Saturday 22 December 2018

‘ஓவர்டிராப்ட்’ வசதி பற்றித் தெரியுமா?

மாதச் சம்பளத்தையே நம்பியுள்ள சம்பளதாரர்கள், திடீரென ஏற்படும் செலவு களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போவார்கள். அவர்களுக்குக் கை கொடுப்பதுதான், ‘ஓவர்டிராப்ட்’ வசதி. பல வங்கிகள் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளக் கணக்கின் மூலம், ‘ஓவர்டிராப்ட்’ எனப்படும் குறைந்த காலக் கடனை வழங்குகின்றன. சரி, எப்படி சம்பள ஓவர் டிராப்ட் சேவையைப் பெறுவது? நீங்கள் வேலை பார்க்கும் நிறு வனம் ஓவர்டிராப்ட் சேவைக்காக வங்கி நிறுவனத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கும்போது சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடன் பெறலாம். இல்லை என்றால் சம்பளக் கணக்கை வைத்துள்ள வங்கி கிளைக்குச் சென்று ஓவர்டிராப்ட் சேவையைப் பெறலாம். பொதுவாக வங்கிகள் இந்தச் சேவையை அளிக்கச் சிறு கட்டணத்தை விதிக்கும். ஓவர்டிராப்ட் மூலம் எவ்வளவு கடன் பெற முடியும்? ஓவர்டிராப்ட் மூலம் கடன் பெறக்கூடிய தொகை உங்களது மாதச் சம்பளத்தைப் பொருத்தும், வங்கி நிறுவனங் களைப் பொருத்தும் மாறும். சில வங்கிகள் மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை மட்டுமே ஓவர்டிராப்டாக அளிக்கும். சில வங்கிகள் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 4 லட்சம் ரூபாய் ஓவர்டிராப்ட் மூலம் கடனாக அளிக்கின்றன. அது மட்டும் இல்லாமல், சில நிதி நிறுவனங்கள் செயலிகள் மூலமாக ஊழியர்களின் விவரங்களைப் பெற்று சம்பள அட்வான்ஸ் என்ற பெயரில் கடனை அளிக்கின்றன. ஓவர்டிராப்டுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? ஓவர்டிராப்ட் என்பது கடன் பெறுவது போன்ற ஒரு சேவை என்பதால் 15 முதல் 30 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும். இது தவணை மற்றும் கிரெடிட் ஸ்கோரை பொருத்து மாறும். தனிநபர் கடன் போன்றவற்றைப் பெற்ற பிறகு தவணைக் காலத்துக்கு முன்பே திருப்பிக் கட்ட முயன்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஓவர்டிராப்ட் சேவை மூலம் கடன் பெறும்போது முன்கூட்டியே செலுத்த முயன்றால் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அவசரத்துக்காக ஓவர்டிராப்ட் சேவை மூலம் கடன் பெறும் நாம், அடுத்த மாத சம்பளத்திலேயே திருப்பிச் செலுத்தி விடக்கூடிய தொகையாகப் பெற முயல்வது நல்லது.

No comments:

Popular Posts