ஜி.எஸ்.டி. : செய்திருப்பதும், செய்ய வேண்டியதும்...!
டாக்டர் சோம வள்ளியப்பன்
ஜி .எஸ்.டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து இந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் 18 மாதங்கள் முடிகின்றன. ஒரே பொருளுக்கு நாடு முழுவதும் வெவ்வேறு விலைகள் இருந்தன. அதற்கு காரணம், ஒரு மாநிலத்தில் உற்பத்தி ஆகும் பொருள் வெவ்வேறு மாநிலங்களில் விற்பனையாகும் போது, வேறுபட்ட வெவ்வேறு மாநில வரிகளையும் சேர்த்து விற்பனை செய்யப்பட்டது தான். மேலும், தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறவர்கள் கணக்கு காட்டவேண்டிய முறைகள், நிறைவு செய்து அனுப்பவேண்டிய படிவங்கள் ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டதால் நாடு முழுவதும் விற்பனையாகும் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிரமங்கள் இருந்தன.
இந்த பிரச்சினைகள் தவிர, ஒரே பொருள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், ஊராட்சிகள் என்று பல்வேறு ஆட்சியாளர்களும் பல்வேறு வரிகளை விதித்தார்கள். பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலம் போகையில், சுங்கச் சாவடிகளில் சோதனை, கட்டணங்கள், தாமதங்கள் ஆகியவையும் தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு சிரமம் கொடுத்துக்கொண்டிருந்தன. இவற்றால் சோதனைகள், வழக்குகள். மேல் முறையீடுகள் என்று பல்வேறு பிரச்சினைகள் வியாபாரம் தொழில் செய்வோருக்கு இருந்தன.
மறைமுக வரிகளைப் பொறுத்தவரை, நாடு விடுதலை ஆனதில் இருந்து இப்படித்தான் என்றிருந்த நிலையைப்பற்றி வருத்தங்களும் கோபங்களும் இருந்தாலும் கடந்த ஆண்டின் முதல் பாதி வரை அவற்றில் மாற்றம் வரவில்லை.
பின்னர் ஒருவழியாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி, 2017 ஜூலை மாதம் 1-ந் தேதி முதல், அதுவரை நடப்பில் இருந்த கலால் வரி, சேவை வரி, ஆக்ட்ராய், எண்டர்டெயிண்ட்மெண்ட் வரி போன்ற 17 வகையான வரிகளுக்கு மாற்றாக, ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டது.
80 லட்சம் வணிகர்கள், 29 மாநில அரசுகள், 3 யூனியன் பிரதேசங்கள், வியாபாரிகள், வர்த்தக கூட்டமைப்புகள் போன்ற தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் புரிந்து கொள்ளவேண்டும், ஒத்துழைக்கவேண்டும், புதிய நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும், என்ற பல்வேறு மிகக்கடுமையான கட்டங்களை எல்லாம் தாண்டி, இந்தியாவில் புதிய மறைமுக வரியாக நிலை பெற்று விட்டது ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி. நடைமுறைபடுத்துவதற்கு முன்பு, ஆண்டுக்கு ஒரு முறை, பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிடும் ஆண்டு வரவு செலவு கணக்கின் போதும், மாநில அரசுகள் வெளியிடும் அவர்களது வரவு செலவு கணக்கின் போதும் தான் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் மாற்றியமைக்கப்படும். அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து சில பொருட்களின் விலைகள் கூடும். வேறு சிலவற்றின் விலைகள் குறையும்.
ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்பு, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல், ஆண்டின் இடையிலும், ஆண்டில் ஒரு முறைக்கு மேற்பட்டும் கூட மறைமுக வரிகள் கூடவோ, குறையவோ செய்ய வழி வகைகள் செய்தாயிற்று.
அப்படி மாறுதல் செய்யும் அதிகாரம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்திற்குப் பின் மத்திய நிதி மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்களிடம் இருந்து, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
29 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி மந்திரி இருப்பார். தற்சமயம் தலைவராக இருப்பவர் அருண் ஜெட்லி.
அத்தனை மாநில அரசுகளையும் மத்திய அரசு இந்த கவுன்சில் கூட்டத்தில் கலந்தாலோசனை செய்து, கவுன்சிலின் ஒப்புதலோடு தான் எந்த முடிவும் எடுக்க முடியும். ஆகவே, இந்த வரி மாற்றங்களின் பெருமையையோ, வசவையோ எல்லா அரசுகளும் சேர்ந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது நிலை.
மொத்த பொருட்களையும் சேவைகளையும் 5 பிரிவுகளாக பிரித்து, அதில் சிலவற்றுக்கு வரி ஏதும் இல்லை என்றும் (0), மற்றவற்றுக்கு 5 சதவீதம், 12சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற நாலு விகிதங்களில் வரி விதித்தார்கள். அது ஆரம்பம்தான். அதன்பின் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து, உயர் வரி வளையத்திலிருந்து (சிலாப்) சிலவற்றை குறைந்த வரி வளையங்களுக்குள் தொடர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கிறது ஜி.எஸ்.டி.கவுன்சில்.
ஜி.எஸ்.டி.கவுன்சிலில் விவாதங்களுக்கு பின் எடுக்கப்படும் முடிவுகள், நாடு முழுவதற்குமான ஜி.எஸ்.டி. மாற்றங்களாக, வழிமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. அப்படி நடந்த ஒரு கூட்டம்தான், 22.12.18 அன்று நடைபெற்ற, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31 வது கூட்டம்.
22 டிசம்பர் அன்று நடந்த ஜி.எஸ்.டி.கவுன்சிலின் 31-வது கூட்டத்தில், மொத்தம் 17 பொருட்கள் மற்றும் 6 சேவைகளுக்கு வரி குறைப்பு செய்திருக்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். எதற்கும் வரியை உயர்த்தவில்லை. இந்த மாற்றங்கள் மூலம் மொத்தம் ரூ 5,500 கோடிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டில் வசூலான மாதாந்திர சராசரி மொத்த வரித் தொகை 89 ஆயிரத்து 700 கோடி. இரண்டாம் நிதி ஆண்டான 2018-19 இதுவரை சராசரியாக மாதம் 97 ஆயிரத்து 100 கோடி வசூலாகிறது. ஆனால் எல்லா மாநிலங்களுக்கும் முன்பிருந்த அளவு வரி வருவாய் இல்லை. அவற்றுக்கு தனியே ஜி.எஸ்.டி. செஸ் லிருந்து இழப்பீடு போய்க்கொண்டிருக்கிறது.
இதை ஆராயவும், சரி செய்ய பரிந்துரைகள் செய்யவும் ஏழு மத்திய மந்திரிகள் கொண்ட குழு ஒன்று அமைத்திட இந்த கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோது 228 ‘பொருட்களும் சேவைகளும்’ அதிகபட்சமான, 28 சதவீதம் என்ற வரி வளையத்தில் இருந்தன. டிசம்பர் 2018 வரை 34 பொருட்கள் இருந்தன. இனி அது 28 பொருட்களுக்கு மட்டுமே. அந்த 28-ல் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சிமெண்டும் இருக்கிறது. மேலும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ‘டிஷ்வாஷர்ஸ்’, ‘ஏர்கண்டிஷனர்கள்’ உள்ளிட்டவையும் இருக்கின்றன.
‘ஏற்கனவே சிமெண்ட் தவிர பல்வேறு கட்டுமான பொருட்களின் மீதான வரியை, 28 சதவீதத்தில் இருந்து 18 அல்லது 12சதவீதம்ஆக குறைத்தாகிவிட்டது. சிமெண்டையும் 28-ல் இருந்து 18-க்கு கொண்டுவரும் திட்டம் இருக்கிறது’ என்கிறார் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி. அப்படிச் செய்தால் மேலும் 13ஆயிரம் கோடி ரூபாய் வரிவருவாய் குறையும். ஆனாலும் செய்யப்படும் என்கிறார் அருண்ஜெட்லி. கட்டுமானப்பணிகள் கூடினால் வேலைவாய்ப்பு உயரும் என்பதால் இதைச் செய்யத்தான் வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment