மரபணுக்களை திருத்த முடியும்

பல்வேறு நோய்களுக்கும், குறைபாடு களுக்கும் மரபணுக்களே காரணமாக இருக்கின்றன என்பது எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த மரபணுக்களை மாற்றியும், வளர்ச்சி அடைய வைத்தும் மரபணு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெகுசில வியாதி களுக்கே மரபணு சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மரபணு மாற்று சிகிச்சையில் பல்வேறு பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் மரபணுக்களில் திருத்தம் செய்வது இதுவரை இயலாத காரியமாக இருந்து வந்தது. தற்போது முதல் முறையாக மரபணுக்களை மாற்றுவதற்குப் பதிலாக உடலுக்குள்ளேயே திருத்தம் செய்யும் முயற்சியில் முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், கிரிஸ்பர் எனும் மரபணு மாற்ற முறையில் ஒரு ஊசியை எலியின் மரபணுவில் செலுத்தினர். அது நிறம் மாறி மருந்து வேலை செய்வதை காட்டியது. இதனால் மரபணுக்களை திருத்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. மரபணுக்களை அகற்றிவிட்டு புதிய மரபணுக்களை உள்ளே செலுத்தும்போது உடல் ஏற்றுக்கொள்ளாத பிரச்சினை, ஆய்வக சூழலில் மரபணுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக அமையப்போகிறது இந்த மரபணு திருத்த முறை.

Comments