தியாகச்சுடர் தியாகி விசுவநாததாஸ்
விசுவநாததாஸ்
குமரிஅனந்தன்
நா ளை(டிசம்பர் 31-ந்தேதி) தியாகி விசுவநாததாஸ் நினைவு தினம்.
வீர தீர பராக்கிரம ராஜாதிராஜ் மார்த்தாண்டன் கானவேலன், இலங்கை, சிங்கப்பூர் பினாங், போன்ற இடங்களிலே சென்று வெற்றிக்கொடி நாட்டிய வீர கலைஞர் விசுவநாததாஸ் நாடகம், ஒரே ஒரு முறை தான் காணத் தவறாதீர்கள். இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு கிடையாது தரை நாலணா. பெண்களுக்கு தனி இடம் உண்டு. இவ்வாறுதான் அன்றெல்லாம் விளம்பரம் போடுவார்கள். இதிலே விசுவநாததாஸ் வேலன், வேடன் விருத்தனாக வருவார். வள்ளி திருமணம் நாடகம். தினைப்புனத்திலே வள்ளி கதிர்களை கொத்த வருகின்ற கிளிகளையும்,குருவிகளையும் விரட்டிக்கொண்டு இருக்கிறாள். கிழவன் விருத்தனாக இப்போது முருகனே வந்து பாடுகிறான்.
ஆலோலங்கடி சோ,
வெள்ளை வெள்ளை கொக்குகளா
வெகு நாளா இங்கிருந்து கொள்ளையடித்தீங்களா
சொந்த நாட்டுக்கு ஓடிப்போங்கள் கொக்குகளா
என்று முருகனாக வந்தவர் பாடியவுடனேயே கூடியிருப்பவர்களெல்லாம் குதூகலத்துடன் விண்ணைப் பிளக்கின்ற அளவுக்கு கையொலி எழுப்புகிறார்கள்.
அதோடு நிற்கிறாரா அவர்?
“கொக்கு பறக்குதடி பாப்பா! - நீயும் கோபமின்றி கூப்பிடடி பாப்பா! வர்த்தகம் செய்ய வந்த கொக்கு - இது வர்த்தகம் செய்ய வந்த கொக்கு - நமது வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு! அக்கறை சீமை விட்டு வந்து கொள்ளை அடித்துக்கொழுக்குதடி பாப்பா! அக்கரை சீமை விட்டு வந்து கொள்ளை அடித்துக் கொழுக்குதடி பாப்பா!
- என்று கொக்கு விரட்டுகின்ற சாக்கிலே , வெள்ளைக் கொக்குகளாக இருக்கிற வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டிவிட வேண்டுமென்று பாடுகிற பாட்டைக் கேட்டால், நம் நாடி நரம்புகளிலெல்லாம் தேசபக்தி ஓடித் தெறிக்கின்ற அளவுக்குப் பாடி முடிப்பார் விசுவநாததாஸ்.
அவரைப்பொறுத்தவரையிலே நாடகம் என்பது புராண காவியமாக இருந்தாலும் சரி, சரித்திர நாடகமாக இருந்தாலும் சரி, அதிலே தேசியம் வந்து நிச்சயமாக அமர்ந்துகொள்ளும். அவர் பிறந்தது 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி, சுப்பிரமணியனுக்கும், ஞானாம்பாளுக்கும் ஞானியார் தெருவிலே சிவகாசியிலே பிறந்தார். மருத்துவ குலத்திலே பிறந்தவர்.
தூத்துக்குடியிலே ஒரு கூட்டம். காந்தி மகானுடைய கூட்டம். பளபள வென்ற உடையுடன் மேடையிலே பாடுகிறார். “காந்தியோ பரம ஏழை சந்நியாசி?” - என்று பாடுகிறார். காந்தியினுடைய பக்கத்திலே இருக்கின்ற சுத்தானந்த பாரதியார் காந்திக்கு அதனை மொழி பெயர்த்துச் சொல்கிறார்.
சிரிக்கிறார் காந்தி. எழுந்து அவரைப் பக்கத்திலே அழைக் கிறார். விசுவநாததாசை அப்படியே கட்டிப்பிடித்துக்கொள்கிறார்.”
தேசத்திற்காகத் தொண்டு செய்த காரணத்தினால் செல்வமெல்லாம் குறைந்துகொண்டே போயிற்று. அவருடைய வீடு - பெரிய அரண்மனை போன்ற வீடு - 1940 -ம் ஆண்டு 2500 ரூபாய்க்கு ஏலத்திற்குப் போக வேண்டியதாயிற்று.
அந்த நேரத்திலே கூட எத்தனையோ பேர் சொன்னார்கள். “நீங்கள் தேசபக்திப் பாடல்கள் பாடுவதை விட்டு விடுங்கள். விடுதலைக்குப் பாடுபடுவதை விட்டு விடுங்கள்” என்று சொல்கிற நேரத்தில், “அது மட்டும் முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு நேரம் அவர் ஒரு சிறையில். அவருடைய மகன் ஒரு சிறையில் அவருடைய மருமகனும் ஒரு சிறையில். மகனுக்கு அப்போதுதான் திருமணம் ஆகியிருந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தூதுவர்கள் அவரிடம் போய் சொன்னார்கள்”. இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறார்கள். இளமனைவி வீட்டில் ஏக்கத்தோடு, நீயும் ஏக்கத்தோடு சிறையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழி உண்டு. மன்னிப்பு எழுதிக்கொடுத்துவிடு” என்று சொன்ன நேரத்தில் விசுவநாதாஸ் சொன்னார். “மகனே! நீ மன்னிப்பு எழுதிக் கொடுப்பதைவிட சிறையிலே செத்துவிடலாம் என்று! அவரும் மன்னிப்பு எழுதிக்கொடுக்கவில்லை.
1940 -ம் ஆண்டு சென்னையிலே மூன்று நாடகங்கள் என்று அவரை அழைத்தபோது, அந்த மூன்று நாடகங்களில் நடித்தால், தன்னுடைய வீட்டைக் கூட திருப்பிவிடலாம் என்று நினைத்து அவர் வந்தார். வருகிற நேரத்திலே டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒற்றைவாடைக்கொட்டகையிலே மயில் வாகனத்திலே முருகனாக வந்து “மாயா உலகே..’ என்று அவர் பாட ஆரம்பித்தார். கடல் மடை திறந்தது என சங்கீத கானம் வெளியே வந்தது. வந்த கானம் தொடரவில்லை . நெஞ்சைப்பிடித்தார். தலை சாய்ந்தது.
கூட்டத்தில் இருந்த ஒரு டாக்டர் அவர் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “மாரடைப்பு , உயிர் போய் விட்டது என்று சொன்னார். கூட்டமே அழுதது. கதறியது. மறுநாள் 1941 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி மாலை 3 மணிக்கு அதே மயில் வாகனத்திலே அவரை ஏற்றி சிலம்பு செல்வர் ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அப்படியே தங்க சாலை வழியாக மூலக்கொத்தளத்திலே சென்று அந்தப்புனிதனுடைய உடலை எரியூட்டினார்கள்.
நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட அந்தக் கலைஞனுக்கு- தலைவனுக்கு அடமானத்திலிருக்கும் அவன் வீட்டை மீட்டுக் கொடுக்க வில்லையே. நினைவுச்சின்னம் ஆக்கவில்லையே என்று கண்ணீர் மல்கப் பேசினேன். எழுதினேன். சைக்கிள் பயணம் உண்ணா நோன்பு மேற்கொண்டேன். தமிழக அரசு அடைமானத்திலிருந்த வீட்டை மீட்டு 55 லட்சம் ரூபாயில் நினைவகமாக மாற்றி விசுவநாததாசின் மார்பளவுச்சிலையும் அமைத்துள்ளது.
வீரம் மிக்க விசுவநாததாஸ் இந்த நாடு இருக்கும்வரை நம் நெஞ்சங்களிலே வாழ்வார்.!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment