தமிழ் வளர்ச்சியும் அதற்கான முயற்சியும்...!
பேராசிரியர் க.குருநாதன்,
செம்பனார்கோயில்
த மிழ் வளர்ச்சி குறித்து நாமும் பேசுகிறோம். தொடர்ந்து குரல் கொடுத்து, கொடிபிடித்து, ஊர் கூடித் தேரிழுக்கும் உன்னத லட்சியத்தை மறந்து எப்போதாவது மட்டுமே இடைவரும் ‘பேசு பொருளாக’ அல்லது கொஞ்சிக் குலவுவதற்கென்றே வளர்க்கப்படும் ‘செல்ல பிராணியாக அவ்வப்போது தமிழ் வளர்ச்சி குறித்து ஆதங்கப்படும் ஒரு பாசாங்கு சமூகமாகவே உள்ளது தமிழ் சமூகம். குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது சிலருக்கு தமிழ் முழுமையாகவே மறந்து போகிறது.
லோகேஷ், விகேஷ், பிரனேஷ் இப்படிப் போகிறது, நம் தமிழ்க் குழந்தைகளின் திருநாமங்கள். கம்பன் காலத்திலிருந்து இன்று வரை தமிழறிஞர்கள் ஒருவரை யொருவர் கசப்புடனும் காழ்ப்புணர்வோடும் பார்ப்பதை கைவிடவில்லை. வீதிக்கு வீதி தமிழ் அமைப்புகள், பேரியக்கம், சோலை, பட்டறை எனும் பெயர்களில் மிளிர்கின்றன. ‘தனி மரமே தோப்பாகும்’ எனும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வரும் விகார குழுக்கள் இவை. பரப்பளவில் சென்னையை விட சிறியதான சிங்கப்பூரில் ஆங்கிலம், மலாய், மாண்டரின்(சீனம்), தமிழ் நான்கும் ஆட்சி மொழிகள். ஐரோப்பாவின் குட்டி நாடான பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் மூன்றும் ஆட்சி மொழிகள். 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரொமானிஷ் என நான்கும் ஆட்சி மொழிகள். 120 கோடி இந்தியர்களுக்கு இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் திணிக்கும் முயற்சி தொடர்கிறது. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது? 1950-ல் ராஜஸ்தான் மாநில அரசு ஓர் அவசரச்சட்டம் இயற்றி ராஜஸ்தானியை நீதி மன்ற ஆட்சி மொழியாக்கிட குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது. 18 நாள்களில் ஒப்புதல் கிடைக்கப் பெற்று ராஜஸ்தானி அம்மாநிலத்தின் ஆட்சி மொழியாயிற்று . இதே போன்று. 1969-ல் உத்தரப்பிரதேசம், 1971-ல் மத்தியப்பிரதேசம் 1972-ல் பீகார் தங்கள் தங்கள் மாநில மொழிகளை உயர் நீதிமன்ற ஆட்சி மொழிகளாக்கி விட்டன. தமிழர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தமிழ் எப்போது உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாகும்? 43 மொழிகளுக்கு தாயாக இருக்கிறது தமிழ்மொழி! செனகல் மொழியில் 21 சதவீத தமிழ் சொற்கள். இந்த மாபெரும் பெருமைகள் நிலைத்திட நாம் என்ன செய்யவேண்டும்? நவீன தேவைகளுக்குரிய கலைச் சொற்களைக் கொண்டு தமிழில் புதிய அகராதிகள் வெளிவரவேண்டும். பிற மொழி சொற்களை குறிப்பாக ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்ப்பதை விடுத்து சொல்லின் பொருள் பயன் சார்ந்த புது சொற்களை உருவாக்கிடல் வேண்டும். அச் சொற்கள் எளிமையானவையாக இருத்தல் வேண்டும். ஒரு பொருளை அடையவேண்டுமெனில் முதலில் அதை விரும்ப வேண்டும். நல்ல உணவை ரசித்து, ருசித்து உண்பது போல் தாய் மொழியின் செழுமையை, மாண்பினை, பேச்சில், எழுத்தில் கையாளவும் வேண்டும். முடிந்தவரையில் பிறமொழிச் சொற்களை பேச்சிலும், எழுத்திலும் தவிர்த்தல் வேண்டும். குழந்தைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை அன்பாக உணர்த்திப் புரிய வைக்கவேண்டும்.
எந்த அந்நிய மொழியைப் படித்தாலும் ஒவ்வொரு சொல்லையும் தாய்மொழியில் உள்வாங்கி மொழி பெயர்த்து தானே புரிந்து கொள்கிறோம். இதனை மனதில் இருத்தல் வேண்டும்.யுனெஸ்கோவின் ஆய்வுகள் கூறுவது, இன்று உலகில் உள்ள பயன்பாட்டு மொழிகள்: 7105 இந்தியாவில் உள்ள மொழிகள் 880. உலகஅளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்து போக வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் 8-வது இடத்தில் உள்ளது.
தமிழ் மொழியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பவை, சொந்த மக்களால் புறக்கணிக்கப் படுதல். ஆதிக்க மொழிகளால் (அவை சிறுபான்மை மக்களால் பேசப் பட்டாலும்) நசுக்கப்படுதல், பயன்பாடின்றி ஒதுக்குதல் மற்றும் தாய்மொழியை தாழ்த்திப் பேசுதல் என்பதாம்.குறைகளைக் களைந்து, நிறைவை நோக்கிப் பயணப்படுவோம். சிந்தனை செம்மைப்பட்டால், செயல் அதன் அடி தொடரும். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment