ஆக்கி (Hockey)
மைதானத்தில் விளையாடும் ஆட்டங்களில் ஒன்று ஆக்கி விளையாட்டு ஆகும். தரையில் விளையாடும் ஆக்கி பீல்டு ஆக்கி என்று அழைக்கப்படும். இது போல பனிக்கட்டி தரையில் ஆடும் ஆட்டம் ஐஸ் ஆக்கி எனப்படும். பீல்டு ஆக்கி எனப்படும் தரையில் ஆடும் ஆக்கி ஆட்டம் குறித்த தகவல்களை காண்போம்.
ஆக்கி விளையாட்டு, மிகவும் பழமையான ஆட்டங்களில் ஒன்று. எகிப்து நாட்டில் கிடைத்த குகை ஓவியங்களில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்த விளையாட்டை ஆடியிருக்கிறார்கள். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டு இருந்துள்ளது. இருப்பினும் தற்போதுள்ள நவீன ஆக்கி விளையாட்டு 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து பள்ளிகளில் ஆடப்பட்டதாகும். அப்போதுதான் ஆக்கி விளையாட்டு குறித்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டது.
சர்வதேச அமைப்பு
1920-ம் ஆண்டுகளில் 7 ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச ஆக்கி சம்மேளனம் என்ற அமைப்பை உருவாக்கின. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவில் ஆக்கி விளையாட்டு பிரபலமாக இருந்தது. 1885-ம் ஆண்டே இந்தியாவில் ஆக்கி கிளப்புகள் தொடங்கப்பட்டு விளையாடப்பட்டுள்ளது. 1920-ம் ஆண்டுகளில் இந்தியா சர்வதேச ஆக்கி போட்டிகளில் கலந்துகொண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வென்றது. 1928-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மிகப்பெரிய மாற்றங்களை இந்திய ஆக்கி அணி ஏற்படுத்தியது. ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆறு முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அளவுக்கு இந்திய ஆக்கி அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்று இருந்தார்கள். 1960- ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் ஆகும் வரை இந்திய ஆக்கி அணியின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 1964-ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
சாதனை வீரர்கள்
இந்திய ஆக்கி அணியின் புகழ்பெற்ற வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் தயான் சந்த். இவர் தனது ஆட்ட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இவரது சகோதரர் ரூப் சிங். இவர்கள் இருவரும் இணைந்து எதிரி அணியின் வியூகங்களை உடைத்து கோல் போடுவதில் வல்லவர்கள். பந்தை இவர்கள் மின்னல் வேகத்தில் கடத்திச்சென்று எதிர் அணியை திணறடிப்பதில் கில்லாடிகள்.
பல்பீர் சிங், உதாம் சிங், லெஸ்லீ கிளாடியஸ், கே.டி. சிங் பாபு, அஜித்பால் சிங், சுர்ஜித் சிங், மெர்வின் பெர்னாண்டஸ் மற்றும் முகம்மது சாகித் ஆகிய சிறந்த ஆக்கி வீரர்களும் இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்.
இவர்களில் உதாம் சிங் மற்றும் கிளாடிஸ் இருவரும் 4 ஒலிம்பிக்போட்டிகளில் ஆடிய பெருமைக்குரியவர்கள். பின்னாளில், இந்திய ஆக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஆக்கி விளையாட்டின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஆதிக்கமே கோலோச்சி இருந்தது. பின்னர் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஆலந்து போன்ற நாடுகளும் ஆக்கி விளையாட்டில் சாதனை படைக்கத்தொடங்கிவிட்டன. இந்த வரிசையில் புகழ்பெற்ற பிற நாட்டு வீரர்கள் பெயர் வருமாறு:-
சமியுல்லா, அக்தார் ரசூல், ஷாபாஸ் அகமது, தன்வரு் தார், ஷானாஸ் ஷேக், ரிக் சார்லஸ்ஒர்த், டெர்ரி வால்ஸ், பாரி டான்சர், டீஸ் குரூயிஸ், பால் லிட்ஜன்ஸ் மற்றும் போவ்லேண்டர்.
Friday, 21 December 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்ற...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வ...
No comments:
Post a Comment