மழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் | கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல சில நாட்களுக்கு முன் செங்குன்றம் அருகே கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் மழையின்போது மின்சாதனங்களைப் பயன்படுத்துவோர், திறந்தவெளியில் நிற்போர் மீதே மின்னல் தாக்குகிறது. செல்போன் மட்டுமல்லாமல் எந்த வயர்லெஸ் மின்சாதனங்களைப் பயன் படுத்தினாலும் மின்னல் தாக்காது என அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறைத் தலைவர் எஸ்.முத்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'தி இந்து'விடம் அவர் கூறியதாவது: செல்போன் பயன்படுத்துவதால் மின்னல் தாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் செல்போன் உட்பட எந்த வயர்லெஸ் கருவி வழியாகவும் மின்னல் தாக்குதல் நடப்பதில்லை. மாறாக மின் இணைப்பில் செருகப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து. உதாரணமாக, செல்போனை சாதாரணமாகப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால் சார்ஜரில் இணைத்து பயன்படுத்தும்போது மின்னல் தாக்க வாய்ப்புள்ளது. செல்போன் கதிர்வீச்சுக்கும் மின்னலுக்கும் தொடர்பில்லை. வீட்டின் மீது மின்னல் தாக்கினாலோ அல்லது அருகாமை பகுதியில் மின்னல் தாக்கினாலோ, சுவர்கள் மற்றும் மின் இணைப்பு வழியாக மின்னலின் அதிகளவு மின்சாரம் பாயும். அப்போது சார்ஜரில் போடப்பட்ட செல்போனைப் பயன்படுத்தும்போது, பயன்படுத்துவோர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும். அதேவேளையில் கேபிளால் இணைக்கப்பட்ட லேண்ட்- லைன் தொலைபேசியால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே மழை பெய்யும்போது லேண்ட்- லைன் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கும் முறைகள் மழை வரும்போது மரங்களுக்கு அடியிலோ அருகாமையிலோ நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்நிலைகளின் அருகிலும் இருக்கக்கூடாது. திறந்த வெளியில் இருப்பதை தவிர்த்து, வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும். மின்னல் தாக்கும்போது மின்சாரம், கம்பி வேலிகளில் பயணிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை தொடக் கூடாது. ஒருவேளை மழை பெய்யும்போது வெளியில் சிக்கிக் கொண்டால், காருக்குள் சென்றுவிட வேண்டும். காருக்குள்ளும் கையை குறுக்கி வைத்திருக்க வேண்டும். வானொலி, ஜிபிஎஸ் வசதிகளை இயக்கக் கூடாது. அதேபோல, வீடுகளின் மீது சிறிய இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவது மின்னல் தாக்குவதில் இருந்து காப்பாற்றும். முன்னெச்சரிக்கை வசதிகள் பொதுவாக குறிப்பிட்ட இடத்தில்மின்னல் தாக்கினால், அதே இடத்தில் மற்றொரு மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம். எனவே மின்னல் தாக்கிய இடங்களை அந்தந்த பொதுமக்களுக்கு தெரிவிக்க வசதி ஏற்படுத்தலாம். ஏஎம் (Amplitude Modulation) வானொலிகள் மின்னல் தாக்கிய அலைவரிசையைத் தெரியப்படுத்தும். அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தெந்த இடங்களில் மின்னல் தாக்கும் என்பதை கணித்து, மக்களுக்கு தெரிவித்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என்றார். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெ.எம். ருத்ரன் பராசு
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment