Saturday 22 December 2018

வீட்டு மனை வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்க முடிவு செய்யும் பட்சத்தில் வழக்கமான அம்சங்களை சரிபார்ப்பதுடன் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டால் பல சிக்கல்களை தவிர்க்க இயலும் என்று ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய விவரங்கள் வருமாறு :

1) வீட்டு மனை அமைந்துள்ள தெரு அல்லது சாலையின் பெயர், கிராமம், நகரம், தாலுகா மற்றும் மாவட்டம்.

2) இடத்தின் புல எண் அதாவது ரெவின்யூ சர்வே எண் மற்றும் மனையின் பரப்பு.

3) மனைப்பகுதி மண்ணின் தன்மை செம்மண், கரிசல்மண், களிமண் அல்லது பாறை.

4) மனை அல்லது அதற்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகிவற்றிலிருந்து பெற்ற நீரின் தன்மை.

5) மனைக்கான எல்லை கற்கள் மற்றும் அவற்றில் உள்ள குறியீடுகள்.

6) வீட்டு மனைக்கு அருகில் செல்லும் குறைந்த அல்லது உயர் அழுத்த மின்சார கம்பிகளின் வழித்தடம்.

7) இடம் அல்லது மனையில் முன்னதாகவே அமைந்துள்ள வீடு, இதர கட்டமைப்புகள் மற்றும் கிணறு ஆகியவை இருந்தால் அவற்றின் மின் இணைப்பு.

8) மனைப்பகுதிக்கு அருகில் உள்ள இடுகாடு, அரசு அல்லது நீதிமன்ற அறிவிப்பு பலகை.

9) அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள மனைகளின் எண்ணிக்கை.

10) மனைக்கு சொந்தக்காரர் மற்றும் வாரிசுகள் இருந்தால் அவர்கள் குறித்த தகவல்கள்.

11) மனையின் சந்தைமதிப்பு மற்றும் அரசு வழிகாட்டு மதிப்பு

12) அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவாக இருந்தால் உள்ளாட்சி மன்ற தீர்மானத்தின் நகல்.

13) டி.டி.சி.பி அல்லது மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் மூலம் பெறப்பட்ட தொழில் நுட்ப அனுமதி.

14) அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபட நகல் மற்றும் அசல் ஆகியவற்றின் ஒப்பீடு.

15) மனைப்பிரிவுக்கான அணுகுபாதை மீது மனையின் சொந்தக்காரருக்கு உள்ள உரிமை.

16) அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு எல்லை கோட்டிற்கும் பிரதான சாலைக்கும் இடையே தனியார் இடம் அல்லது நீர் வழிப்பாதை அமைப்பு.

No comments:

Popular Posts