Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சிபில் ஸ்கோர்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்


தனிநபர்களின் நிதிநிலை வரலாற்றைக் கணக்கிடும் சிபில் ஸ்கோர் குறித்துப் பல தவறான கருத்துகள் இன்றும் நிலவுகின்றன. இந்தக் கட்டுக்கதைகளில் உள்ள உண்மைகளைப் பார்ப்போம்.

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் என்பது ஒருவரின் கடந்த கால நிதி நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று இலக்க எண் ஆகும். இது பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் அல்லது கடன் அட்டையை வழங்குவதற்கு முன்னர், இந்த ஸ்கோரைப் பார்த்துதான் ஒருவருக்குக் கடன் வழங்கலாமா என்பதைத் தீர்மானிக்கின்றன.

நல்ல சிபில் ஸ்கோரின் அவசியம்

650 அல்லது அதற்கு மேல் உள்ள சிபில் ஸ்கோர் பொதுவாக நல்ல ஸ்கோர் எனக் கருதப்படுகிறது. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், குறைந்த வட்டியில் விரைவாகக் கடன் பெற முடியும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், அதிக வட்டிக்குக் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிபில் ஸ்கோர் குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்:
கட்டுக்கதைஉண்மை
சிபில் ஸ்கோரைச் சோதித்தால் அது குறைந்துவிடும்.தனிநபர்கள் தங்கள் சிபில் ஸ்கோரை அவ்வப்போது சோதித்துப் பார்க்கலாம்; அது அவர்களின் நிதிநிலை வரலாற்றில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடன் வழங்கும் நிறுவனங்கள் அடிக்கடி சோதித்தால்தான் (அதிக கடன் விண்ணப்பங்கள்) சிபில் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.
குறைந்த வருவாய் இருந்தால் சிபில் ஸ்கோர் குறையும்.சிபில் ஸ்கோர் என்பது வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வரலாற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் மாத வருவாய் சிபில் ஸ்கோரில் எந்த வகையிலும் கணக்கிடப்படாது. அதிக வருவாய் இருந்தும் கடனைத் தவறாமல் செலுத்தினால் ஸ்கோர் குறையலாம்.
செயலி மூலம் வாங்கும் சிறு கடன்கள் சிபில் ஸ்கோரில் இடம்பெறாது.இது தவறு. செல்போன் செயலிகள் மூலம் வாங்கும் சிறு கடன்கள் (Buy Now Pay Later உட்பட) ஒருவரின் கடன் வரலாற்றில் பதிவாகி, சிபில் ஸ்கோரை வெகுவாகப் பாதிக்கும். எளிதாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகக் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
நிறையக் கடன் இருப்பது சிபில் ஸ்கோரைப் பாதிக்கும்.அதிகக் கடன் அல்லது அதிகக் கடன் அட்டைகள் வைத்திருப்பது பிரச்னை இல்லை. பழைய கிரெடிட் கார்டில் தவறாமல் தவணைகளைச் செலுத்துவது சிபில் ஸ்கோரை உயர்த்தும்.
சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான வழிகள்:
  1. கடனைத் திருப்பிச் செலுத்தும் பழக்கம்: வாங்கிய கடனையும், கிரெடிட் கார்டு தவணைகளையும் உரிய காலத்துக்குள் சரியாகச் செலுத்தினால் சிபில் ஸ்கோர் உயரும். இது உடனடியாக நடக்காது, ஆனால் படிப்படியாக உயரும்.
  2. கடன் தொகையை அதிகரிக்காதிருத்தல்: முறையாகத் தவணைகளைச் செலுத்துபவர்களுக்குக் கடன் தொகை உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம். ஆனால், அந்த உச்ச வரம்பைத் தொடாமல், குறைந்த தொகையைக் கடனாக வைத்திருப்பது சிபில் ஸ்கோரை உறுதியாக்கும்.
  3. கடன் வாங்குவது அவசியம்: இதுவரை எந்தக் கடனும் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் பூஜ்யமாகவே இருக்கலாம். கடன் வாங்கினால்தான் சிபில் ஸ்கோர் உருவாகும். அவசியத்துக்காகக் கடன் வாங்கி, அதை முறையாகத் திட்டமிட்டுத் திருப்பிச் செலுத்துவது நல்லது.
  4. கிரெடிட் கார்டைப் பராமரித்தல்: பழைய கிரெடிட் கார்டை அடைத்துவிட்டுத் திரும்பக் கொடுத்தால் ஸ்கோர் குறையலாம். எனவே, பழைய கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு முறையாகத் தவணைகளைச் செலுத்துவதே சிறந்தது.
  5. அதிக விண்ணப்பங்களைத் தவிர்த்தல்: அதிக முறை கடன் கேட்டு விண்ணப்பிப்பதால் சிபில் ஸ்கோர் குறையலாம். எனவே, இதைத் தவிர்ப்பதன் மூலம் ஸ்கோர் குறைவதைத் தடுக்கலாம்.
இக்காலத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்கள் எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், நிதிநிலை தொடர்பான எந்தத் தகவலையும் தனிநபர் பொறுப்புடன் உறுதி செய்துகொள்வது அவசியம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement