உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966

உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966 | உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை நிறுவனரான டிஸ்னி (தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966 உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை நிறுவனரான டிஸ்னி (தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் 59 ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளையும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு ஆஸ்கார் விருதை வென்றது உலக சாதனைப் படைத்தார். ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார். புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.


Comments