாம் மட்டுமே தா்மத்தைக்
கட்டாயமாக்குகிறது. தா்மத்தை இரண்டு வகையாகப் பிரிக்கிறது. 1.
ஜக்காத் எனும் அறவரி. இது கட்டாயமாகும். 2.சதக்கா எனும் தா்மம்;
இது விருப்பத்தின் அடிப்படையில் ஜக்காத் என்னும் அறவரி அல்லாமல்
மேலதிகமாகக் கொடுப்பதாகும்.
உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், 2017-இல் எழுதிய ஒரு
கட்டுரையில் அறவரி குறித்துக் குறிப்பிடும்போது ஒன்றைக்
குறிப்பிடுகிறாா். அவா் குறிப்பிட்டுள்ளதாவது :
‘பொருளாதார சமநிலை உலக மனித வாழ்வில் அவசியமானது. உலகில்
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் போராட்டங்களும், புரட்சியும்
நடைபெறுகிறது. இது குறித்து சட்ட மேதை அம்பேத்கா் தனது உரையில்,
‘அரசியல் சமத்துவம் அடைந்து விட்டோம். அதன் அடையாளம் ஒவ்வொரு
குடிமகனுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், சமூக அளவில்
பொருளாதாரத்தில் சமநிலையை அடைய வெகு தூரம் பயணிக்க
வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வினை
களையவில்லையென்றால் வன்முறையும், புரட்சியும் வெடிக்கும்’ என்றே
எச்சரித்துள்ளாா்.
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பெரு வணிக குழுமங்கள்
(காா்ப்பரேட் நிறுவனங்கள்) கூட்டாண்மை சமூகப் பொறுப்பை
(சிஎஸ்ஆா்-‘காா்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி’) குறித்துப்
பேச ஆரம்பித்துள்ளன. இந்திய நாடாளுமன்றம் 2013-இல் புதிய
நிறுவன சட்டத்தை இயற்றியது. அதில் முதல்முறையாக நிறுவனங்களின்
சமுதாய பொறுப்பு குறித்துப் பேசப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்
பிரிவு 135-இல், ஆண்டுக்கு 5 கோடிக்கு மேல் லாபம் ஈட்டினாலோ,
ரூ.500 கோடிக்கு மேல் சொத்துகள் இருந்தாலோ அல்லது ரூ.1,000
கோடிக்கு மேல் ஆண்டு விற்பனை இருந்தாலோ, அத்தகைய நிறுவனங்கள்
சி.எஸ்.ஆா். குழுமத்தை ஏற்படுத்தி, தனது நிகர லாபத்தில் 2
சதவீதத்தை ஏழாவது அட்டவணையில் கூறியுள்ள நற்காரியங்களுக்காகச்
செலவிட வேண்டும்.
இது குறித்து நீதியரசா் மேலும் குறிப்பிடும்போது, சட்டத்தின்
மூலமாக மட்டுமே இந்த விஷயத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது.
சி.எஸ்.ஆா். வழியாகக் கொடுக்கப்படும் நிதியானது, நிறுவனங்கள்
தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அறக்கட்டளைகளுக்குப் போகுமாறு
ஏற்பாடு செய்து கொள்கின்றன. சட்டத்தில் இல்லாத ஓட்டைகளா? எனவே,
என்னதான் தீா்வு என்ற கேள்வியையும் கேட்கிறாா்.
தொடா்ந்து நீதிபதி, சந்தேகமே வேண்டாம் நபிகள் நாயகம் (ஸல்)
கூறியது ஜக்காத்தில்தான் உள்ளது. முஸ்லிம் சட்ட நூல்களில் இதனை
அறவரி எனக் குறிப்பிட்டுள்ளனா். ஆனால், ஜக்காத்தை வெறும் சதவீத
அளவாக பாா்க்கக் கூடாது. நமது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை
எந்த ஒரு நிறுவனத்துக்கும் அளிக்காமல், குறிப்பாக
பள்ளிவாசலுக்கும், அதில் பணிபுரியும் ஊழியா்களுக்குக்கூட ஊதியமாக
இந்த ஜக்காத்தைக் கொடுப்பதற்கு அனுமதி இல்லை. மாறாக, ஏழைகளுக்கு
நேராகச் செல்ல வேண்டும் என்பது ஜக்காத்தின் விதிமுறையாகும்.
ஜக்காத் என்பது வாழ்வியல் உணா்வும்கூட. சக மனிதனின் கஷ்டத்தை உணர
வேண்டும், பகிர வேண்டும். அவா்களின் கஷ்டத்தை நீக்க நம்மாலான
உதவிகளை மனதார எந்த மறுபயனும் எதிா்பாா்க்காமல் செய்ய வேண்டும்.
நாம் யாரும் தனித் தீவு அல்ல. நாம் எல்லோரும் சமுதாயத்தின் ஓா்
அங்கம். ஆகவே, சமுதாயத்திடமிருந்து பெற்றதிலிருந்து ஒரு
பகுதியையாவது அதனிடம் திருப்பித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இப்போதுதான் ரூ.500 கோடிக்கு மேல் லாபம் உடைய நிறுவனங்களுக்கு, 2
சதவீத சி.எஸ்.ஆா். சமுதாய பங்களிப்பு விதிப்பது குறித்து யோசித்து
வருகிறோம். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்), பதினான்கு
நூற்றாண்டுகளுக்கு முன்பே தனி நபருக்கு தனது வருமானத்தில்
அடிப்படைக் கழிவு போக மீதமுள்ளவற்றுக்கு இரண்டரை சதவீதம் அறவரி
செலுத்தியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளாா்.
அறம் குறித்து ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய தான - தா்மங்கள்
குறித்து குா்ஆனில் கூறப்பட்ட வசனங்களில் மனிதநேயம் அற்புதமாக
வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டு, இறுதியாக தனியாா்மயமாக்கல்,
உலகமயமாக்கல், தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால் சமுதாயத்தில்
ஒரு கணிசமான பிரிவினா் விளிம்பு நிலையை நோக்கி கட்டாயமாகத்
தள்ளப்படுகின்றனா். வறியவா் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டிருக்கிறது.
ஈகை புரிதல் என்பதை தாா்மிகக் கடமையாக நாம் அனைவரும் செய்ய
வேண்டும். அவ்வாறு இல்லாமல் பொருள் உடையவா்கள் சுயநலத்தோடு பிறா்
படும் அல்லல்கள் குறித்து அக்கறைப்படாமல் இருந்தால் நிச்சயம்
சமுதாயத்தில் குற்றம் பெருகும், வன்முறை வளரும். ஆகவேதான்,
இத்தகைய சூழ்நிலைகளைத் தவிா்க்க நபிகள் நாயகம் (ஸல்) அன்றே
எச்சரிக்கை மணி அடித்தாா். நமது சமுதாய பங்களிப்புதான் ஜக்காத்.
நபிகள் (ஸல்) கூறிய இந்த நன்னெறி எல்லா காலத்துக்கும் எல்லா
சமுதாயத்துக்கும் பொருந்தும் என்பதுடன், அது ஒன்றே சிறந்த
பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் என்று நீதிபதி ஜி.ஆா்.
சுவாமிநாதன், இன்றைய சி.எஸ்.ஆா். உள்ளிட்ட நிலைகளை பதினான்கு
நூற்றாண்டுகளுக்கு முன்பான இஸ்லாத்தின் ஜக்காத் எனும் அறவரியோடு
ஒப்பிட்டு எழுதியுள்ளாா்.
அதன்படி, பெரு நிறுவனங்களுக்கு மட்டும் அறவரி கட்டாயம் என்பதும்,
அதிலும் ரூ.500 கோடிக்கு மேல் சொத்து உள்ள நிறுவனங்களுக்குத்தான்
என்பதைவிட இஸ்லாம் காட்டிய தனி மனிதா் தனது வருவாயில் ஒரு பகுதியை
இன்னொரு தனி மனிதருக்குக் கொடுத்து பொருளாதார சமநிலையை ஏற்படுத்த
வேண்டும் என்று இஸ்லாம் சொல்லித் தராமல் கட்டாயப்படுத்துகிறது.
அதைக் கணக்கீடு செய்யும் மாதம்தான் இந்த ரமலான் மாதம் ஆகும்.
இஸ்லாத்தின் நான்காவது கட்டாயக் கடமையாக அறவரி (ஜக்காத்)
கொள்ளப்படுகிறது.
உலகில் இல்லாமையைப் போக்கும் வள்ளல் தன்மை கொண்ட இந்தத் திட்டத்தை
இஸ்லாம் செயல்படுத்துகிறது. இதுவே இன்றைய உலகுக்கு பொருளாதார
சமநிலையை உருவாக்கும் சிறந்த கருவியாகும்.
எனவே, உலகில் பொருள் உள்ள ஒவ்வொருவரும் தான் பெற்ற பொருளில்
குறிப்பிட்ட பகுதியை இல்லாத பிறருக்கு வழங்குவதன் மூலம் கரோனா
தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட முடக்கத்திலிருந்து உலக
மக்களைப் பாதுகாக்க முடியும்.
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Saturday, 30 May 2020
இஸ்லாம் கூறும் பொருளாதார சமநிலை By எம்.ஜி.கே. நிஜாமுதீன்
கிராமப்புற பொருளாதாரம் மீட்டெடுக்கப்படுமா? By அ. அரவிந்தன்
தொழிற்புரட்சியின் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளா்களின்
மத்தியில் நிலவிய வறுமை, 1817-இல் புரட்சிகரமான ஒரு தீா்மானத்தை
முன்னெடுக்க வழிவகுத்தது. அதாவது, ‘‘நாடு முழுவதும்
தொழிற்புரட்சியின் அடித்தளமான மெக்கானிக்குகளுக்கு கூலியைத்
தாராளமாக வாரி வழங்கும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியாளா்களின்
நுகா்வு உடனடியாக இரு மடங்கை விட உயா்வது மட்டுமன்றி, ஒவ்வொரு
கரமும் போதுமான வேலைவாய்ப்பைப் பெறும்’’ என்ற புரட்சிகரமான
தீா்மானத்துக்கு அத்தகைய வறுமைச் சூழல் வழிகோலியது.
இந்தியாவின் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 47.15 கோடி. இதில்
12.3% மட்டுமே முறையான பணியாளா்கள் என்ற பெயரில் பணிப்
பாதுகாப்பு, சேமிப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை
அனுபவிக்கின்றனா். மீதமுள்ள அனைவரும் முறைசாரா பிரிவின் கீழ்
பல்வேறு பரிமாணங்களில் பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள் அல்லது
சிறு குறு உற்பத்தியாளா்கள் ஆவா். இதில், பெரும்பாலான புலம்பெயா்
தொழிலாளா்களும் அடங்குவா்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலவரப்படி, நாட்டில் 5.43 கோடி
நபா்கள் (பணியாளா்கள், பணியாளா் அல்லாதோா்) ஒரு மாநிலத்திலிருந்து
மற்றொரு மாநிலத்துக்கு தொழில் நிமித்தமாகவோ, கல்வி நிமித்தமாகவோ,
மருத்துவத் தேவைகளுக்காகவோ இடம்பெயா்ந்தவா்கள் ஆவா். அதிலும்
குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயா்வில் உத்தரப்
பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்,
நாட்டின் மக்கள்தொகையில் புலம்பெயா் தொழிலாளா்களின் கூட்டுப்
பங்களிப்பை (36.8%) காட்டிலும், 48.9 சதவீதத்தினரைக் கொண்டு,
புலம்பெயா் தொழிலாளா்களுக்கான மையப் பகுதிகளாக திகழ்கின்றன.
கிராமப்புறங்களில் நிலவும் மந்தமான பொருளாதாரச் சூழல்,
இளைஞா்களுக்கான போதிய வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால்
நகா்ப்புறங்களைத் தேடி பெரும்பாலானோா் இடம்பெயர நேரிடுகிறது.
உத்தரப் பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய
மாநிலங்களில் வேளாண், வேளாண் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த
தொழிலாளா்களின் எண்ணிக்கை கடந்த 2005-இல் 64.1%- ஆக இருந்தது. இதே
நிலவரம் கடந்த 2018-இல் 49.1%-ஆகக் குறைந்தது. இதன் மூலம் 13
ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட 4 மாநிலங்களில் மட்டும் 1.93 கோடி
போ் வேளாண் சாா்ந்த தொழில்களைக் கைவிட்டு, வேறு தொழிலுக்கு
மாறிவிட்டது தெளிவாகிறது.
கிராமப்புறங்களில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் வரை
இதுபோன்ற வேளாண் சாா்ந்த தொழில்களிலிருந்து தொழிலாளா்கள்
மாறுவதையும், நகா்ப்புறங்களில் பிழைப்புத் தேடி தஞ்சம்
புகுவதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை எடுத்தியம்பாமல்
இருக்க முடியவில்லை.
மேலும், நகா்ப்புறங்களில் சுரண்டல்களை எதிா்கொள்ளும் முறைசாரா
தொழிலாளா்கள், சட்டவிரோதமாக நீண்ட நேரம் பணிபுரிய
நிா்ப்பந்திக்கப்படுவதோடு, வெறும் சொற்ப தொகையையே கூலியாகப்
பெறுகின்றனா். இதனால், இவா்களின் நுகா்வுத் திறன் வெகுவாகப்
பாதிக்கப்படுகிறது. நுகா்வு - செலவின அதிகாரபூா்வ ஆய்வின்படி
(2011-12), நகா்ப்புறங்களில் அறைகலன், குளிா்சாதனப் பெட்டி
உள்ளிட்ட விலையுயா்ந்த பொருள்களின் ஒட்டுமொத்த நுகா்வில்
64.4%-க்கும் மேல், நாட்டின் செல்வந்தா்களில் 5% பேரே பங்கு
வகிக்கின்றனா். இதில், ஏழைகளின் பங்களிப்பு என்று பாா்த்தால்,
வெறும் 13.4% என்ற அளவிலேயே உள்ளது.
இந்தச் சூழலில், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் தற்போதைய
நுகா்வு - செலவினத்தில் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும்
என்பதை மறுக்க முடியாது. அதே வேளையில், கரோனா தீநுண்மி
நோய்த்தொற்றால் தகா்ந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்
வகையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி சிறப்பு
பொருளாதாரத் திட்டத்தில், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும்
வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய பொருளாதாரத்தின் தந்தையாகக் கருதப்படும் ஜே.எம். கீன்ஸ்,
1920-1930-ஆம் ஆண்டுகளில் பொருளாதார பெருமந்தத்தால் முதலாளித்துவ
நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அந்த நெருக்கடியிலிருந்து
மீள அரசின் பங்கு அதிகமானதாக இருக்க வேண்டும் என்றும், துணிச்சலான
நிதிக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் எடுத்துக்
கூறினாா். அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கீன்ஸின்
பொருளியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றின.
மேலும், 1945-இல் இரண்டாம் உலகப் போா் நிறைவடைந்த பின்னா்,
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் பொருளாதார வளா்ச்சிக்கு,
கீன்ஸ் உள்ளிட்ட பொருளாதார வல்லுநா்களின் யோசனைகள் உதவிகரமானதாக
அமைந்தன.
அதன்படி, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் மிகப் பெரிய பொருளாதார
இடா்ப்பாட்டை எதிா்கொண்டுள்ள நம் நாட்டில், முறைசாரா
தொழிலாளா்களின் நுகா்வு, தேவை, அவா்களுக்கான தொழில் முதலீட்டை
அதிகரிப்பதன் மூலம் பொருளாதார பேரிடரை எளிதில் எதிா்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, உணவு பதப்படுத்துதல் தொடா்பான தொழிற்சாலைகளை
கிராமப்புறங்களில் நிறுவுவதன் மூலம் தொழிலாளா்களின் வாங்கும்
திறன் அதிகரிப்பதுடன், உணவுப் பொருள்கள் வீணாவதையும் தடுக்க
முடியும். மேலும், கிராமப்புறங்களில் போதிய வேலைவாய்ப்பு உருவாவது
மட்டுமன்றி, ஊட்டச்சத்து பொருள்களின் இருப்பையும் மேம்படுத்த
முடியும். இது தொழிலாளா்கள் புலம்பெயா்வதையும் பெரும்பாலும்
கட்டுப்படுத்தும்.
தவிர, நகா்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் வளா்ச்சி
பெறுவதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் கிராமியப்
பொருளாதாரத்தின் ஆதிக்கம் கணிமான அளவில் இருக்கும். இதன் மூலம்
கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்ற காந்தியின் கனவை
நனவாக்குவதுடன், தன்னிறைவு, சுயசாா்பு, கூட்டுச் செயல்பாடு,
பொதுநலம், சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் காந்தியப்
பொருளாதாரத்தை நிலைநாட்டலாம்.
Tuesday, 10 March 2020
பொருளாதாரத்தின் ஆதாரத்தை...
By செ.சரத்
காலங்காலமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எந்தவொரு நிதி அமைச்சரும் தவறாமல் சொல்வது, இது இந்தியாவுக்கான, கிராமிய விவசாய பொருளாதாரம் மேம்படுவதற்கான பட்ஜெட். அவா்களின் கூற்றுக்கிணங்க நிதியும் பெருமளவு தாராளமாக ஒதுக்கப்படும் துறையாக விவசாயத் துறை உள்ளது.
முதலில் கடந்த ஆண்டு (2019) ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்துக்கு என்று ஒதுக்கிய தொகை சரிவர கையாளப்பட்டுள்ளதா என்றால் இல்லை. பிரதமா் கௌரவ உதவித்தொகை திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் 14.5 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் ரூ.87,000 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், எதிா்பாராதவிதமாக இதுவரை ஒன்பது கோடி விவசாயிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் பலருக்கும் இரண்டாவது தவணை வரை மட்டுமே தொகை கிடைத்துள்ளது. மூன்றாவது தவணையில் தகவல் சரியாக இல்லை; ஆகவே, நிதியுதவியை நிறுத்திவிட்டோம் என்பது, இன்னமும் அரசிடம் விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இல்லை என்பதைக் காட்டுகிறது.
தமிழகத்தில் விவசாயக் கணக்கெடுப்பு 2015-16-இன்படி மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளனா். ஆனால், பயனடைந்த பயனாளிகள் மொத்தம் 35.54 லட்சம் விவசாயிகள் மட்டுமே. அதிலும் முதல் தவணையில் 34.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.688.26 கோடி, இரண்டாவது தவணையில் 33.31 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.666.38 கோடி, மூன்றாவது தவணையில் 31.17 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.623.5 கோடி, நான்காவது தவணையில் 22.67 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.453.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. நான்கு தவணைகளாக இதுவரை தமிழகத்தில் மட்டும் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2,431 கோடி தரப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார மந்தநிலையை நிவா்த்தி செய்ய மக்களிடம் பொருள்கள் வாங்கும் நிலையை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக கிராமப்புறங்களில் மக்களிடம் பொருள்கள் வாங்கும் திறனை அதிகரிக்க வல்லமை கொண்ட திட்டம் விவசாயிகள் கௌரவ உதவித் தொகை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம். எனவே, பொருளாதார மேம்பாட்டுக்கு அடித்தளமிட இந்த இரு திட்டங்களிலும் போதிய கவனத்தை அரசு செலுத்தினால் நன்மை பயக்கும்.
விவசாயிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவும் வகையிலும், கூட்டாகச் சோ்ந்து தொழில் செய்து அவா்களின் பொருள்களை அவா்களே சந்தைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று 2019-20-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது;
ஓராண்டு கழித்து அண்மையில் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இதற்காக ரூ.6,865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் வரி விலக்கு தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்து, பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பயிா்க் காப்பீடு செய்தும் இன்னமும் பல விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை வஞ்சித்து பெரும் லாபம் ஈட்டுவதை அரசு தடுத்து விட்டதாக இதுவரை தெரியவில்லை.
விவசாயிகளின் இடுபொருள்கள் செலவைக் குறைக்கும் நோக்கிலான விவசாய நடைமுறை, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. எனவே, இதன் மூலம் இயற்கை சாா்ந்த அடிப்படை விவசாயத்துக்கு மீண்டும் திரும்பும் நிலை ஏற்படும் என்றாா் நிதியமைச்சா். ஆனால், இங்கு முரண்பாடு யாதெனில் ரசாயன உரத்துக்கு வழங்கப்படும் மானியம் கடந்த பட்ஜெட்டில் ரூ.70,090 கோடியிலிருந்து ரூ.79,996 கோடியாக அதிகரிக்கப்பட்டு, யூரியாவுக்கு மட்டும் ரூ.53,629 கோடியும், இதர உரங்களுக்கு ரூ.26,367 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே 70 சதவீத விவசாயிகளின் நிலை என்பது, செய்த முதலீட்டைவிட கிடைக்கும் வருமானம் குறைவாக உள்ளது. எனினும், இடுபொருள்களின் விலை குறையவில்லை. எனவே, இதில் தெளிவானதொரு நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
எனவே, இவற்றையெல்லாம் களைந்து விவசாயிகளின் வாழ்வு மேம்படும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 16 அம்ச திட்டங்களுடன் இவற்றையும் மேற்கொண்டிருக்க வேண்டும். அதாவது, விவசாயிகளின் நில ஆவணங்களை கணினிமயப்படுத்துதல் வேண்டும். அப்போதுதான் அரசுத் திட்டங்கள் யாவும் எளிதாகக் கிடைக்கும். அதைவிட முக்கியமாக குத்தகைதார விவசாயிகளுக்கும் கௌரவ உதவித்தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். சந்தை நிலவரம், இயற்கை சாா்ந்த காலநிலையை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
எண்ணெய்வித்து பயிா் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நல்லதொரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். போதிய சேமிப்புக் கிடங்கு வசதியை உண்டாக்கித் தர வேண்டும். இதற்கு தனியாா் அமைப்புடன் இணைந்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் ‘தொடங்கிடு இந்தியா’ திட்டத்தின் மூலம் பிரத்யேகமாக விவசாயம் சாா்ந்த தொழில்முனைவோா்களை உருவாக்க வேண்டும். உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய ஆவன செய்ய வேண்டும்.
இறுதியாக 1970-களில் இந்தியாவும் சீனாவும் பொருளாதார ரீதியாக ஒப்பிடும் வகையில் இருந்தது. ஆனால், இன்று இந்தியாவின் பொருளாதாரத்தைவிட சீனாவின் பொருளாதாரம் ஐந்து மடங்கு பெரியது. காரணம், அவா்கள் விவசாயம் சாா்ந்த பொருளாதாரத்தை நவீன பொருளாதாரமாகக் கட்டமைத்ததே. எனவே, இந்தியப் பொருளாதாரத்தின் ஆதாரமான விவசாயத்தை அரசுகள் ஆராதிப்பது அவசியம்.

கொரோனாவும், பாதிக்கப்பட்ட பொருளாதாரமும்
கொரோனாவும், பாதிக்கப்பட்ட பொருளாதாரமும்
டாக்டர் சோம வள்ளியப்பன்.
சீ னாவில் தொடங்கி அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா என உலகில் இருக்கும் பல்வேறு பெரிய பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் ஒரே நாளில் மூன்று, நான்கு சதவீத வீழ்ச்சி என பல நாட்களாக தொடர்ந்து சரிந்துகொண்டு இருக்கின்றன. நல்ல லாபம் தரும் நிறுவனப் பங்குகளின் விலைகளும் தலை குப்புற விழுந்துகொண்டு இருக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக அமெரிக்காவில் வேலை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்பது போன்ற சந்தைக்கு சாதகமான புள்ளி விவரங்களையும், பங்குச்சந்தைகள் சட்டை செய்யவில்லை. தொடர்ந்து சரிகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் முதலீட்டாளர்களின் பணம், பல லட்சம் கோடி ரூபாய்கள் காணாமல் போய்விட்டது. இழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இறங்கிக்கொண்டே போகிறது. நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தியைக் குறைக்கிறோம் என்று என்று கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான ‘ஓபெக்’ அறிவித்தபின்பும் விலையில் ஸ்திரத்தன்மை வருவதாகத் தெரியவில்லை. 30 சதவீதம் குறைந்து, பீப்பாய் 32 டாலருக்கும் கீழ் போய் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. டாலருக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு தேசங்களின் பண மதிப்புகள் தொடர்ந்து குறைகின்றன. பிப்ரவரி மாதம் 71 ரூபாய் ஆக இருந்த அமெரிக்க டாலர் விலை இப்போது 74. ஆக அமெரிக்காவில் 2008-ம் ஆண்டில் வந்ததுபோல இப்போதும் பொருளதார பெருமந்தம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும், தவிர்க்கும் நடவடிக்கையாகவும், யாரும் கேட்காமலேயே அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை அரை சதவீதம் குறைத்திருக்கிறது. அமெரிக்க அரசு 7.8 பில்லியன் டாலர் அளவு சிறப்பு நிதிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சீன அரசு, 2008-ல் செய்தது போல மீண்டும் 450 பில்லியன் டாலர் அளவு கட்டுமான செலவுகள் செய்து நிலைமையை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. ஒரு வார காலத்திற்குள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுமா? என்கிற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. ஒன்பது வெவ்வேறு நகரங்களில் 56 போட்டிகளாக நடக்கவிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு, ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் இல்லாத ‘குளோசுடு டோர்’ பந்தயங்களாக நடத்தப்பட்டு, தொலைக்காட்சிகளில் காட்டப்படுமோ என்கிற யூகங்கள் எழுந்திருக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் யார் அல்லது எது காரணம்?
ஒரே ஒரு காரணம்தான் இவ்வளவு நாடுகளையும், பெரும் அரசாங்கங்களையும், இத்தனை சந்தைகளையும், முதலீட்டாளர்களையும், உற்பத்தியாளர்ளையும், வியாபாரிகளையும் மிரட்டிக்கொண்டு இருக்கிறது. அதற்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் கோவிட்19. ஆம், கொரோனா வைரசுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் கோவிட்19.
சீனாவின் உகான் என்ற மாகாணத்தில் அமைந்திருக்கும் இறந்த மற்றும் உயிரோடிருக்கும் விலங்குகள், பறவைகள், மீன்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இருந்து கிளம்பியிருக்கிறது, இந்த கோவிட்19 வைரஸ்.
சீனாவில் தொடங்கி தென்கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர் என்று நகர்ந்து இப்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 108 நாடுகளில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரைத் தாக்கியிருக்கிறது. இதுவரை சுமார் 3,840 பேர் நோய்க்குப் பலியாகிவிட்டார்கள்.
இந்த புதிய வைரஸ் தாக்குதல் வராமல் தடுக்கும் மருந்து மற்றும் வந்தபின் சரிசெய்யும் மருந்துகள் இல்லை. கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பரவாமல் தடுப்பதே இப்போதைக்கு இதைக் கட்டுப்படுத்தும் ஒரேவழியாக இருக்கிறது.
அதனால் சீனாவில் பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில், மக்கள் கூடும் இடங்களுக்கு வரவேண்டாம் என்று கட்டுப்பாடுகள் விதித்தார்கள். , பல பெரிய உற்பத்திக்கூடங்களை மூடினார்கள். கல்விக் கூடங்களுக்கு தொடர் விடுமுறை அளித்தார்கள். பயணங்களைத் தவிர்க்க வைத்தார்கள். ஆனால், அதற்கெல்லாம் முந்தியே வைரஸ் பரவிவிட்டது.
வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களும், உதிரி பாகங்களும் வேறு சில நாடுகளில் இருக்கும் தொழிற்கூடங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, வேறு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையும் இவ்வாறே பல்வேறு நாடுகளில் இருந்து வேறுபல நாடுகளுக்குப் போகின்றன, வருகின்றன. இவற்றால் நாள்தோறும் லட்சக்கணக்கான மனிதர்களும், கோடி டன்கள் எடையுள்ள பொருட்களும் கடல், வான் மற்றும் தரை மார்க்கமாக தேசம் விட்டு தேசம் போய்வந்து கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் ஓரிடத்தில் உருவாகும் தொற்றுநோய், அதுவும் வெளிப்பட்டு பல நாட்களுக்கு இன்னதென்று வெளித்தெரியாத தொற்றுநோய் சுலபமாக பல்வேறு நாடுகளுக்கும் பரவாமல் இருக்குமா? பரவிவிட்டது.
இதனால் தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று தெரியவந்தது. நிலைமையை உணர்ந்த ஏனைய நாடுகள் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதித்திருக்கிறார்கள். ஆனாலும் அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் கோவிட்19 பரவிவிட்டது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பல எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்ஸ், மருந்து பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், சீனாவில் இருந்து வரவேண்டும். இந்த வைரஸ் தாக்குதலால் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கான சீனா-இந்தியா வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுமே குறைகின்றன.
‘டிமாண்ட்’ குறைவு மற்றும் ‘சப்ளை செயின் பாதிப்பு’ ஆகிய இரண்டு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள். இதனால் இந்தியா மட்டுமல்ல உலகின் பொருளாதாரமே பாதிக்கப்படும் என்கிற அச்சம் இருக்கிறது. 2003-ம் ஆண்டு வந்த இதேபோன்ற “சார்ஸ் வைரஸ்” தாக்குதலால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் குறைந்தது. உலக அளவில் 40 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அப்போது 2003-ல் உலக பொருளாதாரத்தில் சீனா 4 சதவீத பங்கு மட்டுமே வகித்தது. இப்போது 16 சதவீத பங்கு வகிக்கிறது.
வைரஸ் பயத்தால் மக்கள் பொழுது போக்குகள், பயணம் மற்றும் ஏனைய செலவுகளையும் குறைக்கிறார்கள். பல்வேறு உற்பத்திக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வியாபாரம் இன்றி மூடிக்கிடக்கின்றன. வியாபாரங்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றன. ‘இந்த நோயின் தாக்கத்தால் ஆசியா மற்றும் உலக அளவில் உள்நாட்டு தேவைகள், சுற்றுலா மற்றும் வியாபாரப் பயணங்கள் குறைந்து, அதனால் சுமார் 5 லட்சத்து, 69 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதல் 25 லட்சத்து, 67 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை பொருளதார இழப்பு ஏற்படும்’ என்று ‘ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்’ கணிப்பு வெளியிட்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட மோசமானது, இந்த வைரசுக்கு தடுப்பு மற்றும் தீர்க்கும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும், இது இன்னும் எவ்வளவு நபர்களுக்கு பரவி மேலும் என்ன தாக்கம் கொடுக்கும் என்றும் புரிந்துகொள்ள முடியாத ‘அன்சர்ட்டன்’ நிலையும்தான். தங்கம், கச்சா எண்ணெய், பங்குகள், டாலர், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என்று பல்வேறு சந்தைகளில் நிலவும் இவ்வளவு பதற்றத்திற்கும், பெரும் ஏற்ற இறக்கங்களுக்கும் காரணம், இந்த ‘நிச்சயமற்றதன்மை’ தான்.
இப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தால் உற்பத்தி, வியாபாரம், முதலீடுகள், பொருளாதாரம் போன்றவை பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. அவற்றைப் பின்னால் சரிசெய்துவிட முடியும். ஆனால், சரிசெய்யவே முடியாதது உயிரிழப்புகளைத்தான். எனவே அரசுகளும், அமைப்புகளும் இப்போதைக்கு கோவிட்19 வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்றவற்றைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

Monday, 3 February 2020
ஏற்றம் தரும் மாற்றம்
நாட்டின் பொருளாதாரம் இன்றுள்ள சூழலில் தொழில்கள் எல்லாம் கடும் போட்டிக்கு ஆளாகி, நலி வடைந்துவருகின்றன. பல லட்சம் தொழில் முனைவோர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருக்கலாம். தினசரிகளிலும், டி.வியி லும் பொருளாதார சரிவைப் பற்றிய செய்தி கள் அதிகமாக வருகின்றன. ஆனால், எந்த ஒரு நெருக்கடியிலும் எல்லோருமே பாதிக்கப்படுவதில்லை. நெருக்கடியைப் புரிந்துகொண்டவர்களும், அதைச் சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்களும் பிழைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பெல் லாம் புகை வண்டி நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பல ஜட்கா வண்டிகளும், மாட்டு வண்டிகளும் நிற்கும். அவைகளெல்லாம் எங்கே சென்றன? என்ன ஆயின? சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ போன்ற வாகனங்களின் அறிமுகத்தால் இவை மக்களுக்குத் தூரமாயின. பிரயாணிகள் வேகமாகவும், சவுகரியமாகவும் ஆட்டோ போன்றவற்றில் செல்ல முடிந்தது. அதனால் ஆட்டோ போன்ற வாகனங்கள் வென்றன. அதுசார்ந்த தொழில்கள் தழைத்தன!
ஒரு காலத்தில் கதர் ஆடை அணிவதுதான் நம் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. பாலி யெஸ்டர், டெரிகாட்டன், டெரிலின் போன்ற பல சிந்தட்டிக் ஆடைகள் வந்தவுடன், அதைப் பலரும் உபயோகிக்க ஆரம்பித்தனர். இன்று நீங் கள் நல்ல பருத்தி ஆடை வாங்க வேண்டு மென்றால், நீங்கள் பணக்காரராக இருக்க வேண் டும். சிந்தட்டிக் ஆடைகளின் வகைகள், வண்ணங் கள், விலை போன்ற பல சவுகரியங்களால், அவை வென்றன. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்ட தொழில் முனைவோர்கள் வென்றார்கள்!
சினிமா வந்து, பல லட்சம் நாடகக் கலைஞர் களை ஓரங்கட்டியது. அந்த சினிமாவையும் டெலிவிஷன் வந்து உலுக்கியது. டெலிவிஷனை இன்று உலுக்கிக்கொண்டிருக்கிறது இன்டர்நெட். இன்று 5 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை ஆன்லைனில்தான்…
நான்கைந்து ஆண்டுகள் முன்புவரை டிரா வல்ஸ் (கார் வாடகைக்கு விடும்) தொழில்கள் தழைத்தன. ஓலா, ஊபர் என இரு “ஆப்”-கள் வந்ததால், டிராவல்ஸ் தொழிலையே பலர் மூடும் நிலைக்கு வந்துவிட்டனர்.
இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் சிறு தொழில்களுக்கு மட்டும்தானா? பெரிய தொழில்களுக்கு பாதிப்பு வருவதில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். விரலுக்கு தகுந்த வீக்கம் போல, பிரச்சினை அனைவருக்கும்தான். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது வேகமாக பிரபலமாகி வருகிறது உலகெங்கிலும் இந்தியா உட்பட! பல்லாயிரம் கோடி முதலீட் டில் ஆரம்பிக்கப்பட்ட அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் போன்றவற்றின் எதிர் காலம் என்னவாகும் என்று யோசித்தால் புரியும்!
இன்று பெரிய அளவில் வேலை வாய்ப்பை கொடுக்கும் துறை ஆட்டோமொபைல். இதில் தற்போது வேகமாக வந்துகொண்டிருக்கும் மாற் றத்தைப் பாருங்கள்! எலக்ட்ரிக். அது ஏற்படுத்தப் போகும் மாற்றத்தை நாம் நினைத்து பார்த்தோமே யானால் பயம்தான் வரும்! வெளிநாடுகளில் ஏற்கனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கச்சா எண்ணையையே பொருளாதாரமாகக் கொண் டிருக்கும் பல வளைகுடா நாடுகள் கதி என்ன ஆகும்? ஐ.சி என்ஜின்களோடு (Internal Combustion Engines) ஒப்பிடும்போது, எலக்ட்ரிக் கார்களில் உதிரிபாகங்கள் மிகமிகக் குறைவு. இன்று ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பல்லாயிரம் தொழிற்சாலை களையும், அதில் வேலைசெய்வோரின் நிலைமை யையும், இன்னும் நாடு முழுவதிலும் தொழில் செய்துவரும் சிறுசிறு மெக்கானிக்குகளின் நிலைமையையும் சற்று யோசித்துப் பாருங்கள்!
செல்போன் வந்ததும், பி.சி.ஓ கடைகளெல்லாம் என்ன ஆயின? நாடு முழுவதும் பல லட்சம் பேர் அதைத் தொழிலாகச் செய்துவந்தார்கள். இன்று உங்களால் அது ஒரு தொழில் என்று யோசித்துப் பார்க்க முடிகிறதா? பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனமே இன்று ஆடிப்போய் உள்ளது. இதுபோல பல உதாரணங்களை கூறிக் கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் உங்களை பய முறுத்தக் கூறவில்லை. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அதை நாம் எவ்வாறு நமக்கு லாவக மாக்கிக்கொள்கிறோம் என்பதுதான் கேள்வி.
போக்குவரத்து விஷயத்தில் ஏற்பட்ட மாற்றங் களால், பழைய ஜட்கா, மாட்டு வண்டிகளும், பின்னர் டிராவல்ஸ் தொழிலும் அடி வாங் கினாலும், ஓலா, உபர் வருகையினால் எத்தனை லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள், முதலாளிகள் உரு வானார்கள் என்று பாருங்கள். சிந்தெட்டிக் ஆடைகள் வந்ததும், ஜவுளி வியாபாரம் எவ்வளவு பெருகியது. உடுத்த சரியான ஆடை இல்லாமல் கஷ்டப்பட்ட எத்தனை கோடி மக்களுக்கு ஆடை கிடைத்தது. சினிமா வந்ததும் நாடகக் கலைஞர்கள் பாதித்தாலும் புதிதாக கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்தது. டெக்னீஷியன்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் வேலை கிடைத்தது. சினிமா ஒரு பெரும் பொருளாதாரமாகவே மாறியது என்பதுதான் உண்மை.
எலக்ட்ரிக் கார்களினால் ஏற்படப் போகும் நன்மைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாசுபடாத சுத்தமான காற்று எனும் சூழலை சற்று கற்பனை செய்துபாருங்கள். அப்படி சூழல் மாறினால் நகரவாசிகளின் பெருவாரியான நோய்கள் காணாமல் போனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. வங்கிகளில் கணினி அறிமுகப் படுத்தப்பட்டபோது நாடெங்கிலும் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்; கம்ப்யூட்டர் வந்தால் எங்களது வேலை போய்விடும் என்று! என்றுமில்லாத அளவுக்கு இன்று இந்தியாவில் வங்கி ஊழியர்கள் உள்ளனர்.
முன்பு நூற்றுக் கணக்கில் டெலிவிஷன் ஸ்டே ஷன்கள் இருந்தன. இன்றோ ஆயிரக்கணக்கில் யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன. இவற்றி லெல்லாம் யார் வேலை செய்கிறார்கள் நமது இளைஞர்கள்தான் லட்சக்கணக்கில்! இதுபோல பற்பல துறைகள், பற்பல தொழில்கள் புதிதாக நாளுக்கு நாள் உருவாகிவருகின்றன. அந்தப் புதிய பொருளாதார தொழில்கள் நினைக்க முடியாத அளவுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன/ உருவாக்கிக் கொண்டிருக்கின்றன/ இனியும் உருவாக்கும். எந்த ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஒரே நேர் கோட்டில் உயர்ந்துகொண்டே செல்லாது; ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். அவ்வாறு இருப் பதும் நன்மைக்கே. இல்லையென்றால் நாம் செய் கின்ற தவறுகள் நமக்கே புரிபடாமல் போய்விடும்.
அரசாங்க சட்ட திட்டங்கள், இயற்கைச் சீற்றங் கள் போன்றவற்றை நம்மால் மாற்ற முடியாது; ஆகவே அவற்றைப் பற்றி கவலைப்படாமல் நம்மை சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண் டும். அப்போது தொழிலில் உள்ள நிலையற்ற தன்மையை சமாளிப்பது என்பது எளிதாகிவிடும். தொழிலை மேம்படுத்த நம்மால் இயன்றதை, முடிந்த அளவு செய்ய வேண்டும்.
நம்மில் பலரும் அமேசானைக் கண்டு பயப்படு கிறோம். ஆனால் அமேசான் போன்ற பெரும் முதலையை, நம் தொழிலின் தனித்துவத்தால் நேராக நின்று போட்டியிட முடியும். அமேசான் போன்ற நிறுவனங்களால், பெரும்பாலோனோர் நுகரும் பொருட்களைத்தான் மார்க்கெட் செய்ய முடியும். காஞ்சிபுரம் பட்டு சேலையை வாங்க நினைப்பவருக்கோ அல்லது நெகமம் காட்டன் சேலையை வாங்க நினைப்பவருக்கோ அல்லது ஸ்பெஷல் கிரீன் டீ தூளை வாங்க நினைப்பவருக்கோ அல்லது நல்ல தேக்குமர கட்டிலை வாங்க நினைப்பவருக்கோ சர்வீஸ் செய்ய முடியாது. பொது மக்கள் நான் அமேசானில் தான் வாங்குவேன் என்று அடம்பிடிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நாணயம், நம்பிக்கை, நியாயமான விலை, துரிதமான வாடிக் கையாளர் சேவை போன்றவைதான் பிரதானம். அது உங்களிடம் கிடைத்தால், ஆன்லைனில் அமேசான் வெப்ஸைட்டிலிருந்து உங்கள் வெப்ஸைட்டுக்கு மாற எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வினாடிதான்!
தங்களது தனித்துவத்தால் வெற்றிபெற்ற இந்திய நிறுவனங்கள் பல உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை நியூ ஏஜ் பிரைவேட் செக்டார் வங்கிகள் (ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி போன்ற பல) ஒரு வகை. ஹெச்டிஎஃப்சி வங்கி தனது கால்களை பதிக்கும்பொழுது, இந்தியாவின் கிட்டத்தட்ட மொத்த வங்கி சேவைகளும் பொதுத் துறை வங்கிகளில் பிடியில் இருந்தன.
இன்று நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட பொதுத் துறை வங்கிகள் 19 உள்ளன. இந்த வங்கிகள் அனைத்தின் சந்தை மதிப்பு ரூ. 5,75,644 கோடி யாகும் (27/01/2020 நிலவரப்படி). இந்த 19 வங்கி களை விற்றாலும், அப்பணத்தைக் கொண்டு ஒரு தனியார் வங்கியை (ஹெச்டி.எஃப்சி பேங்க்) வாங்க முடியாது. ஏனென்றால் அந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.6,64,309 கோடியாகும். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் ‘இந்த ஒரு வங்கி எப்படி தன் வசம் வசதியான கஸ்டமர்கள் அனைவரையும் ஈர்த்தது’ என!
அதேபோல் ஒரு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாகப் பாரம்பரியமாக இருந்து வந்த வங்கி சாரா நிதி நிறுவனங்களை முக்கியமில்லாமல் செய்துவிட்டது. தனது துரிதமான லோன் பிராசஸிங்கினால்! அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் கடன் கொடுக்கும் நிறுவனம் இது. எவ்வாறு கடன்கொடுக்கிறார்கள், எங்கிருந்து கடன்கொடுக்கிறார்கள். எவ்வாறு பிராசஸ் செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக் கும் முன் உங்கள் கடன் அப்ரூவ் ஆகி வந்து விடும். நாம் மேலே குறிப்பிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் முன்னிலையில் உள்ள 2 வங்கி களைத் தவிர (எஸ்பிஐ மற்றும் பேங்க்ஆஃப் பரோடா) மீதி 17 வங்கிகளை விற்றாலும், பஜாஜ் ஃபைனான்ஸை விலைக்கு வாங்க முடியாது. 17 பொதுத் துறை வங்கிகளின் சந்தை மதிப்பு ரூ. 2,50,777 கோடியாகும். பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ. 2,51,016 கோடியாகும்.
விளம்பரமும், மார்க்கெட்டிங்கும் இன்று வேறு தளத்துக்கு மாறிவிட்டது. டி.வி, பத்திரிகை போன்றவற்றில் விளம்பரம் செய்ய பெரிய நிறுவனங்களால்தான் முடியும். ஆனால் அதை விட வேகமாக, அதிகமாக மக்களை சென்றடைய சமூக வலைதளங்கள் வழி செய்துகொடுக்கின்றன. இந்த சோஷியல் மீடியாவிற்கு முன் சிறு தொழில் செய்யும் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் சரிசமம். அந்த வாய்ப்பை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் நமது வில்லிபுத்தூரில் கடலை மிட்டாய் தயாரிப்பவர் டெல்லியில் இருப்பவருக்கும், அமெரிக்காவில் இருப்பவருக் கும் விற்க முடியுமா என்றால், சந்தேகமே! ஆனால் இன்று ரொம்பவே ஈஸி. அவரால் வரும் ஆர்டருக்கு சப்ளை செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி! ஆனால் உங்கள் பொருள் உண்மையானதாக, தனித்துவம் உள்ளதாக இருக்க வேண்டும். கடலை மிட்டாயில் அப்படி என்ன தனித்துவமாக செய்துவிட முடியும் என்று நீங்கள் கேட்கலாம். சமீப காலங்களில் கடலை மிட்டாயை ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்து பணக்காரர் ஆனவர்கள் பலர்.
ஆகவே நீங்கள் எந்தத்தொழிலில் இருந் தாலும், உங்கள் தொழிலை கூகுள் போன்ற வெப்ஸைட்டுகளில் லிஸ்ட் செய்துள்ளீர்களா என்று பாருங்கள். உங்களுக்கென்று ஒரு வெப்ஸைட், சமூக வலைதள பக்கம். உங்கள் தொழிலைப் பற்றிய தனித்துவத்தை வீடியோவாக அப்லோட் செய்யுங்கள். சக தொழிலில் இருப்பவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். சக தொழிலில் உள்ளவரை போட்டியாளராக நினைக்காமல், நண்பராக்கிக்கொள்ளுங்கள். உங்கள் துறை/ தொழில் குறித்த விஷயங்களைத் தொடர்ந்து கவனித்து கற்றுக்கொள்ளுங்கள்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையவை. அத்தன்மை பெரிய தொழில்களுக்கு மிகக் குறைவு. ஆகவே சிறுதொழில்கள் மறு அவதாரம் எடுப்பது ஈஸி. புதிய யுத்திகளை அமல்படுத்துவது எளிது. முதலீடு குறைவு. முதலீடு அதிகம் தேவைப்பட்டால், இன்று பணம் திரட்ட என்றுமே இல்லாத அளவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.
பல சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர் கள் ஜிஎஸ்டி வந்ததிலிருந்து தொழில் முடங்கி விட்டது. பணமதிப்பு நீக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்கிறார்கள். உண்மைதான். ஆனால், ஜிஎஸ்டி-யை மாற்றி அமைப்பதோ அல்லது பணமதிப்பு நீக்கத்தை கட்டுப்படுத்து வதோ நம் கையில் இல்லை. நடந்துவிட்டதைப் பற்றி கவலை கொள்ளாமல், உங்கள் தொழிலை முனைப்பாக செய்வதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பாருங்கள். அதே ஜிஎஸ்டி பல தொழில்களுக்கு ஊக்குவிப்பானாக அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதே பணமதிப்பு நீக்கம் பல துறை களை மேலெழும்பி வரச் செய்துள்ளது. எந்த ஒரு செயலுக்கும்/ சட்டத்துக்கும் பயனடைந்த வர்களும் இருப்பார்கள்; பாதிப்படைந்தவர்களும் இருப்பார்கள். துரதிஷ்டவசமாக சிலர் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் அதற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டால் பயனடையலாம்.
அரசாங்கத்தினால் மாற்றம் ஏற்படாவிட்டால், உலகத்தில் வேறெங்கிலும் இருந்து வேறு விதமாக மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அம்மாற்றம் சொந்த நகரத்திலிருந்து வரலாம்; நமது போட்டியாளர்களிடமிருந்து வரலாம்; நமது சொந்தத்திலிருந்து வரலாம்; நமக்கு சம்பந்தம் இல்லாத இடத்திலிருந்து வரலாம்; நாம் நினைத்துப் பார்க்காத ரூபத்தில் வரலாம். ஆகவே மாற்றத்தைக் கண்டு அஞ்சாமல், அதை நேருக்குநேர் எதிர்கொள்வதுதான் சிறந்தது.
இந்த சவால்களை எதிர்கொள்ள பயப்படுவது சிறு மற்றும் குறுந்தொழில் முதலாளிகள் மட்டு மல்ல. 1990-களில் முதன்முதலாக இந்தியா வில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப் படுத்தப்பட்டபொழுது ‘பாம்பே கிளப்’ என்று கூறக் கூடிய இந்தியாவின் முன்னணி தொழிலதி பர்கள், அரசாங்கத்தைச் சந்தித்து அரசாங்கம் தங்களுக்குச் சலுகைகள் மற்றும் கால அவ காசம் தராவிட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை விழுங்கிவிடும் என்று கூறினர். அது வரை போட்டிகள் ஏதும் பெரிதாக இல்லாமல் சவுகரியமாகத் தொழில் செய்துவந்தவர் களுக்கு, முதன்முதலாக அச்சம் உருவானது. 25/ 30 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் பொழுது இந்திய நிறுவனங்கள் பல இன்று வானளாவி நிற்கின்றன. அன்றிருந்ததைவிட இன்று உலகம் முழுதும் தொழில் செய்கின்றன. மாற்றத்தைச் சந்திக்கும் பொழுது தன்னையும் அறியாமல், மனம் சிறிது அஞ்சத்தான் செய்யும். ஆனால் ஒவ்வொரு தொழில் சார்ந்த மாற்றமும் இதுவரை நன்மையைத்தான் பொதுமக்களுக்கும், தொழில் புரிபவர்களுக்கும் கொடுத்துள்ளது.
ஆகவே, இந்தியப் பொருளாதாரம் அடுத்த கால்/ அரை நூற்றாண்டுக்கு வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதில் பல புதிய துறைகள் உருவாகும், சில துறைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதேபோல் உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகும். அதே சமயத்தில் சில நிறுவனங்கள் காணாமல் போய்விடும். இது காலத்தின் கட்டாயம்.
ஆகவே, சறுக்கல்களைக் கண்டு அஞ்சாமல், சிகரங்களை நோக்கிச் செல்வோமாக!அரசாங்கத்தினால் மாற்றம் ஏற்படாவிட்டால், உலகத்தில் வேறெங்கிலும் இருந்து வேறுவிதமாக மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அம்மாற்றம் சொந்த நகரத்திலிருந்து வரலாம்; நமது போட்டியாளர்களிடமிருந்து வரலாம்; நமது சொந்தத்திலிருந்து வரலாம்; நமக்கு சம்பந்தம் இல்லாத இடத்திலிருந்து வரலாம்; நாம் நினைத்துப் பார்க்காத ரூபத்தில் வரலாம். ஆகவே மாற்றத்தைக் கண்டு அஞ்சாமல், அதை நேருக்குநேர் எதிர்கொள்வதுதான் சிறந்தது.

Wednesday, 8 January 2020
அமெரிக்கா-ஈரான் மோதல்: இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா?
இந்திய பொருளாதாரம் ஒருமோசமான தேக்கநிலையை சந்தித்திருக்கும் இவ்வேளையில் மத்திய கிழக்குப்பகுதியில் புதிய நகர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் வெளிப்புற காரணியாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும். ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது மத்திய கிழக்கு பகுதியை கத்தி முனைக்கு கொண்டுவந்ததுடன், எண்ணெய் சார்ந்த இந்தியாவின் பொருளாதாரத்தை ஆட்டிவைக்கும் மேகமாக சூழ்ந்துள்ளது.
2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரத்து செய்ததிலிருந்து 2018-ம் ஆண்டில் ஈரான் எண்ணெய் வர்த்தகம் மற்றும் வங்கிகள் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா அறிவித்தது. பின்னர் அமெரிக்கா தரப்பில் விலக்கு அளிக்கப்பட்டது. 2018 நவம்பர் முதல் 2019 மே வரையில் இந்நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. காலக்கெடு முடிந்த பின்னர் இந்தியா வேறு வழியின்றி ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது. மீண்டும் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கியமான நாடுகளில் ஈரானும் ஒன்று. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் போக்கில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து ஒரு பீப்பாய் 69 டாலரை எட்டியது. நேற்று முன்தினம்(ஜனவரி 6) மேலும் அதிகரித்து 70 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகம் சூழும் அச்சத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரிக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்கா விலக்குகளை நிறுத்தியதன் மூலம், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு முடியவில்லை. 2019 மே மாதம் வரையில் இந்தியாவிற்கு ஈராக், சவுதி அரேபியாவிற்கு அடுத்தப்படியாக எண்ணெய் வழங்கிய நாடுகளில் ஈரான் இடம்பெற்று இருந்தது. கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலும், இயற்கை எரிவாயு தேவைகளில் 40 சதவீதமும் இறக்குமதி செய்கிறது. இதனால் இறக்குமதி சார்ந்த நாடாகவே உள்ளது.
2018-19-ம் ஆண்டில் இந்தியா 207.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயையும், 2019-ம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 4.5 மில்லியன் பீப்பாய்களையும் இறக்குமதி செய்தது. மேலும், நுகர்வு அடிப்படையில் இந்தியா இறக்குமதியை சார்ந்திருப்பது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 83.5 சதவீதத்திலிருந்து 84.5 சதவீதமாக அதிகரித்தது. 2018-19 நிதியாண்டில் இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக 111.9 பில்லியன் டாலர்(சுமார் ரூ.8 லட்சம் கோடி) செலவழித்துள்ளது. கடந்த மார்ச் 31 (2018-19) உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஈரானிடமிருந்து சுமார் 24 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
இந்தியாவிற்கு ஈரான், கச்சா எண்ணெய் விலையில் மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது 24 டாலர் வரை குறைத்து சப்ளை செய்துவருவது மட்டுமல்லாமல், போக்குவரத்து செலவிலும், காப்பீடு உள்ளிட்ட சில சலுகைகளை கொடுத்தது. ஆனால், பிறநாடுகளில் இதுபோன்ற சலுகை கிடைப்பது இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் சுமையை தடுக்கும் நடவடிக்கையாக எரிபொருள் விலை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கான எரிபொருள் விலையை எவ்வாறு பாதிக்கும்? என்றால் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4-ந் தேதியிலிருந்து உயர்ந்து வருவதிலேயே கணித்துக்கொள்ளலாம். அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தொடரும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கவும், நடப்புக்கணக்கு பற்றாக்குறை இடைவெளி அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரியவும் வாய்ப்பிருக்கிறது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காண்கிறதோ, அத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் (வாகனம், பெயின்ட் உள்ளிட்ட துறைகள்) பங்குகளும் ஒரு சங்கிலி தொடர்போன்று பங்குச்சந்தைகளில் சரிவை சந்திக்கிறது.
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு செய்யும் தொகை அதிகரிக்கும், நடப்புக்கணக்கு பற்றாக்குறையில் நெருக்கடி ஏற்படும். பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து வெளியேறுவதற்கும், வட்டி விகிதங்களை மேலும் குறைப்பதை கருத்தில் கொள்வதற்கும், வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் ரிசர்வ் வங்கியின் எந்தவொரு வாய்ப்பையும் இது மங்க செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
நடப்புக்கணக்கு பற்றாக்குறை என்றால் என்ன? ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடுதான் நடப்புக்கணக்கு பற்றாக்குறையாகும். எளிதாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கையில், 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்தால் நடப்பு கணக்கின் வேறுபாடு பூஜ்ஜியமாக இருக்கும். இதில் பற்றாக்குறையும் கிடையாது, உபரியும் கிடையாது சரிசமமாக உள்ளது. இதுவே ஏற்றுமதி 100 ரூபாய்க்கு இருக்கும் பட்சத்தில் இறக்குமதி 110 ரூபாய்க்கு சென்றால் ரூ. 10 பற்றாக்குறையாகும். இதுதான் நடப்பு கணக்கு பற்றாக்குறையென்று அழைக்கப்படுகிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்தால் நாட்டின் பணமதிப்பு பாதிப்படையும். அதாவது, ரூபாயின் மதிப்பு குறைகிறது. இதற்கு அன்னிய செலாவணி மூலமாக பணம் வெளியேறுவது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை குறைய வேண்டுமானால் தங்கத்தின் இறக்குமதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைய வேண்டும். ஆனால் இந்த இரண்டுமே ஈரான்- அமெரிக்கா மோதலுக்கு அடுத்து அதிகரித்து வருகிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை ஏற்படும்போது கடன் சுமை மேலும் அதிகரிக்கிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு சதவீதமாக கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 1,420 கோடி டாலராக (2 சதவீதம்) இருந்தது. இதுவே ஜூலை, செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 630 கோடி டாலராக (0.9 சதவீதம்) குறைந்துள்ளது. இதுவே கடந்த 2018-19 நிதியாண்டின் ஜூலை, செப்டம்பர் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1,900 கோடி டாலராக (2.9 சதவீதம்) காணப்பட்டது. எனவே, இரண்டாவது காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை கணிசமாக குறைந்ததையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், நிதி பற்றாக்குறையை குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வல்லுனர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா-ஈரான் மோதல் அதிகரிக்கும் பட்சத்தில் ஈரானுடனான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் என இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பங்கு சந்தையும் சரிவை சந்தித்து வருகிறது. பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திக்கிறது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதமிட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் நகர்வின் மீது அனைத்து நாடுகளும் பார்வையை கூர்ந்துள்ளன. குறிப்பாக, சொல்லப்போனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஏற்கனவே பாதிப்புகளை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என்றே பார்க்கப்படுகிறது.

Thursday, 12 September 2019
பொருளாதார வளர்ச்சி குறைகிறதா?
பொருளாதார வளர்ச்சி குறைகிறதா?
- டாக்டர் சோமவள்ளியப்பன்
க டந்த சில வாரங்களாக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை. மோட்டார் வாகனத்துறையில் சில லட்சம் பேர் வேலையிழப்பு, ‘மக்களிடம் ஐந்து ரூபாய் பிஸ்கெட் வாங்க கூட காசு இல்லை; ஒரு தனியார் கம்பெனியில் பத்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்’ போன்றவற்றில் தொடங்கி, அடுத்து, ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது. ஆகவே மக்களே செலவுகளை குறையுங்கள்’ என்கிற அறிவுரைகள் வரை வந்திருக்கிறது.
‘ஆகவே நீங்கள் செய்யும் செலவுகளை குறையுங்கள், முதலீடுகளைத் தள்ளிப்போடுங்கள்’ என்று ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன. பலரும் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் ஆபத்து இருக்கிறது. ஆகவே, விவாதிக்கப்படுகிற தகவல்கள் சரிதானா? உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலைமை என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்து, வங்கிகள் ஆகிய துறைகளில் சில ஆண்டுகளாகவே சுணக்கம் இருப்பது உண்மை.
அடுத்ததாக, மோட்டார் வாகனங்கள் விற்பனை கடந்த ஓராண்டில் கணிசமாக குறைந்திருக்கிறது; சில லட்சம் தற்காலிக மற்றும் கேஷுவல் ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; பல பெரிய நிறுவனங்கள், அவர்களது உற்பத்தி நாட்களை குறைந்திருக்கின்றன போன்ற தகவல்களும் சரியானவையே.
அவற்றிற்கும் அடுத்தபடியாக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியான, ஜி.டி.பி. வளர்ச்சி, 2019-20 ஆண்டின் முதல் காலாண்டில், வெறும் 5 சதவீதம் என்கிற தகவல். இதுவும் சரியான தகவல்தான். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு, ஜி.டி.பி. வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது என்பது உண்மை.
மேலும், 2017 இறுதியில் தொடங்கி, 2019 ஜூன் மாதம் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருந்த இந்தியா, இப்போது ஒரு காலாண்டில் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி என்பதுடன் உலகில் ஐந்தாவது இடத்திற்கும் கீழே போய் விட்டது.
ஆக, தனிப்பட்ட முறை, கால அளவில் ஒப்பிட்டு முறை மற்றும் சமகாலத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும் முறை என்ற மூன்று வகைகளிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து இருப்பது உண்மை.
சீனாவுடனான வர்த்தக போர் மற்றும் பிற காரணங்களால் அமெரிக்காவில் தொடங்கி, சீனா, தைவான், சிங்கப்பூர் என பல நாடுகளிலும் 2020-ம் ஆண்டில் பொருளாதார சுணக்கம் வரலாம் என்று ஒரு சில அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் யூகிக்கிறார்கள். ஆகவே இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது.
எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது! ஏன் இப்படி இறகுமுகம்? என்று கேட்டால் அதற்கான பதில்களாக, மூன்றைச் சொல்லலாம். ஒன்று, பணமதிப்பு நீக்கம். இரண்டாவது ஜி.எஸ்.டி. வரி அறிமுகம். மூன்றாவது பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனில் தொலைத்த பல லட்சம் கோடி ரூபாய்கள். நம் நாட்டில் கணக்கில் வராத பணம் கணிசமான அளவு புழங்கிக்கொண்டிருந்ததும், இணை பொருளாதாரம் என்று சொல்லும் அளவில் பெரிதாக இருந்தது என்பதும் உண்மை.
பணமதிப்பு நீக்கம், மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பண பரிமாற்றம், ஆதார் அறிமுகம், பான் கார்டு எண் தரவேண்டிய கட்டாயம் போன்றவற்றாலும், அவை தடைபட்டு அல்லது குறைந்துபோய், கணிசமான பகுதியினரின் வியாபாரம் அழிந்திருப்பது நிஜம்.
அதே போல, மிகக் குறைந்த லாபங்களில் அல்லது நஷ்டங்களில் இயங்கிக்கொண்டு வந்த லட்சக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால், கூடுதல் செலவுக்கு தள்ளப்பட்டு, நஷ்டத்திற்கு உள்ளாகி நசிந்துவிட்டன.
ஜி.எஸ்.டி. வரி ஒரு அவசியமான சீர்திருத்தம் என்றாலும், நீண்ட காலத்தில் நாட்டின் வருமானத்திற்கு அது பலனளிக்கும் என்றாலும், இடைப்பட்ட காலத்தில், நிச்சயமாக அது சிறு குறு தொழில் முனைவோருக்கு பெரும் சிரமத்தை கொடுத்திருக்கிறது. பலரை காணாமல் போக செய்துவிட்டது. ஆகவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டிப்பாக குறைந்திருக்கும். அவற்றோடு சேர்ந்துகொண்டு, வாராக் கடன்கள், கடனுக்கு பணம் கிடைப்பதையும், நாட்டில் பணப் புழக்கத்தையும் குறைத்துவிட்டன.
காரணங்கள் எதுவாக இருந்தால் என்ன? இந்த நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. ஏதோ ஒரு காலாண்டில் குறைவு என்றால் சரி. வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைகிறபோது, அவசர மற்றும் போதுமான நடவடிக்கைகள் நிச்சயம் வேண்டும்.
சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டி, பள்ளத்தில் இறங்க தொடங்கும் நேரம் ஆட்கள் இறங்கி, தடுத்து நிறுத்தி, வண்டியை மேலே தள்ளிவிட வேண்டும். இது சாத்தியம். இதைச் செய்யத்தவறிவிட்டால், வண்டி பள்ளத்தில் இறங்கிவிடும். பின்பு அதை மீண்டும் சாலைக்கு ஏற்றுவது கடினம்.
தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்கிற வண்டி பள்ளத்தில் இறங்கப் பார்க்கிறது. அரசு கண்டிப்பாக தேவையானவற்றை செய்து, வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதே நேரம் பேராபத்து வருவது போல அச்சப்பட்டு முடங்கிக்கொள்ள வேண்டாம்.
எதிர் வரும் பண்டிகை காலத்தில் பி.எஸ் 6 என்ற புதிய தரக்கட்டுப்பாடு அந்த புதிய வகை வாகனங்கள் அறிமுகமாகி, மீண்டும் விற்பனை சூடுபிடிக்கும் என்கிற நம்பிக்கை சந்தையில் இருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறைக்கு அபோர்டபிள் ஹவுசிங் என்ற வகை வீடுகளுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 1.95 கோடி வீடுகள் என்ற இலக்கு இருக்கிறது. நாடு முழுவதும் நல்ல மழை பெய்திருக்கிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 99 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. இவையும் கவனிக்கத்தக்கவை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 100 என்ற இடத்தில், இந்த ஆண்டு 105. அதாவது ஐந்து சதவீத வளர்ச்சி. ஆமாம். 100 என்ற இடத்தில் 95 அல்லது 99 அல்ல. நூற்று ஐந்து. உள்நாட்டு உற்பத்தி மதிப்பு என்ற ஜி.டி.பி. முன்பெல்லாம் 100-ல் இருந்து 108 ஆக வளர்ந்தது. இப்போது முதல் காலாண்டில் 100-ல் இருந்து 105 என்ற அளவில் வளர்க்கிறது. வேகம்தான் குறைந்திருக்கிறதே தவிர, வளர்ச்சி இருக்கிறது. அரசு வேகமாக செயல்பட்டால் போதும்.
முன்பு, 2012-13 மற்றும் 2013-14 ஆகிய இரு நிதி ஆண்டுகளில், நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி இதேபோல 4.5 மற்றும் 4.7 சதவீதங்களாக குறைந்து போய், பின் அதிலிருந்து அடுத்த ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது. அதே போல் இப்போதும் மீண்டும் உயரும் வலு இந்திய பொருளாதாரத்திற்கு நிச்சயம் உண்டு.
கிராமபுறங்களில் வாங்குசக்தி, ஒட்டுமொத்த நுகர்வு, தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்தால் போதும். விரைந்து செய்யும் என நம்புவோம்.

Thursday, 27 December 2018
பருவநிலை மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும்...!

முனைவர் மா. திருநீலகண்டன், காரைக்குடி
இ ன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய தொழில் துறையினால் சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகின்றது என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வேளாண்துறை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்பு அடைகிறது, அதே வேளையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் துறையின் பங்கு மிக அவசியமாகும்.
மக்களின் தேவை மற்றும் பயன்பாடு கருதியே தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த நவீன உலகில் மின்சாரம் கார் மற்றும் மோட்டார் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆகவே நாம் மின்சாரம் மற்றும் மோட்டார் உற்பத்திச் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என கருதி அதன் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. ஏனென்றால் நவீன உலகில் மக்களின் தேவை மின்சாரம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நவீன பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி எந்த ஒரு நாடு அந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கேற்ப வளங்களை ஒதுக்கீடு செய்கிறதோ அங்குதான் பொருளாதார நலன் உருவாகும் என நம்புகின்றன.
மக்களின் பொருட்களின் தேவை மற்றும் பயன்பாடு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளினாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டினை பூர்த்திசெய்வதற்கு மட்டுமே. ஆகவே நாட்டு மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தொழிசாலைகள் தங்கள் உற்பத்தியினை நிறுத்த முடியும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது மனிதனின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள் மட்டுமே. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை உண்டாக்கும் பொருட்களின் மீது அதிக வரி விதிப்பதன் மூலமாக நாம் அதன் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது என்பதனை நவம்பர் 2018-ல் பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக நடைபெற்ற போராட்டங்கள் அறிவுறுத்துகின்றன. நாம் அதிக வரி விதித்தாலும் மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தொழிற்சாலை உற்பத்தியினைக் குறைத்துச் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் அல்லது தொழில்நுட்பத்தின் வாயிலாக மாற்று தேவையினை உருவாக்குவதன் மூலம் சரிசெய்ய முடியும்.
பருவநிலை மாற்றத்தினால் இயற்கை மற்றும் கனிம வளங்கள் பாதிப்பு ஏற்பட்டு அது வேளாண் மற்றும் தொழிற்துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் பேரிடர் காலங்களில் மின்சாரம், உற்பத்தி காரணிகள் அடிப்படைக் கட்டமைப்பு போன்றவை அழிந்து மூலதன சிதைவு ஏற்படுகிறது. மேலும் அக்காலக் கட்டத்தில் மக்களின் சேமிப்பு முழுவதும் செலவுகளாகவும் அத்தகைய செலவுகள் அனைத்தும் மறு கட்டமைப்புகளுக்கு அவசியப்படுகிறது. இதனால் பெரும் மூலதனத்தை மக்களும், அரசாங்கமும் இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் லாபம் குறைந்து, விலைவாசி உயர்ந்து, பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. ஆகவே பேரிடர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு திட்ட அறிக்கையில் அதிக தொகை ஒதுக்கீடு செய்வது அவசியமான ஒன்றாகும்.
வேளாண்துறையில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் வேளாண் உற்பத்தி பாதிப்பு விவசாயத் தற்கொலை போன்றவை நிகழ்கின்றன. பருவ நிலை மாற்றத்தினால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து கடல் நீமட்டம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அதி நவீன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றினால் மண் தன்மை மக்கி போவதும், சிறுகுறு விவசாயிகள் வேளாண் தொழிலை மட்டும் செய்வதால் அதிக கடன் மற்றும் நஷ்டம் உருவாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆகவே பருவநிலை மாற்றத்தினால் வேளாண் துறை பாதிப்பினை சமாளிக்க நதிநீர் இணைப்பு, வட்டியில்லா அரசு அமைப்புகளின் கடன், இடுபொருட்களுக்கு முழு அளவு மானியம், சந்தை உருவாக்கம், உயர் ரக விதைகள் மற்றும் நவீன தொழில் நுட்பம் கிடைக்குமாறு செய்வது மிக அவசியமான ஒன்றாகும்.
Thursday, 30 August 2018
அறம் வளர்த்த கோவில் பொருளாதாரம்
அறம் வளர்த்த கோவில் பொருளாதாரம்
டாக்டர் மா.பா.குருசாமி,
காந்திய பொருளியல் அறிஞர்
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது போன்ற கருத்துகள் நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக பழகி வருபவை. எப்போது கடவுள் பற்றிய கருத்து மனித உள்ளத்தில் தோன்றியது என்று தெரியாது.
ஆனால், அவன் வேட்டையாடி, மீன்பிடித்து காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவன் எவற்றை எல்லாம் கண்டு அஞ்சினானோ, அவற்றை எல்லாம் வணங்கினான் என்பது கருத்து. அப்படி முதல் வணக்கம் பெற்றது தீயாக இருக்கலாம் என்று கூறுபவர்கள் உண்டு.
மனிதன் ஆடு, மாடுகளை மேய்த்து இயற்கையை ஓரளவு அறிந்த நிலையில் வேளாண்மையை தொடங்கினான். நாடோடியாக, காடோடியாக அலைந்தவன் நிலைபெற்று வாழத்தொடங்கினான். ஊரும் வீடுகளும் தோன்றின. தான் வணங்கிய தெய்வத்துக்கு கோவில் கட்டினான். அறிவு வளர, வளர அவன் வழிபட்ட முறைகளிலும் மாற்றம் தோன்றின. சமயம் பிறந்தது. இது நீண்ட நெடிய வரலாறு.
தெய்வத்தை உள்ளத்தில் உணர்ந்து வழிபடுவது அக வழிபாடு. அது உயர்ந்த நிலை. கோவில் சென்று சடங்குகளோடும், மரபுகளோடும் வழிபடுவது புற வழிபாடு. இந்த புற வழிபாட்டுக்குப் பொருள் தேவை. இதன் வளர்ச்சி திருவிழாக்கள், தங்கத்தேர் போன்றவை.
இப்படித் தான் மக்கள் உணராமலேயே கோவில் பொருளாதாரம் தோன்றியது.
‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கிறார், வான்புகழ் கொண்ட வள்ளுவர். பொருள் இல்லார்க்கு இன்று பெருங்கோவில் வழிபாடோ, தீர்த்த யாத்திரையோ இல்லை. பொருள் இருப்பவர்களுக்கு கோவில் வழிபாட்டிலும் தனிச்சிறப்பு. கட்டணம் கட்டித்தான் சாமி தரிசனம் என்ற நிலையில் பொருளின் ஆதிக்கத்தை உணர்கிறோம்.
ஆனால், கோவில் பொருளாதாரத்தின் வேர்களும், விழுதுகளும் வேறுநோக்கில் அமைந்தவை. எல்லா மக்களும் தங்களுடைய சக்திக்கேற்ப உழைப்போ, பொருளோ வழங்கி கோவிலை உருவாக்கினர். அதாவது கோவில் சார்ந்த ஓர் அற உணர்வில் தோன்றிய பொருளாதாரம் இது.
கோவிலுக்கு பொன்னும் பொருளும் தருபவர்கள் உண்டியலில் போடுவது என்ற முறையின் உயர்ந்த நோக்கத்தை உணர வேண்டும். இதில் யார், எதை, எவ்வளவு போட்டார்கள் என்பது தெரியாது. அதில் போட்டது எல்லாம் பொதுவானது. அதை அறப்பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதை நிர்வகிப்பவர்கள் அறங்காவலர்கள்.
இடைக்காலத்தில் தான் கோவிலுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிப்பது, அவர்களுக்கு தனி மரியாதை செய்வது போன்ற பழக்கங்கள் தோன்றின. கோவில் வருவாயை பெருக்கும் உத்திகளையும் கண்டறிந்தனர்.
ஆதிகாலத்தில் சொத்துகளும், வருவாய்களும் கேட்காமலேயே கிடைத்தன. கோவிலில் வழிபாடு தொடர்ந்து நடைபெற அரசர்கள் மானியம் கொடுத்தனர், நிலங்கள் வழங்கினர். செல்வந்தர்கள் தங்கள் வளம் செழிக்க காணிக்கை போட்டனர். எல்லா மக்களும் இயன்றதை அளித்தனர். கோவிலின் வருவாயை வழிபாட்டு செலவுக்கு மேல் வந்த பணத்தை அறப்பணிகளுக்கு செலவிட்டனர்.
பல கோவில்களில் தர்மசாலைகள் செயல்பட்டன. பசித்து வந்தவர்களுக்கு புசிக்க உணவு அளித்தனர். பள்ளிகள் நடத்தினர். கலைகள் வளர்த்தனர். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினர். கோவில் திருவிழா என்றால் 3 நாட்கள், 10 நாட்கள் சிறப்பு வழிபாடு செய்ய, கண்டுகளிக்க, கொண்டாடி மகிழ தக்க வகையில் வழிவகை செய்வார்கள்.
இதற்கான பொருள் கணக்கின்றி வந்தது. கவனத்தோடு தன்னலமின்றி நிர்வகித்தனர். இது தான் கோவில் பொருளாதாரமாக, அறப்பொருளாதாரமாக வளர்ந்தது. இவற்றை எல்லாம் ‘கண்ணுக்குத் தெரியாத கை’ தோன்றா துணையாக இருந்து நிர்வகிப்பதாக மக்கள் நம்பினர்.
இன்றும் கிராமக் கோவில்களில் இந்த அறம் ஓரளவு செயல்படுகின்றது. திருவிழா என்றால் ஊர் மக்கள் எல்லோரும் வரி கொடுப்பார்கள். வசதியானவர்கள் நன்கொடை வழங்குவார்கள். கோவில் வழிபாட்டில் பாகுபாடு இருக்காது. சாமிக்கு படைப்பது எல்லோருக்கும் சமமாக கிடைக்கும். இது கோவில்கள் வளர்க்கும் சமத்துவ பொருளாதாரம்.
பொதுவாக இன்று சிறப்பு வாய்ந்த பெரிய கோவில்களும், வருவாய் மிகுந்த ஆலயங்களும் வளர்த்திருக்கின்ற பொருளாதாரம் வேறு. இது வாணிப பொருளாதாரமாக மாறிய நிலை. சில கோவில்களில் இருக்கும் பெருவாரியான சொத்துகளுக்கு கணக்கும் இல்லை, வழக்கும் இல்லை. எடுத்துக்காட்டாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய கோவிலின் நகைகள், பொருட்கள் இருக்கும் எல்லா அறைகளும் இன்னும் திறக்கப்படவில்லை.
இன்று நமது நாட்டில் கோவில்களிலேயே மிகுதியாக வருவாய் உள்ள கோவில் திருப்பதி தான். வரிசையில் நின்று மக்கள் கணக்கின்றி உண்டியலில் காணிக்கை செலுத்துவதை காணலாம். இறைவன் பற்றிய அச்சம் போய் விட்டது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோவிலை நிர்வகிக்கும் நிலை.
சமீபகாலமாக கோவிலில் உள்ள விலை மதிப்பற்ற சாமி விக்கிரகங்களும், ஆபரணங்களும், பிற பொருட்களும் காணாமல் போகின்றன. இப்படிப்பட்ட குற்றங்களை விசாரிக்க தனியாக போலீஸ் அதிகாரியை நியமித்து இருக்கின்றனர். சிலர் அகப்பட்டுள்ளனர். அறப் பொருளாதாரமாக தோன்றிய கோவில் பொருளாதாரம் சுரண்டல் பொருளாதாரமாகவும், கொள்ளை பொருளாதாரமாகவும் மாறி விடுமோ? என்ற அச்சம் தோன்றுகிறது.
மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கோவில் பொருளாதாரம் வழி மாறிப்போகிறது. கோவில்களை, சொத்துகளும் வருவாயும் நிறைந்த நிறுவனங்களாக பார்க்கும் வாணிபக் கண்ணோட்டம் வந்து விட்டது. கோவில் நிர்வாகிகளிடமும், ஊழியர்களிடமும் அது உண்மையாகிவிட்ட அவலத்தை காண்கிறோம்.
உண்மையில் கோவில்கள் வளர்த்தது, தனிவகை அறப்பொருளாதாரம். இது மக்களிடம் அன்பை வளர்ப்பது, அருளை உள்ளொளியாக வளர்ப்பது, கொடை கொடுக்கும் பணத்தை இறை நம்பிக்கையின் அடிப்படையில் நமது முன்னோர்கள் வளர்த்தார்கள்.
‘அந்த அறப்பொருளாதாரத்தை மீட்டு வளர்ப்போம்’. அது நம்மை மட்டுமல்ல உலகைக் காக்கும்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
பெண்ணுரிமை போற்றிய பல்துறை வித்தகர் திரு.வி.க. பேராசிரியை பானுமதி தருமராசன் திருவாரூர் விருத்தாசல முதலியாரின் மகன் திரு.வி.கல்யாணசுந்...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வ...
-
காலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பேராசிரியர், முனைவர் பி.யோகீசுவரன் தமிழ்க் கவிஞர்கள் கூட்டத்தில் முதன்மையானவர் கவிமண...
-
'நீட் ' இனி என்ன செய்யும்? 'நீட் ' தேர்வு (National Eligibility Cum Entrance Test - NEET) நெடுவாசலை போன்று முக்கிய...