அடுக்குமாடி வீடா, தனி மனையா?
ஆனந்தர்
அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய இரண்டாம் கட்ட மாநகரங்களுக்கும் இன்று பரவியிருக்கிறது. ஆனாலும் இன்னும் சிலருக்கு அடுக்குமாடிக் கலாச்சாரத்தில் ஓர் ஒவ்வாமை இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என மனை வாங்கி வீடு கட்டலாம் என நினைப்பார்கள். சிலர் மனையா, அடுக்குமாடி வீடா என்ற குழப்பத்தில் இருப்பார்கள். எது சிறந்தது என்ற கேள்வி எழும். இந்த இரண்டிலும் சில சாதகங்கள் உண்டு. பாதகங்கள் உண்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து எது சிறந்தது எனத் தேர்வுசெய்யலாம்.
முதலில் மனை வாங்குவதில் சில அனுகூலங்களைப் பார்க்கலாம். நம் வசதிக்கு ஏற்பச் சிறியதாகவோ பெரியதாகவோ அதில் கட்டிடம் கட்டிக்கொள்ளலாம்.
சொந்த மனை என்பதால் நம் கனவுத் தோட்டத்தையும் வீட்டு மனையில் நிர்மாணிக்கலாம். மேலும் நம் மனையில் என்னென்ன செய்து பார்க்க விரும்புகிறோமோ அதை எந்தத் தடையும் இன்றி நிறைவேற்றலாம். வீட்டுமனையில் சில இடங்களை வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம். மனை உள்ள பகுதியின் தன்மைக்கேற்ப கடைகள் மற்றும் வணிக வளாகங்களையும் கட்டலாம்.
மனை வாங்குவதில் உள்ள பாதகங்களைப் பார்ப்போம். ஒரு வீட்டு மனையை வாங்கும்போது சட்ட ரீதியாகப் பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். நில உரிமை தொடர்பான பத்திரம் தெளிவாகவும், வில்லங்கம் இல்லாமலும் இருத்தல் அவசியம். தாய்ப் பத்திரம் வில்லங்கம் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டியது அவசியம். வாங்கப்போகும் மனையின் லே அவுட்டில் வழியும், சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். மனை எந்த மண்டலத்தில் வருகிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம். வர்த்தக மண்டலப் பகுதிக்கு உட்பட்டதெனில் அதைக் குடியிருப்பாகப் பயன்படுத்த முடியாது.
அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்குவதிலும் சில சாதகங்கள் உள்ளன. முக்கியமாக அடுக்குமாடி வீடுகள் பாதுகாப்புணர்வை அளிப்பவை. அரசு நடைமுறைகள் அனைத்தையும் கட்டுமான நிறுவனமே பார்த்துக்கொள்ளும். குறிப்பிட்ட வரைமுறைகளுக்குள் உங்களுக்குத் தேவையான மாறுதல்களைச் செய்துகொள்ள முடியும். பராமரிப்பு தொடர்பான கவலை தேவையில்லை.
அடுக்குமாடி வீடுகளைப் பொறுத்தவரை உங்களுக்கான இடம் என்பது வரைமுறைக்குட்பட்டது என்பதுதான் இதிலுள்ள முக்கியமான பாதகம். விரிவாக்கம் என்பது சாத்தியம் இல்லை. எந்த மாற்றம் வேண்டுமானாலும் அந்தப் பரப்பளவுக்குள்தான் செய்துகொள்ள முடியும். மற்ற குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்துதான் பொது இடத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒலி மாசுபாடு அதிகம். மற்ற தொந்தரவுகளும் உண்டு. உங்களது பால்கனி மட்டுமே உங்களுக்குரிய தோட்டமாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு மட்டுமே விடமுடியும். அதன் மூலம் வருவாய் மட்டுமே சாத்தியம்.
Saturday, 23 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment