Saturday 10 June 2017

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் 1

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் 1 |

தெருவிளக்கில் படித்து, தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர். அவர் எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு - ஒருசமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலயேரின் வீட்டுத் தோட்டத்தில் நுழைந்ததற்காக ஒருவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடி வாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்குத் தொடுத்தார். அந்த வழந்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஐயரிடம் வந்து, ""குற்றம் சுமத்தப்பட்ட ஆங்கிலேயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். நேரில் வந்து வழக்கில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதம் விதித்தார். ஓர் இந்தியக் குடிமகனுக்காக ஆங்கிலேய ஆட்சியில் ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையையும் துணிச்சலையும் அனைவரும் வியந்து பாராட்டினர்.

No comments:

Popular Posts