Saturday, 1 February 2020

மலிவு விலையில் வீடு வாங்க உதவும் அரசின் இணைய தளம்

பொதுமக்களின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் வகையில் இந்திய அளவில் முதல்முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்து, வீடுகளை வாங்கும் திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை (Mo-H-UA) மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘ரெரா’ உயர்மட்ட குழு கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

‘அனைவருக்கும் வீடு’ திட்டம்

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா முனைப்பியக்கம்’ ஆகிய திட்டங்களின் அடிப்படையில் தேசிய ரியல் எஸ்டேட் வர்த்தக மேம்பாட்டு கூட்டமைப்பு (NA-R-E-D-CO) சார்பாக ‘ஹவுசிங் பார் ஆல்’ (Hous-i-n-g-F-o-r-A-ll.com) என்ற இணைய தளத்தை, ஜனவரி-15 அன்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.

முழுமையான தகவல்கள்

உடனே குடியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்கள் வாங்குவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘இ-காமர்ஸ் ஹவுசிங் போர்ட்டல்’ இம்மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த இணைய தளம் மூலமாக குடியேற தயார் நிலையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் கட்டுனர்கள் அளிக்க இருக்கிறார்கள்.

தயார் நிலையில் வீடுகள்

சமீபத்தில் வெளியான ரியல் எஸ்டேட் கள ஆய்வு நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, நாடு முழுவதும், கட்டுமானப்பணிகள் முடிந்து குடியேறத் தயார் நிலையில் சுமார் 1 லட்சம் வீடுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், அடுத்து, வரும் ஒரு ஆண்டில் சுமார் 2.75 லட்சம் வீடுகள் இந்த வரிசையில் சேரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த, இந்த ‘இ-காமர்ஸ் ஹவுசிங் போர்ட்டல்’ மூலம் கீழ்க்கண்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன.

* பொதுமக்கள் அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப உள்ள மலிவு விலை வீடுகளின் கட்டுமான திட்டங்கள் மற்றும் அவை குறித்த அனைத்து விவரங்களையும் கட்டுனர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த இணைய தளம் மூலம் பதிவு செய்து கொண்டு, வீட்டை அவர்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்.

* ‘ரெரா’ திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் மட்டுமே இந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வரிசைப்படுத்தப்படும்.

* ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரையில் முதற்கட்ட நடவடிக்கையாக மனை மேம்பாட்டாளர்கள் மற்றும் கட்டுனர்கள் தங்களது கட்டுமான திட்டங்களை பதிவு செய்யும் வகையில், இந்த இணைய தளம் இயக்கப்படுகிறது. பிப்ரவரி 14-ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

* பயன்பாட்டுக்கு வந்த முதல் 15 நாட்களில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அவர்களுக்கு ஏற்ற சலுகைகளுடன் உள்ள வீடுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், மார்ச்-1 முதல் 30-ம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் தேர்வு செய்த வீடு அல்லது வீடுகளை வாங்கிக்கொள்ளலாம்.

* வீடு வாங்க திட்டமிட்டு, வீடுகளை தேர்வு செய்பவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்குபவர்கள் அதற்கேற்ப முன் பணத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். வீடு வாங்காத நிலையில் அந்த பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.

* பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்த வீடுகளில் ஏதாவது விற்பனையாகி விடும் நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு அது பற்றிய தகவல் அளிக்கப்படும்.

* இந்த ‘போர்ட்டலுக் கான’ இணைய தள முகவரி : https://www.housingfrall.com/

No comments:

Popular Posts