சென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா? | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதற்கு ஆகும் செலவும் மிகமிக அதிகம். எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதே சென்னையில் யதார்த்தமான விஷயம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகைகள் என்ன? யார் எந்த வகையான அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குகிறார்கள்? சென்னயில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் கீழ்ப் பிரிவு நடுத்தர மக்கள், ரூ. 50 லட்சத்துக்குள் வீடு வாங்கும் நடுத்தர மக்கள், சுமார் ரூ. 55 லட்சம் முதல் 80 லட்சம் வரையிலான வீடு வாங்கும் உயர் நடுத்தர மக்கள், எல்லா வசதிகளையும் விரும்பும் உயர் வகுப்புப் பிரிவினர் என்றழைக்கப்படும் எலைட் பிரிவினர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். சென்னையில் மத்திய சென்னை மற்றும் மத்திய சென்னையை ஒட்டியுள்ள தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர், கே.கே. நகர், மாம்பலம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விலை கோடிகளைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். வீடு ஒட்டுமொத்தமாக 700 முதல் 800 சதுர அடியில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இந்த வகையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ரூ. 45 லட்சம் முதல் 50 லட்சத்துக்குள் விற்பனையாகின்றன. இந்த அளவுக்குள் விற்பனையாகும் வீடுகள் குன்றத்தூர், வேளச்சேரி, ஓஎம்ஆர், மடிப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. உயர் பிரிவு மக்கள் விரும்பும் எலைட் பிரிவு வீடுகள் சென்னையில் பல இடங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கோடி ரூபாய் முதல் அதற்கும் அதிகமாக இந்தப் பிரிவில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பிரிவு வீடுகள் வாங்குவோரின் ஒரே எண்ணம் எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் கிடைத்துவிட்டால் எந்தப் பகுதியாக இருந்தாலும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார்கள். இதில் ரூ. 25 லட்சத்துக்குள் வீடு வாங்கும் பிரிவினர் என்பது எப்படியும் ஒரு சொந்த வீடு இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இந்தத் தொகைக்குப் பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளே சென்னை நகருக்குள் கிடைக்கும். அதுவும் சென்னயின் புறநகர்ப் பகுதிகளில்தான் இந்த வீடுகள் பெரும்பாலும் கிடைக்கின்றன. எனவே சொந்த வீட்டுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தப் பிரிவு மக்கள் ஒரு படுக்கையறை வீட்டை வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கும் பிரிவினர் அலுவலகத்தை விட்டு தூரமாக இருந்தாலும் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களின் தேவையான பள்ளிக்கூடம், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்தே இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் பல்லடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இவர்களது விருப்பத் தேர்வாக இவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் அதிகபட்சமாக 15 - 20 வீடுகளை மட்டுமே வைத்து கட்டும் அடுக்குமாடிகள் அல்லது 6 முதல் 8 வரையுள்ள சிறு அடுக்குமாடி வீடுகளையே வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். பிரிக்கப்படாத மனையில் கிடைக்ககூடிய பாகத்தையும் (யூடிஎஸ்) மனதில் கொண்டே வீடு வாங்குகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை என்பதை மனதில் கொண்டு வீடு வாங்குகளேன்!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment