சமீபத்தில் வெளியான மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. கல்வித்துறையில் மட்டுமல்லாமல், உற்பத்தித்துறை, வேலைவாய்ப்புத்துறை என்று ஒரு நீண்டபாதையில் உடனடியாக தமிழக அரசு போகவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் அரசுக்கு சொந்தமான 22 மருத்துவக் கல்லூரிகளில் 2,447 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி என்று எவ்வளவோ முயற்சிகளை தமிழக கல்வித்துறை எடுத்து வருகிறது. இப்போதுகூட, மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் இருந்து 320 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சி எடுத்தும் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர் என்றால், குறை எங்கே இருக்கிறது? என்று பார்க்கவேண்டிய அவசியத்துக்கு கல்வித்துறை வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்காக 5 கட்டங்களாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 628 இடங்கள் இருந்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான். ஆனால், 72 ஆயிரத்து 648 மாணவர்கள்தான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கிறார்கள். 97 ஆயிரத்து 890 இடங்கள் காலியாக இருக்கின்றன. மிகவும் பரிதாபகரமான நிலை என்னவென்றால், 22 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 9 கல்லூரிகளில் ஒரேயொரு மாணவர்தான் சேர்ந்து இருக்கிறார். 136 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்குமேல் மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். 81 கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை. இதுமட்டுமல்லாமல், மொத்தம் 239 கல்லூரிகளில் 30 சதவீத மாணவர் களுக்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பெரும் பொருட்செலவில் உள்கட்டமைப்புகளை அமைத்து, ஆசிரியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் அரசு உதவி இல்லாமல் தங்கள் நிதியிலிருந்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள். 60 சதவீத மாணவர்களுக்குமேல் சேர்க்கை இருந்தால்தான் அவர்களால் தங்கள் செலவை சமாளித்து கல்லூரிகளை நடத்த முடியும். 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கும் குறைவாக இருந்தால் நிச்சயமாக கல்லூரியை நடத்தவே முடியாது.
உடனடியாக இவ்வாறு 97 ஆயிரத்து 890 இடம் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை ஆராய தமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மாணவர் சேர்க்கை சரியில்லாமல் இருப்பதில் பொறியியல் கல்லூரிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இல்லாத நிலையே இவ்வாறு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டாததற்கு காரணமாகும். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்துவிட்டு, உற்பத்தித்துறையிலும், உள்கட்டமைப்புத்துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஒரு வேகமான முன்னேற்றத்தை தமிழ்நாடு கண்டால்தான் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் கல்லூரிகளில் முழுமையான அளவில் மாணவர் சேர்க்கையும் நடக்கும்.
Saturday, 15 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment