Saturday 7 July 2018

மிகவும் முக்கியமான 10 அரசு செயலிகள்.. நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்!

மிகவும் முக்கியமான 10 அரசு செயலிகள்.. நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்!பல வேலைகளை எளிதாக்கிய செல்போன்களுக்கான தாரக மந்திரமாக மாறியிருப்பது செயலிகள். வாட்ஸ் அப் முதல் ஓலா போன்ற செயலிகள் பலரது செல்போன்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.ஆனால் உண்மையிலேயே இந்தியக் குடிமகனுக்கு மிகவும் தேவையான, அத்தியாவசியமான பல செயலிகள் உபயோகத்தில் உள்ளன. அவற்றை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வதில்லை.அது குறித்து நாம் தேடியதில் கிடைத்த சில முக்கிய செயலிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில் ஒன்று உங்களிடம் இருந்தால் கூட நீங்கள் உங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.சரி அந்த செயலிகள் என்னென்ன என்று பார்க்கலாம்?

இந்தியன் போலிஸ் ஆன் கால் ஆப்
இந்தியன் போலீஸ் ஆன் கால் ஆப் உங்கள் செல்போனில் இருந்தால் அவசர காலங்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் காவல்நிலையம் எங்கு அமைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதோடு, இந்த ஆப்பில், காவல்நிலையத்துக்கு செல்லும் வழி, தூரம் என அனைத்தும் அறியலாம். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் எண், காவல்துறை கண்காணிப்பாளரின் அலுவலக எண்களும் வழங்கப்படும். இந்த ஆப்பைப் பயன்படுத்தி நீங்கள் காவல்நிலையத்துக்கு செல்போனில் அழைப்பும் விடுக்கலாம்.

எம்பாஸ்போர்ட் சேவா
பாஸ்போர்ட் பெறுவது என்ற பெரிய வேலையை எளிதாக்கியுள்ளது இந்த செயலி. உங்கள் கையில் ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருந்தால் போதும். நாட்டின் எந்த மூலையில் இருந்தும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் கோரி நீங்கள் அளித்த விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது, உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவின் முகவரி ஆகியவை குறித்த தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எம்ஆதார் செயலி
ஆன்டிராய்ட் செல்போன்களில் மட்டுமே இந்த செயலி இயங்கும். அதாவது எல்லா இடங்களுக்கும் நமது ஆதார் அட்டையை எடுத்துச் செல்வதில் இருந்து நம்மை இந்த செயலி காப்பாற்றுகிறது. இந்த செயலி நம்மிடம் இருந்தால், அதன் மூலம் எந்த சேவைக்கும் தேவையான நமது இ-கேஒய்சியை அளிக்கலாம். மேலும் இதனைப் பயன்படுத்துவோர் தங்களது ஆதார் புரொஃபைலை க்யுஆர் கோட் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

போஸ்ட் இன்போ
பதிவுத் தபால் வந்து சேரும் தகவல், பார்சல்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது, அருகில் உள்ள தபால் நிலையங்கள், பதிவுக் கட்டணங்களுக்கான விவரம், போன்றவற்றை இந்த செயலி மூலம அறிந்து கொள்ளலாம். இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உங்களுக்கு விருப்பமா? அப்போது இந்த செயலி தேவைப்படும்

மைகவ்
மைகவ் (எனது அரசாங்கம்) என்ற செயலியை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் அரசுக்கான உங்களது யோசனைகள், கருத்துகள், ஆலோசனைகளை வழங்கலாம். அது அந்தந்தத் துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பணமற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்போராக இருந்தால் பிம் ஆப்
பாரத் இன்டர்ஃபேஸ் பார் மணி அல்லது பிம் செயலியை உங்கள் செல்போனில் வைத்திருந்தால், வெளியூரில் இருக்கும் நபருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பெரிய வங்கிகள் அனைத்தும் பிம் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்துக்கு உதவும் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்
இது பற்றி பலரும் அறிந்தே இருப்பார்கள். ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இந்த ஆப் நிச்சயம் உதவும்.

தேர்தல் சமயத்தில் உதவும் சிவிஜில்
சிவிஜில் என்ற செயலியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் நடக்கும்  நேரத்தில் செய்யப்படும் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் வேட்பாளர்களை தரக்குறைவாக பேசுவது தொடர்பான விவரங்களை அளிக்கலாம். விடியோவையும் அனுப்ப முடியும்.

எம்பரிவாஹன் செயலி இருந்தால் லைசென்சுகளை கையில் வைத்திருக்க வேண்டாம்
உங்கள் ஓட்டுநர் உரிமம், கார் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றை நீங்கள் டிஜிட்டல் மயமாக செயல்படுத்த உதவுகிறது எம்பரிவாஹன் செயலி. இது மட்டுமல்ல, பயன்படுத்திய வாகனங்களை வாங்க விரும்புவோர், அந்த வாகனம் பற்றிய விவரங்களையும் அதற்கு முன் பயன்படுத்தியவர்கள் பற்றியும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

கிசான் சுவிதா செயலி
வானிலை, முன்னெச்சரிக்கை, சந்தை நிலவரம், விளைச்சலுக்கான டிப்ஸ் என விவசாயிகளுக்கான செயலியாக இது அமைந்துள்ளது. ஒரே சந்தைக்கு வரும் ஒரே மாதிரியான விளைச்சல் பொருட்கள் பற்றி முன்கூட்டியே அறிந்து கொண்டால் விவசாயிகள் சந்தையில் கடும் விலை சரிவில் இருந்து மீளப்படும் என்றும் தெரிக்கவிப்பட்டள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts