Saturday, 22 December 2018

20. ‘போர்’ புரிவோம்

வேட்டையாடி உண்டு வாழ்ந்த மக்கள் எல்லோரும் உயிர் வாழவில்லை. பலரும் செத்து மடிந்தார்கள். தொடர்ந்து உயிர் வாழவே போர் புரிய வேண்டும். அதில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும். வறட்சி, பசி, நோய், விலங்குகள், எதிரிகள் என்று எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும் சாமர்த்தியமாகத் தப்பித்த இனம் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அவர்களே அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். ‘உயிர் பிழைக்க போராட்டம், அதில் தகுதியானவர் பிழைத்துக்கொள்வார்’ என்ற கோட்பாடுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை என்பது சார்லஸ் டார்வின் சொன்னது. இந்தத் தத்துவம் கூட அவருக்கே உரியது அல்ல. மால்தூஸ் என்ற பொருளாதார அறிஞரின் கோட்பாடு. உணவு உற்பத்தி சாதாரணமாகப் பெருகும். ஆனால் மக்கள் பெருக்கம் அசாதாரணமாக இருக்கும். உணவுக்கு கடுமையான போட்டி நிலவும். உயிர் பிழைக்கவே மனிதர்கள் திண்டாடுவார்கள். உணவுப் போராட்டத்தில், வலிமையானவன் உணவைத் தட்டிப் பறிப்பான், அவன் பிழைத்துக்கொள்வான் என்பது மால்தூசின் வாதம். ‘தகுதியுள்ளவன் தப்பித்துக்கொள்வான்’ என்ற கோட்பாடு, இன்றைய நாகரிக உலகுக்கும் சரியாகப் பொருந்தும். இது நியாயமான நிலை இல்லை என்றாலும், இதுதான் நிதர்சனம் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். அன்று வலிமை மிக்க மனிதர்கள் ஆயுதம் ஏந்திப் படையெடுத்துச் சென்று பிற நாட்டு மக்களை அடிமைப்படுத்தி பெரும் நிலப்பரப்பை ஆண்டார்கள். ஆனால் நவீன ‘பலசாலி’ அதைச் செய்ய மாட்டான். அவன் பெரிய நிறு வனங்களைக் கட்டி எழுப்புவான். அதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, மாட மாளிகைகளில் வாழ்ந்து, ஜெட் விமானங்களில் பறந்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆள்வான். இவனது ஆண்டு வருமானம், சாதாரண மனிதனின் வருமானத்தை விட லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரின் சொத்து மதிப்பு இரண்டரை லட்சம் கோடி ரூபாய். இவர்கள் எப்படி இவ்வளவு பணம் குவித்தார்கள், தனி விமானம் போன்ற வசதியெல்லாம் எப்படி வந்தன என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இவர்களுக்கும், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உடல் வலிமை மிக்க மனிதன் அரண்மனைகளையும், அதில் பெருஞ்செல்வத்தையும், படை களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து மகிழ்ந்ததற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா என எண்ணிப் பாருங்கள். இதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவ விரும்புகிறான். பலரையும் தனது அதிகாரத்துக்கு உட்படுத்தி ஆளவும், வாழவும் ஆசைப்படுகிறான். ஒரு பெரிய பதவியில் அமரச் சிலர் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை கண்களைத் திறந்து பாருங்கள். அதற்காக அவர்கள் பல கோடி ரூபாய்களைக் கொட்டவும், யார் காலிலும் விழவும் தயார் என்றால், அதிகாரம் எப்படிப்பட்டது என யோசித்துப் பாருங்கள். அதிகாரம் மிகப் பெரியது என்றார், சட்ட மேதை அம்பேத்கார். பெருஞ்செல்வத்தின் மீது அமர்ந்திருப்பவர்கள் எல்லாம், உணவில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழைகளையும், நலிந்துபோன விவசாயிகளையும் ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? அப்படி நினைத்துப் பார்த்திருந்தால் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைக் கொண்டுபோய் பதுக்கியிருப்பார்களா? மாட்டார்கள். இதிலிருந்தே ஒன்று புலனாகிறது. பண்டைய மனிதனின் சுயநலமும் அதிகார ஆசையும் இன்றைய மனிதனிடமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உலக வாழ்க்கை, அன்றைக்குப் போல இன்றும் ஒரு போர்க்களமாகத்தான் இருக்கிறது. இது நவீன போர்க்களம், ஒரு நாகரிகமான போர்க்களம், அவ்வளவுதான். இதில் போர்க்கள விதிகளை உணர்ந்த வனுக்கு மட்டுமே வாழ்க்கை வசமாகும். போராடத் தயங்குபவனும், எதுவும் புரியாமல் அப்பாவியாக நிற்பவர்களும் அதிக காலம் நீடிக்காமல் வீழ்வார்கள். இந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்து உங்களை எச்சரிக்கை செய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்காகவே வாழ்கிறார்கள், உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்காக உலகில் அனைவரும் அப்படித்தான் என்று நம்பிவிடாதீர்கள். நீங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டு, உங்கள் வாழ்க்கையை வாழ முற்படும்போது, இரக்கமற்ற ஒரு கடுமையான உலகம் காத்துக்கொண்டிருக்கும். அங்கே நீங்கள் சீண்டப்படலாம், ஏமாற்றப்படலாம், காயப் படுத்தப்படலாம், அவமானப்படுத்தப்படலாம், தோல்வியை நோக்கித் தள்ளப்படலாம். உங்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தப் போவது காட்டில் வாழும் புலியோ, யானையோ, விஷப்பாம்போ அல்ல. உங்களின் சக மனிதர்களே. அவர்கள் உங்கள் நண்பர்களாக, உறவினர்களாகவும் இருக்கலாம். எனவே இந்தத் தருணத்தில் மனிதர்களின் அடிப்படைத் தன்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 1. மனிதர்கள் எல்லாம் பொதுநலவாதிகள் அல்ல. அவர்கள் உங்களுக்காக வாழவில்லை, அவர்களுக்காகவே வாழ் கிறார்கள். பொதுநலம் சிலவேளைகளில் சிலரிடம் இருக்கும். 2. ஒருவருடன் பழகும்போது, இதனால் நமக்கு என்ன நன்மை என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். சிலவேளைகளில் சிலர் எந்த லாபநோக்கமுமின்றி உதவி செய்கிறார்கள். 3. எப்படிச் செய்தால் காரியம் கைகூடுமோ, அப்படியே மக்களின் செயல்பாடுகளும் இருக்கும். 4. ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஓர் அங்கீகாரத்தைத் தேடுகிறான். அது கிடைக்காதபோது அல்லல்படுகிறான். 5. நீங்கள் யார், உங்களிடம் இன்று என்ன இருக்கிறது என்பதை வைத்தே உங்களுக்கு மரியாதை கிடைக்கும். உங்களது எதிர்கால சாதனைகளை வைத்து அல்ல. 6. உயர்ந்த இடத்தில் இருக்கும்போது நீங்கள் யார் என்பதை நண்பர்கள் புரியவைப்பார்கள். உங்களுடைய நிலைமை இறங்கி வந்தபிறகு, நண்பர்கள் யார் என்பது உங்களுக்குப் புரியும். 7. மூழ்கும் கப்பலில் முதலில் வெளியேறுவது, அன்றுவரை தானியங்களை தின்று பெருத்த பெருச்சாளிகள்தான். உங்களிடம் அதிகாரம் இல்லை என்றால், உங்களுக்கு மிகவும் நெருக்கமானவன் முதலில் உங்களைக் கைவிடுவான். 8. ஒவ்வொரு மனிதனும் ஒரு முகமூடி அணிந்திருக்கிறான். பொய் முகத்தைக் காட்டி நம்ப வைப்பவர்களை நீங்கள் அடிக்கடி சந்திப்பீர்கள். வாழ்க்கைக்குத் தயாராகும் நீங்கள், மனிதர்களை ஏன் இவ்வளவு மோசமாகச் சித்தரிக்க வேண்டும்? நாமெல்லாம் அப்படிப்பட்டவர்களா எனக் கேட்கக்கூடும். இப்போது உங்களுக்கு அறிவுரை வழங்கும் மகான்கள் எல்லாம் மனிதனின் உயர்வான குணங்களையே போதிப்பார்கள். தங்களையும் உத்தமர்கள் என்றே தம்பட்டம் அடிப்பார்கள். வெளிவேஷம் போடும் அவர்கள் எல்லாம் பேராசைப் பிசாசுகள் என்பது அவர் களது சொத்துப் பட்டியலைப் பார்த்தால்தான் புரியும். ஆனால், இளைஞர்களாகிய உங்களிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும். சில கசப்பான உண்மைகளை உணர்த்த வேண்டும். மனிதரில் நல்லவர்களும் உண்டு, தீயவர்களும் உண்டு. தீயவர்களே இல்லை என்றால், போலீஸ் துறை எதற்கு, கோர்ட்டுகள் எதற்கு? எல்லோரையும் நல்லவர் எனக் கருதி ஏமாந்தபிறகு வருத்தப்படுவதை விட, பாதுகாப்பாக இருக்கவே இந்த எச்சரிக்கை. வாழ்க்கை என்பது போர். சிலவேளைகளில் நமக்கு வெற்றி. சிலவேளைகளில் நமக்குத் தோல்வி. சிலவேளைகளில் நமக்குப் படுகாயம். ஆனால் இறுதியில்... வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் நாம் போர்புரிந்திருக்க வேண்டும். ‘போர்க்களம்’ எப்படி இருக்கும், எதிரிகள் யார் யார், நீங்கள் எந்த தற்காப்புக் கேடயத்தையும், எந்த ஆயுதத்தையும் ஏந்த வேண்டும்,

No comments:

Popular Posts