Saturday 10 June 2017

​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |


​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  2 |
காமராஜரை, சென்னை, திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். காமராஜர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வருகிறவர்களிடம் பேசுவாரே தவிர, அவர்களிடம் "சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்க மாட்டாராம் காமராஜர். இதற்கான காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகே பலருக்கும் தெரிய வந்தது. காமராஜர் சாப்பிடும் உணவில் போதுமான உப்போ, புளிப்போ, காரமோ இருக்காதாம். டாக்டர் ஆலோசனைப்படி, உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சமைக்கப்பட்ட உணவாக அது இருந்தது. அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து சங்கடப்படுத்த காமராஜர் விரும்பவில்லை. மேலும், பெரும்பாலும் கஞ்சி உணவையே அவர் சாப்பிடுவார். எனவேதான் யாரையும் சாப்பிடுங்கள் என்று சொன்னதில்லை. ஆனால் வெளியூர்பயணம் என்றால், தனது சாப்பாடு முடிந்தால் சரி என்கிற நினைப்பு அவருக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. உடன் வந்த போலீஸ், பத்திரிகையாளர்கள், டிரைவர்கள் "எல்லோரும் சாப்பிட்டாயிற்றா' என்று கேட்டு, "ஆச்சு' என்று பதில் வந்தபின்புதான் பயணத்தைத் தொடருவார்.

No comments:

Popular Posts