Monday 9 September 2019

ரோபோ நண்பனின் தேவை

இன்று நமது தேவைகளை விரல் நுனியில் நிறைவேற்றித் தர செல் போனும், இணையமும் உதவுகின்றன. எதிர்காலத்தில் நமக்கு சிறந்த பாதுகாப்பாளராக, உதவியாளராக இருக்கப்போவது நிச்சயம் ரோபோக்கள்தான். எந்த வகையான ரோபோக்கள் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது என்பது பற்றி ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு விவரம் இங்கே...

இதுவரை பயன்பாட்டில் உள்ள ரோபோக்கள், அதன் பயன்பாட்டின் அடிப்படையில் 3 விதமாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை...

1. வர்த்தக ரோபோக்கள் (தொழிற்சாலை உற்பத்தி பிரிவில் பயன்படும் பலவகை ரோபோக்கள் இந்த வகையைச் சேர்ந்தவை)

2. சமூகசேவை ரோபோ (கைகள், கால்கள் மற்றும் உறுப்புகளாகவும், மக்கள் தொடர்புசேவையிலும் ஈடுபடுத்தப்படும் ரோபோக்கள் இந்த வகையிலானவை)

3. நண்பன் ரோபோக்கள் (தனிநபருக்கு உதவும் வகையில் மனித வடிவில் உருவாக்கப்படும் ரோபோக்கள்)

* உணவு விடுதிகளில் 18 முதல் 50 வயதுடையவர்களை ரோபோவிடம் உணவு ஆர்டர் கொடுக்கச் சொன்னபோது கிடைத்த ஆய்வு முடிவின்படி, “40 சதவீதம் பேர், ரோபோக்களுடன் நட்பு ரீதியாக உரையாட முடிந்ததாகவும், திருப்தியான சேவை கிடைத்ததாகவும்” கூறினர்.

* வர்த்தக ரோபோக்களைவிட, நட்புடன் பழகும், தேவைகளை நிறைவேற்றும் திறன்மிக்க ரோபோக்களை 67 சதவீதம் பேர் விரும்புவதாக தெரியவந்துள்ளது. மனித வடிவில் துணைவனாக வரும் ரோபோக்கள் வரவை மக்கள் விரும்புவது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.

* எந்திர கைகள், கால்களாக வரும் சமூக ரோபோக்கள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவையில் ஈடுபடும் வர்த்தக ரோபோக்களைவிட உதவியாள் ரோபோக்களுக்கே மக்களிடம் 4 மடங்கு எதிர்பார்ப்பு உள்ளது.

* கட்டளைப்படி பணி செய்யும் ரோபோக் களைவிட உரையாடல் மூலம் உணர்வுப் பரிமாற்றத்துடன் கூடிய ரோபோக்கள் பெரிதும் விரும்பப்படுகிறது.

* ரோபோக்களானது வழக்குமொழி மற்றும் ஈமோஜிகளாக உணர்வுகளை பிரதிபலித்தால் இன்னும் நல்லது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய தனியார் ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று இது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டது.

No comments:

Popular Posts