Saturday 22 September 2018

அறிவியல் சாதனையாளர் மைக்கேல் பாரடே

அறிவியல் சாதனையாளர் மைக்கேல் பாரடே மைக்கேல் பாரடே வித்யா வெற்றிச்செல்வன் இன்று (செப்டம்பர் 22-ந் தேதி) விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்தநாள். அறிவியலில் பல புதுமைகளை படைத்த மைக்கேல் பாரடே 1791-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள நியூவிங்க்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை ஜேம்ஸ் பாரடே. ஏழ்மை காரணமாக மைக்கேல் பாரடே தனது பள்ளிப்படிப்பை 14 வயதில் நிறுத்த வேண்டியதாயிற்று. அப்போது பிரபலமாக இருந்த வேதியியல் விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியிடம் உதவியாளராக சேர்ந்தார்.தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆய்வுக்கூட சோதனைச் சாவடிகளில் பொருட்களை சூடாக்குவதற்கு பயன்படும்‘பன்சன் சுடர்’அடுப்பின் ஆரம்ப வடிவத்தை கண்டுபிடித்தவர் பாரடே. 1831-ல் காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தியாகிறது என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார். இதன் அடிப்படையிலேயே பின்னாளில் மின்சார ஜெனரேட்டர்கள், டிரான்ஸ்பார்மர்கள் உருவாக்கப்பட்டன. மின் ஏற்புத்திறன் என்பதை பாரடே நினைவாக பாரட் எனும் அலகால் அளக்கிறோம். பாரடேவின் மின்காந்த தூண்டல் விதி இல்லையெனில் இன்று எந்த மின்சாதனமும் இல்லை. மைக்கேல் பாரடே காந்தப்புலனும்மின்சாரமும் எத்தகைய தொடர்புடையவை என நிரூபித்திருக்காவிட்டால் பீல்டு தியரி என்று அழைக்கப்படும் மின்சார கோட்பாடு இல்லை. உலகின் முதல் மின்சார டைனமோவை கண்டுபிடித்தவர்பாரடே. வாயுக்களை முதலில் திரவமாக மாற்றியவரும் இவர்தான். எளிய மனிதர்களும் புரிந்து கொள்ளும்படி அறிவியலை எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு அவருடைய “மெழுகுவர்த்தியின்வேதியியல் வரலாறு” என்ற புத்தகம் மிகச் சிறந்த சான்று. இன்று வரையில் பாரடே விளைவு தான் மூலக்கூறுகளின் வடிவத்தை விளக்கப் பயன்படுகிறது. இதுமட்டுமல்லாது எக்கில் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார். மேலும் பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். இவை தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் அறிஞர் என்று பெயர் பெற்ற மைக்கேல் பாரடே, 1867-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி தன்னுடைய 76-வது வயதில் காலமானார்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts