அண்ணாவின் பெருந்தன்மை எழுத்தில், பேச்சில், இயல்பில் மறைந்த முதல்- அமைச்சர் அண்ணாவுக்கு இணையாக வேறு ஒருவரையும் காட்ட முடியாது. அவர் கட்சி அரசியலை கடந்து தமிழர்கள் அனைவரும் போற்றக்கூடிய மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதையும் மறுக்க முடியாது. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது திராவிடர் கழகத்தையோ, பெரியாரையோ அவர் தாக்கி பேசியதில்லை. இரண்டு கழகங்களுக்கும் ஒரே கொள்கை தான். இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கி என்றார். பெரியாரை அண்ணா தாக்கி பேசாத நிலையிலும், பெரியார் அண்ணாவைப் பற்றியும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் மோசமாகத் திட்டி பேசி வந்தார். அதைப்பற்றி அண்ணாவிடம் தோழர்கள் சொல்லியபோது, 'பெரியார்தானே அப்படிப் பேசுகிறார். பரவாயில்லை. காட்டில் உள்ள யானை, தனது குட்டியை தூக்கிப்போட்டு தாக்கும். எதெற்கென்றால், எதிரிகளின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளக் குட்டியை பழக்குவதற்காகத்தான் அப்படித் தாக்கும். அதைப்போல நாமும் எதிரிகளின் ஏச்சையும், பேச்சையும் தங்கிக்கொள்ளவே நம்மை பெரியார் பழக்குகிறாரே தவிர வேறொன்றும் இல்லை. பெரியார் பேச்சுக்கு பதில் சொல்லி யாரும் மேடையில் பேச வேண்டாம்' என்று அண்ணா சொன்னார். ஈ.வி.கே.சம்பத் கட்சியை விட்டுப் பிரிந்து போனபோது, 'எனது கடுக்கனில் எண்ணெய் இறங்கிவிட்டது. அதை சுத்தப்படுத்துவதற்காகக் கழற்றி வைத்திருக்கிறேன். மீண்டும் கடுக்கனை அணிவேன்' என்றார். சம்பத்தை குறைத்துப் பேசவில்லை. அதன்பிறகு அவர் தனிக்கட்சி தொடங்கி, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியபோது, இந்தி அரசிதழ் சம்பத்துக்குக் கிடைக்கவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு டெல்லியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த சம்பத் என்னும் நாகை மாவட்டம் வாழக்கரையைச் சேர்ந்த சம்பத் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டார் ஈ.வி.கே.சம்பத். இந்த சம்பத் அந்த சம்பத்திடம் தொலைபேசியில் பேசியபோது டெல்லி சம்பத் அருகிலேயே அண்ணா இருந்திருக்கிறார். உடனே அண்ணா, அந்த சம்பத்திடம், 'உடனே இந்த கெசட்டை வாங்கி அனுப்பிவிட்டு மறுவேலை பார்' என்றாராம். ஈ.வி.கே.சம்பத் வேறு கட்சி தொடங்கி இருந்த போதிலும், நமது பொது எதிரியான இந்தியைத் தானே எதிர்க்கிறார். அவருக்கு உதவி செய்வதில் தவறில்லை என்றாராம். எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். இன்று (பிப்ரவரி 3) அண்ணாவின் நினைவு தினம். -கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
Saturday, 3 February 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
No comments:
Post a Comment