‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’
வடலூர் சத்திய ஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்.
க.ரமேஷ்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு ராமையா, சின்னம்மை தம்பதியருக்கு பிறந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள். வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற 2 சகோதரிகளும் இருந்தனர். ஆன்மிக தேடலில் தன்னை கரைத்துக் கொண்ட வள்ளலாருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் தனது சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்து, மனைவியையும் ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார்.
சிறுவயதில் இருந்தே இறை வனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக்கணக்கான அருட்பாடல் களை அருளியுள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி னேன் என்று கூறிய அவர் நமக்காக அருளிய பாடல்கள் திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.
ஜீவகாருண்ய நெறிகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் மக்களுக்கு போதித்தார் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள் ளார் என்பதை உலகுக்கு எடுத் துரைக்கும் வகையில் 1867-ல் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். நமது ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்திய ஞான சபையும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற் சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் 5 படிகளையும் காணலாம். அவற்றை கடந்து உள்ளே சென்றால் சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்கு பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களைக் கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த திரைகளை விலக்கி, கண் ணாடியில் தெரியும் தீபத்தை தரி சிப்பதே ஜோதி தரிசனம் எனப் படுகிறது.
இந்த ஜோதி தரிசனத்தை 1872-ல் தைப்பூச தினத்தில் சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூச தினத்தில் மட்டுமே 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும்.
7 வண்ண திரைகளின் தத்துவம்
கருப்புத்திரை - மாயையை விலக்கும் (அசுத்த மாயாசக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத் துக்கு ஏற்படும் தடையை விலக் கும் (சுத்த மாயாசக்தி), பச்சைத் திரை - உயிர்களிடம் அன்பு, கரு ணையை உண்டாக்கும் (கிரியா சக்தி), சிவப்புத்திரை - உணர்வு களை சீராக்கும் (பராசக்தி), பொன் னிறத்திரை - ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சாசக்தி), வெள்ளைத்திரை - ஞானசக்தி, 6 வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும் (ஆதிசக்தி).
நமது பவுதிக உடலில் இருக் கும் உயிரை ஆன்மா என்று அழைக் கிறோம். நமது உடல் அணுக்களால் ஆனது. இது மிகவும் பிரகாசம் உடையது. கால்பங்கு பொன் நிற மும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் கொண்டது. இந்த ஆன்மா பிரகாசத்தை மாயா சக்திகளான 7 திரைகள் மறைக்கின்றன. அந்த திரைகளை நீக்கினால் நாம் முழுமையான ஞானம் பெற முடியும். இந்த தத்துவத்தைத்தான் ஞானசபையில் 7 திரைகளை நீக்கிய பிறகு ஜோதியை தரிசிக்கும் நிகழ்ச்சி உணர்த்துகிறது.
மேலும், ஏழை எளிய மக்கள் பசியை போக்க சத்திய ஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார். இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்று வரை 3 வேலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வரு கிறது.
‘‘கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்; புலால் உண்ணக் கூடாது; எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது; இறந்தவர்களை எரிக்கக் கூடாது; சமாதி வைத்தல் வேண்டும்; எதிலும் பொது நோக்கம் வேண்டும்; பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; சிறு தெய்வ வழிபாடு, அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது; உயிர்களை துன்புறுத்தக்கூடாது; மதவெறி கூடாது’’ ஆகியவை வள்ளலாரின் கொள்கைகளாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எவ்வாறு அழியாத தேகத்தை பெற்று நித்ய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியை கண்டறிந்தார் வள்ளலார். தாம் கண்டு அடைந்த வழியை நாம் எல்லோரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.
இப்படி வாழ்ந்த வள்ளலார் வடலூர் அருகில் உள்ள மேட்டுக் குப்பத்தில் சித்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக வெகு விமரி சையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச தினத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
ஜோதி காட்டப்படும் நேரங்கள்
இன்று (ஜன.21) தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (ஜன.22) காலை 5.30 மணி 7 திரைகள் விலக்கி ஜோதி காட்டப்படும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.
உயிர்களிடம் அன்பு செய்; பசி போக்கு; தயவு காட்டு; மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் சிந்தனைகளும், கண்ணோட்டமும் பரவினால் மனித மனங்களும், அதனால் உலகும் செழுமையடையும்.
Facebook
Google
Twitter
EmailShare
© 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
Monday, 21 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment