களைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி? முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும்? அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே! அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்று விரிவாகத் திட்டமிட்டு மகிழுங்கள். ஒவ்வொரு தேர்வு முடியும்போதும் விடுமுறைக்கு இன்னும் எத்தனை நாட்கள் மிச்சமுள்ளன என்று எண்ணி மகிழுங்கள். ஆனால், படிக்கும் நேரத்தில் முழுக் கவனத்துடன் படியுங்கள். படிக்கும் அறையை மாற்றுங்கள் உங்களுடைய மனதை ஏமாற்றுவது மிகவும் எளிது. எனவே, ஒவ்வொரு தேர்வின்போதும் நீங்கள் படிக்கும் இடத்தையோ அறையையோ மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மாற்றத்தில் உங்களுடைய மனம் மயங்கிச் சலிப்பு நீங்கிப் புத்துணர்ச்சி பெறும். சிறிது தூங்கலாமா? தேர்வு எழுதி வீடு திரும்பியவுடன், சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்குங்கள். ஆனால், இந்த நேரம் முப்பது நிமிடத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் முதலாளி முதல் தொழிலாளிவரை இவ்வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சிறு துயில் அளிக்கும் ஆற்றல் காரணமாகத்தான் அது 'power nap' என்று அழைக்கப்படுகிறது. குஷியாகக் குளியுங்கள் தேர்வு நாட்களில் காலையும் மாலையும் குளியுங்கள். காலைக் குளியல் தேர்வு எழுதுவதற்கும் மாலைக் குளியல் அடுத்த நாள் தேர்வு எழுதுவதற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். நீண்ட தலைமுடி கொண்டவர்கள் மாலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கலாம். கதை கேளுங்கள் வீட்டில் தாத்தா - பாட்டியிடமோ அப்பா – அம்மாவிடமோ அவர்களின் சிறுவயது கதையைச் சொல்லச் சொல்லிச் சிறிது நேரம் தூங்கும்முன் கேளுங்கள். அது அவர்களின் படிப்பு சம்பந்தமான கதையாக இருந்தால் அங்கிருந்து ஓடிவிடுங்கள். சாதிப்போம் கொண்டாடுவோம் வீடியோ கேம்களிலும் கார்ட்டூன் தொடர்களிலும்தான் அவற்றின் கதாபாத்திரங்கள் சலிப்பும் களைப்புமின்றி ஓடிக்கொண்டே இருக்கும். நிஜ வாழ்வில் நம்மால் அப்படி இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு புத்துணர்ச்சியை உணர்வதற்கு மனதைப் பழக்கித் தேர்வில் சாதனை படையுங்கள். விடுமுறைக்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி...! ராஜாஜி எச்.வி.ஹண்டே, முன்னாள் தமிழக சுகாதார அமைச்சர் இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) ராஜாஜி பிறந்தநாள். 1...

No comments:
Post a Comment