உங்களிடம் என்ன மாற்றம் வேண்டும்?
கற்றுக் கொள்ளும் முறையை 7 விதமாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது மூளையை பலமாக்குவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் எந்த வகையில் கற்கிறீர்கள்? எந்த வகையில் கற்றலை மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி இதில் பார்க்கலாம்...
பார்வை வழி கற்றல்
கண்களைக் கொண்டு பார்த்தல் முறையில் கற்றுக் கொள்வது ‘விஷூவல் லேர்னிங்’ எனப்படுகிறது. படங்கள், வீடியோக்கள், மற்றும் நேரடி காட்சிகள் மூலம் கற்றுக் கொள்வது அடிப்படையான கல்வி முறையில் ஒன்று. இந்த முறையில்தான் ஒவ்வொருவரும் மிகுதியான விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.
ஆனால் அவரவர் பார்க்கும் கோணத்திற்கேற்ப கற்றுக் கொண்ட பாடங்கள் மாறுகின்றன. அது அறிவு வளர்ச்சியிலும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. பார்வையால், பலர் கற்றுக் கொண்டதைவிட, தவறவிட்ட பாடங்களே அதிகம். ஏனெனில் ஈர்ப்புடைய விஷயங்களில் மூழ்கிப்போய், கவனிக்க வேண்டிய விஷயங்களை தவறவிடுவது இங்கே அதிகம்.
உதாரணமாக படத்துடன் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதைவிட, வீடியோ காட்சியில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஆனால் நகரும் காட்சிகளில் கணப்பொழுதில் நிகழும் நுணுக்கமான காட்சிகளை கவனிக்காமல் விடும் வாய்ப்பு உண்டு. மேலும் கற்றுக் கொள்வதைவிட ரசித்தலுக்கு மனம் தாவுவதும் உண்டு. அதனால்தான் இணையதளங்களில் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் நுழைபவர்கள்கூட, மனம் மயங்கி ரசித்தல் நிலைக்குச் சென்று, சம்பந்தமில்லாதவற்றை கண்டு பொழுதுபோக்குகிறார்கள். தவறான பாதைக்குச் செல்வதும் நடக்கிறது.
காட்சி வழி கற்றலில், இயற்கை காட்சிகளாய், அன்றாட நிகழ்வுகளில் இருந்து அறியும் அனுபவ பாடங்களும் மிகுதி. இதிலும் அவரவர் ஆர்வம், செயல்பாடுகளுக்கு ஏற்ப கற்றுக் கொள்ளும் விஷயங்கள் மாறுபடுகின்றன. தவறவிடும் விஷயங்களும் நிகழ்கின்றன. அதுவே கற்றலின் மேம்பாட்டில் வித்தியாசத்தையும், நுண்ணறிவில் வேறுபாட்டையும் தருகிறது.
கேள்வி ஞானம்
கற்றலின் கேட்டல் நன்று என்கிறார் வள்ளுவர். படித்து அறிந்து கொள்வதைவிட, கேள்வி ஞானம் மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம். சான்றோர்களின் உரையில் கொட்டிக்கிடக்கும் விஷயங்களை கேட்டல் ஞானம் மூலம் பெறுவது ஒருவகை கல்வி முறையாகும். கருத்தரங்க உரைகளை கேட்பது, ஆடியோ கோப்புகளை, சி.டி.களை கேட்பது போன்றவை கேட்டல் கல்வி வகையின் கீழ் வரும். இசை வழி கல்வி இன்றைய குழந்தைகளுக்கு சிறந்த அறிவு வளர்ச்சியைத் தருகிறது. பெரியவர்களின் பாடங்களும் இசைவழி முறைக்கு மாறினால் இன்னும் அவர்களின் கற்றல் திறனும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.
வாசித்தல் முறை
இது மொழிவழி கல்வி. நாம் வழக்கமாக எழுதிப்படிக்கும் முறை, புதிய வார்த்தைகளை அறிந்து கொள்வது இந்த வகையின் கீழ் அடங்கும். நாம் படித்து அறிந்துதான் அனைத்தையும் கற்பதாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால் பார்த்தல் மற்றும் பட்டறிவின் மூலம் கற்கும்பாடங்களே மிகுதி என்பது அனுபவத்தில் விளங்கும்.
உடல்வழி கல்வி
உடலை பயன்படுத்தி கற்றுக் கொள்ளும் விஷயங்கள் உண்டு. உணவுத்துறை, ரசாயனத் துறையில் இந்த வகையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சி படிப்புகளிலும் புலனறிவுக் கல்வி அதிகம். தொடுதல், நுகர்தல், ருசித்தல் என பலமுறையில் புதிய விஷயங்களை கற்றறிய வேண்டியிருக்கும். புலனறிவுக் கல்வி, தீவிர புரிதலுக்கு துணைபுரியும் கல்வி முறையாகும்.
தர்க்க முறை
யூகம், காரண, காரியம் மற்றும் கணித வழிமுறைகளின் வழியே கற்கும் முறை தர்க்க முறை கற்றலாகும். ஆய்வுப் படிப்புக்கு அவசியமான திறன் இது. புதிக கருதுகோள்களை முன்வைக்கவும், ஆராயவும், காரண காரியங்களை விளக்கவும் இந்தத் திறன் ரொம்பவும் தேவையாகும்.
சமூக கல்வி
குழுவாக இருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்கள் இந்த வகையின் கீழ் அடங்கும். நண்பர்கள் குழு, அறிமுகம் இல்லாதவர்க ளின் குழு ஆகியோரிடம் இருந்து தங்கள் தனித்திறன்களின் அடிப்படையில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் சமூக கல்வியாகும். இது கற்றல் முறையில் முக்கியமானதாகவும், வாழ்க்கைக்கு அடிப்படையானதாகவும் அமைகிறது. தகவல் தொடர்பு மற்றும் கூச்சம் தவிர்த்தல், இணக்கமாக இருத்தல் ஆகிய பண்புகளின் அடிப்படையில் சமூகத்திடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அது, சுமூக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.
ஆய்வுக் கல்வி
இது உங்களின் தனித்திறன் கற்றல் முறையாகும். மேற்கண்ட ஆறு கற்றல் முறைகள் கலந்து உங்கள் சொந்த புத்திசாலித்தனம், ஆய்வு நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களைவிட மாறுபட்டு அறிந்து கொள்ளும் ஆற்றலே இந்த கற்றல் திறனின் அடிப்படை. புத்திசாலிகளின் பண்பாக விளங்கும் இந்த கற்றல் முறை, உங்களின் தனித்துவத்தை உலகிற்கு ஒருநாள் எடுத்துக்காட்டுவதாக அமையும்.
7 வகை கற்றல் முறையை பார்த்தாகிவிட்டது. ஒவ்வொரு கற்றல் முறையும் மூளையின் வெவ்வேறு பகுதிகளை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. கற்றலின்போது மூளை சுறுசுறுப்படைகிறது. நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் நினைவுத்திறனாக மூளையில் சேமிக்கப்படுகிறது. எனவே மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி படிப்பது மனதில் பதிவதற்கு அடிப்படையாக அமையும். அது எக்காலத்திற்கும் பயனுள்ள நினைவு களாகவும் மாறும்.
கற்றல் முறையின்போது, மூளையை படம் பிடித்து ஆராய்ச்சி செய்ததில் எந்த கற்றல் முறை எந்தப் பகுதியை தூண்டுகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது. பார்வை மூலம் கற்றுக் கொள்ளும் பண்பு, மூளையின் பின்பக்கம், பார்வை உணர்வு பகுதியான ‘ஆக்சிபிடல் லூப்ஸ்’ பகுதியை தூண்டுகிறது. இதேபோல கேட்டல் முறை, மூளையின் ‘டெம்போரல் லூப்ஸ்’ பகுதியை வலிமை அடையச் செய்கிறது.
எழுதிப்படிப்பது ‘டெம்ேபாரல் லூப்’ மற்றும் ‘பிராண்டல் லூப்’ பகுதியை வலிமையாக்குகிறது. உடல்வழி கல்வி மூளையின் செரிபெல்லம் மற்றும் கார்டெக்ஸ் பகுதியை தூண்டுகிறது. தர்க்க கல்வியானது ‘பரிடல் லூப்’ பகுதியை தூண்டுகிறது. சமூக கல்வியானது ‘பிரான்டல்’ மற்றும் ‘டெம்போரல் லூப்’ பகுதியை வலிமையாக்கும்.
ஆய்வுக் கல்வியானது ‘பிரான்டல் மற்றும் பரிடல் லூப்’ பகுதிகளை தூண்டுகிறது. அனைத்து வழிகளிலும் கற்றறிதல் மூளையை மிகமிகச் சுறுசுறுப்பாக்குகிறது.
பெரும்பாலானவர்களின் கற்கும் முறைகள் பொதுவானதாக இருக்கும். பலரும், கலவையான கற்றல் முறைகளையே கையாளுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தனித்துவமாக கற்கும் திறன் கொண்டிருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்றபடி வித்தியாசமான கற்றல் முறையை கைக்கொண்டால் வெற்றிகள் எளிதில் வசப்படும். நீங்கள் எந்த வகையில் நிறைய கற்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். மாற்று வழியில் கற்றலை மேம் படுத்தி உங்கள் மூளையையும், வாழ்வையும் வளமாக்கிக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment