நீங்களும் இந்த பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் ப்ளீஸ் மாற்றிவிடுங்கள்!
சைபர் குற்றங்கள், தகவல்கள் திருட்டு, ஹேக்கர்கள் போன்ற வார்த்தைகள் அதிகம் செய்திகளில் அடிபடும் காலம் இது.
முன்பைவிட தற்போது இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நன்மைகளைப் போலவே தீமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும்.
இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய பல விஷயங்களில் ஆன்டி-வைரஸ்களை அவ்வப்போது அப்டேட் செய்துவைத்துக் கொள்வது, அவ்வப்போது சிஸ்டத்துக்கான பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைப்பது போன்றவை மிக முக்கியம்.
இணையதள வங்கிக் கணக்குக்கோ, மின்னஞ்சல் முகவரி உருவாக்கவோ பாஸ்வோர்ட் கொடுக்கும் போது நாம் எவ்வளவுதான் குண்டக்க மண்டக்க என பாஸ்வேர்ட் கொடுத்தாலும் இது பலவீனமாக இருப்பதாக கணினி சொல்லும். நமது மூளையின் நினைவுத் திறன் பலமின்மையால் மிக எளிதான பாஸ்வேர்டுகளைக் கொடுக்கவே நாம் விரும்புவோம். கேப்ஸ் கொடுத்தோமா ? ஸ்மால் லெட்டரா என சந்தேகம் வந்தாலே பாஸ்வேர்டின் நிலை அவ்வளவுதான் அந்த பயம் நமக்கு.
ஆனால் மிக வலிமையான பாஸ்வேர்டை நம்மை உருவாக்க வைக்க வேண்டியது கணினியின் கடமை. அது அதன் கடமையை சரியாகவே செய்யும்.
சரி இந்த ஆண்டு பலராலும் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான, பயங்கரமான பாஸ்வேர்டுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்போதுதானே அதே பாஸ்வேர்டுகளை வைத்து நாமும் நமது தகவல்களை இழக்காமல் தப்பிக்கலாம்.
மிக எளிதான பலராலும் பயன்படுத்தப்பட்ட சில பாஸ்வேர்டுகளின் பட்டியலைப் பார்க்கலாம்...
1. 123456
2. password
3. qwerty
4. 12345678
5. Iloveyou
6. admin
7. login
8. abc123
9. 654321
10. password1
11. computer
12. 121212
13. passwor
14. admin123
15. 1234566
பலரால் பல முறை பயன்படுத்தப்பட்ட இந்த பாஸ்வேர்டுகளே இந்த ஆண்டின் மிக பயங்கர பாஸ்வேர்டுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஏன் என்றால் இவற்றை ஹேக்கர்கள் மிக எளிதாக முதல் அல்லது இரண்டாவது முயற்சியிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதான். அதனால்தான் இதனை பயங்கர பாஸ்வேர்ட் என்கிறார்கள்.
ஒருவேளை இந்த பாஸ்வேர்டுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தற்போது பயன்படுத்தி வந்தால் நிச்சயம் அதனை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இதுபோல 2017ம் ஆண்டுக்கான 100 பாஸ்வேர்டுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நம்மைப் பற்றி ஒரு சில தகவல்களைத் தெரிந்தவர்கள் ஹேக்கர்களாக மாறும் போது நாம் வைக்கும் பாஸ்வேர்டுகளை அவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்காத வகையில் பாஸ்வேர்டை அமைக்க வேண்டும்.
எனவே, நாம் எவ்வளவுதான் பலவீனமாக இருந்தாலும், நமது பாஸ்வேர்டுகளை பலமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில அப்பர் கேஸ், எண்கள், சிம்பல்கள் என பலவற்றை பயன்படுத்தி பாஸ்வேர்ட் வைப்பதே சாலச் சிறந்தது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
பலமான பாஸ்வேர்டுகளை வைப்பதும், அவற்றை சரியாக ஞாபகம் வைப்பதும் மிக மிக அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment