சிகரம் தொட்ட பெண் மருத்துவர் | இன்று (பிப்ரவரி3) உலகின் முதல் பெண் மருத்துவர் எலிசபெத் ப்ளாக்வெல் பிறந்தநாள்.| இங்கிலாந்து நாட்டில், 1821-ம் ஆண்டு பிரிஸ்டல் என்கிற நகரின் அருகில் உள்ள ஊரில் பிறந்த எலிசபெத் ப்ளாக்வெல் என்கிற இளம்பெண்ணுக்கு மருத்துவர் ஆகவேண்டும் என்கிற கனவொன்று இருந்தது. அக்கனவினை நிறைவேற்றிக்கொள்ள அவர் எதிர் கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உடன்பிறந்தோர் எட்டு பேருடன் அப்பா-அம்மா என பெரிய குடும்பமாய் பிரிஸ்டல் நகரில் சுகமாய் வாழ்ந்துவந்தனர். தந்தை தம்மக்களுக்கு முடிந்தவரை எல்லா வசதிகளும் செய்துக் கொடுத்தார். பெண் விடுதலை, சமூகநீதி இவைகளைக் குறித்தும் அறிவு புகட்டினார். அக்காலக்கட்டத்தில் ஊரெங்கும் பரவியிருந்த காலரா நோயின் கொடுமைக்கு அஞ்சி, குடும்பம் 1832-ல் அமெரிக்காவில் நியூயார்க் பகுதிக்கு குடிப்பெயர்ந்தது. பதினோரு வயது நிரம்பிய எலிசபெத் படிப்பில் சுட்டியாக விளங்கினார். எல்லா பாடங்கள், பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகள், இசை, ஓவியம் என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். எதிர்ப்பாராத நேரத்தில், தந்தை இறந்து போகிறார். குடும்பம் தீராத வறுமையில் வீழ்கிறது. இருந்தாலும் அம்மா ஹன்னா, எலிசபெத் மற்றும் இரு மூத்த சகோதரிகளுடன் பெண்களுக்கான தனியார் பிரெஞ்சு பள்ளிக்கூடம் தொடங்கி, கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தினர். சகோதரர்கள் வளர்ந்து சம்பாதிக்கும் காலம்வரை பள்ளிக்கூடம் நடந்தது. எலிசபெத்தின் தோழியொருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில், "ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெறுவது பெரும்சிரமமாக இருந்தது. பெண்மருத்துவர்கள் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும், நீ மருத்துவம் படிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். எலிசபெத்துக்கு விருப்பம் இல்லையென்றாலும், தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற மருத்துவம் படித்தே தீருவது என தீர்மானிக்கிறார். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. படிப்பதாக கூறினால்தான், திருமணத்தை தள்ளிப் போடலாம். இது நடந்தது 1845-ம் ஆண்டில். மருத்துவராவதற்கு எங்கு படிக்கவேண்டும் என்கிற தகவல் எலிசபெத்துக்கு தெரியாது. குடும்பத்திற்கு வேண்டிய மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் அது நடைமுறையில் ஒத்துவராது, காரணம், பெண்கள் பலதடைகள் தாண்டவேண்டும். அதற்கான, தகுதியும், திறமையும், தைரியமும் அற்றவர்கள் என்று கூறி எலிசபெத்தின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டனர். வேறுயாராக இருந்தாலும், மனந்தளர்ந்து மருத்துவக் கனவை கலைத்திருப்பார்கள். ஆனால், எலிசபெத் எப்படியாவது படித்தே தீருவது என்று சபதம் மேற்கொள்கிறார். மருத்துவம் படிக்க அன்றைய காலத்தில் மூவாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவையாக இருந்தது. கையில் பணம் எதுவும் இல்லை. ஆனால், எலிசபெத் முயற்சியை கைவிடவில்லை. இரண்டாண்டுகள் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு இசை சொல்லிக் கொடுத்து சிறுக சிறுக பணம் சேர்த்து மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கிறார். பிலடெல்பியா மாநிலத்திலுள்ள நான்கு புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார். பெண் என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பங்களை தள்ளுபடி செய்துவிடுகின்றனர். சலிக்காது, மேலும் இருபத்தியொன்பது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார். துரதிருஷ்டவசமாக ஒரு கல்லூரி கூட அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்கள், எல்லா சமூகத்திலும் காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். கல்வி மறுக்கப்பட்டது. ஆண்கள் அளவிற்கு அறிவும், திறமையும் கிடையாது என்பதெல்லாம் அவர்கள் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள். காலம் விரயமாகிறது என்றுணர்ந்த எலிசபெத் தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் உடற்கூறியல் பாடம் படித்தார். தொடர்ந்து, பிரபலம் இல்லாத கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார். நியூயார்க் மாநிலத்திலுள்ள ஜெனீவா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், மற்ற ஆண் மாணவர்களிடம் ஒப்புதல்பெற, பெண் மாணவியை அனுமதிக்கலாமா என்று நிர்வாகம் கருத்துக் கேட்டது. இது ஏதோ நகைச்சுவை என்றெண்ணி, மாணவர்கள் விளையாட்டாக 'சரி' என்றார்கள். எலிசபெத் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிட்டார். வேற்றுக்கிரகவாசி போல ஆண்களின் கண்களுக்கு புலப்பட்டார். புறக்கணிப்பும், எள்ளல்களும், அவமானங்களும் தொடர்ந்தன. சிறிதும் அஞ்சாமல், அவைகளை உரமாகிக் கொண்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினார். 1849-ல் தனது இருபத்தியெட்டாம் வயதில் வகுப்பிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இருந்தபோதிலும், அவரை மருத்துவராக பணியாற்ற மருத்துவக் குழு அனுமதிக்கவில்லை. மனமொடிந்த நிலையில், பிரெஞ்சு தலைநகர் பாரிசில் புகழ்ப்பெற்ற மருத்துவமனையொன்றில் மகப்பேறு இயலில் மேல்படிப்பு மாணவராக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மருத்துவர் என்கிற தகுதி தர முடியாது, வேண்டுமானால் பேறுகால உதவியாளராக இருக்கலாம் என்று கூறிவிட்டனர். ஏமாற்றமாக இருந்தாலும் இதுவாவது கிடைத்ததே என்று எலிசபெத் ஏற்றுக்கொண்டார். மீண்டும் சோதனை. இம்முறை உடல் சார்ந்தது. ஒரு கண்ணில் சீழ் பிடித்து சிகிச்சை பயனின்றி பார்வை போனது. அறுவை சிகிச்சை நிபுணர் ஆகவேண்டும் என்கிற கனவு அத்தோடு தகர்ந்தது. படிப்பை பாதியில் நிறுத்தி இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனையொன்றில் பயிற்சி மாணவராக சேர்ந்தார். 1853-ல் எலிசபெத்தின் சகோதரி எமிலி மருத்துவ படிப்பை முடித்தார். தான் இரட்டிப்பு பலம் பெற்றதாக கருதினார். சகோதரிகள் இருவரும் நியூயார்க் நகரில் பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவமனை தொடங்க முயற்சித்தனர். மருத்துவமனைக்கு இடமளிக்க யாரும் முன்வரவில்லை. பல்வேறு சிரமங்களுக்குப் பின் மருத்துவமனையை தொடங்கினர். இவர்களை நம்பி சிகிச்சைப்பெற ஒருவரும் வரவில்லை. போராடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியை காண்கின்றனர். சிகிச்சையளிப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பல பெண் மருத்துவர்கள் உருவாக்க மாணவிகளுக்கு பயிற்சியளிக்கின்றனர். மெதுமெதுவாக வளர்ந்து பத்து ஆண்டுகளில் மருத்துவமனை பெரும் சிறப்பு பெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் அவர் தொண்டு விரிவடைகிறது. 1879-ல் மருத்துவ பணியிலிருந்து விலகி துறைச் சார்ந்த புத்தகங்கள் எழுதிக் குவித்தார். 1907-ம் ஆண்டு தனது 86-வது வயதில் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்து நாட்டில் கில்முன்னில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அவர் இறக்கும்போது இவ்வுலகில் ஏழாயிரம் பெண் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள். யாரும் அதுவரை பயணிக்காத புதுப்பாதையினை தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டார். அவரால், எண்ணற்றோர் பயனடைந்தனர். எலிசபெத் போன்றே நமது மண்ணில் பல போராட்டங்களுக்குபின் முதல் பெண்மணியாக முத்துலட்சுமி ரெட்டி மருத்துவம் படித்தது நமக்கு பெருமைதானே.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment