ஷியாம் பெனகல் | பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் | உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் (Shyam Benegal) பிறந்தநாள் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:  செகந்திராபாத்தில் (1934) பிறந்தவர். தந்தை புகழ்பெற்ற புகைப்பட நிபுணர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் நடிகருமான குருதத், இவரது மாமா. இயல்பாகவே இவருக்கு திரைப்படத் துறையில் ஆர்வம் பிறந்தது. அப்பா கொடுத்த கேமராவைக் கொண்டு 12 வயதில் சினிமா எடுத்தார்.  ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பின்னாளில் இங்கு ஹைதராபாத் ஃபிலிம் சொசைட்டி தொடங்கினார். பம்பாயில் உள்ள விளம்பர ஏஜென்ஸியில் 1959-ல் காப்பி ரைட்டராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள் தயாரித்து வந்தார். 900-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள் தயாரித்துள்ளார்.  புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவராக 2 முறை இருந்தார். அப்போதே ஆவணப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினார். இவரது 'எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்' ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே குறித்த ஆவணப் படங்கள் உட்பட பல ஆவணப்படங்கள் எடுத்தார்.  ஹோமிபாபா ஃபெலோஷிப் பெற்று நியூயார்க்கில் உள்ள சில்ட்ரன்ஸ் டெலிவிஷன் பயிற்சிப் பட்டறையில் பணியாற்றினார். பம்பாய் திரும்பியவர், 1973-ல் அங்க்கூர் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது சிறந்த தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.  அடுத்தடுத்து வந்த இவரது திரைப்படங்களின் வர்த்தக ரீதியிலான வெற்றி, இந்தியத் திரையுலகில் 'இணை திரைப்பட இயக்கம்' உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. அங்க்கூர், நிஷாந்த், மந்த்தன், பூமிகா என இவர் இயக்கிய முதல் 4 திரைப்படங்கள் இந்தி திரையுலகில் ஒரு புதிய பாணியை உருவாக்கின.  தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் தனி முத்திரை பதித்தார். 1978-ல் இவர் தயாரித்து இயக்கிய 'மந்த்தன்' திரைப்படத்துக்கான திரைக்கதையை இவரும் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர்.  பல குறும்படங்களையும் தயாரித்துள்ளார். 1980-களில் தூர்தர்ஷனுக்காக 'யாத்ரா', 'கதா சாகர்', 'பாரத் ஏக் கோஜ்' உள்ளிட்ட பல தொடர்களையும் தயாரித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான வரலாறு தொடர்பாக 'சம்விதான்' என்ற திரைப்படத்தை எடுத்தார்.  மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றினார். பத்ம, பத்மபூஷண், தாதா சாஹேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அங்க்கூர், மந்த்தன், நிஷாந்த், ஜுனூன், ஆரோஹன் உள்ளிட்ட இவரது 7 படைப்புகளுக்கு சிறந்த இந்தி திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.  கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளார். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன், எக்ஸலன்ஸ் இன் சினிமா அவார்ட் என்ற விருதினை வழங்கியது.  சிறந்த இந்தி இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே இயக்குநர் என்ற தனிப்பெருமை பெற்றவர். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகப் புகழ்பெற்றுள்ள ஷியாம் பெனகல் இன்று 83-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். - ராஜலட்சுமி சிவலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
இறுதி வெற்றி நேர்மைக்கே...! பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இன்று (டிசம்பர் 9-ந்தேதி) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம். ‘இன்னைக்கி நான் ஊருக...
No comments:
Post a Comment