Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சீறி எழுந்த வங்கத்து சிங்கம்!


1929-இல் லாகூர் காங்கிரஸ் மாநாடு. இந்த மாநாட்டிலிருந்துதான் மகாத்மா காந்திக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் முரண் தொடங்கியது. மகாத்மா காந்தி கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்றுப்பேசிய சுபாஷ் சந்திரபோஸ், அதில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். பரிபூரண சுதந்திரம் என்பதற்கான போராட்டம் ஒருபுறம் நடைபெறட்டும்; மறுபுறம் நாம் "சுதந்திர இந்திய போட்டி அரசாங்கம்' என்று ஒன்றை பிரகடனம் செய்து நடத்த வேண்டும் என்பதுதான் அந்தத் திருத்தம். இதை மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கு மகத்தானது.

ஆரம்ப காலம் மற்றும் அரசியல் பிரவேசம்:

இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திரபோஸ், பம்பாய் துறைமுகத்தில் இறங்கி மகாத்மா காந்தியைச் சந்தித்தார். அப்போது காந்திஜி, "நீ வங்காளத்தைச் சேர்ந்தவன். உன் மாநிலத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் இருக்கிறார். அவரைச் சந்தித்து அவர் வழியில் போராட்டத்தில் இறங்கு" என்று வழிகாட்டினார்.

சித்தரஞ்சன் தாஸின் வழிகாட்டுதலின் பேரில், வங்காளத்தில் தேசியக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற நேதாஜி, தன் பேச்சால் இளைய சமுதாயத்தை எழுச்சி கொள்ளச் செய்தார்.

முதல் கைது மற்றும் மக்கள் சேவை:

வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. வங்காளத்தில் ஏற்பட்ட பெரும் கிளர்ச்சிக்குக் காரணமானவர் நேதாஜி என அறிந்து பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. சிறை மீண்டபின், வெள்ள நிவாரணக் குழுவில் செயலாளராகப் பணியாற்றி மக்கள் சேவை செய்தார்.

கல்கத்தா மாநகராட்சி மற்றும் மீண்டும் சிறை:

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து, காங்கிரஸின் உட்கட்சியாக 'சுயராஜ் கட்சி'யை உருவாக்கினார். 1924-இல் கல்கத்தா நகர கார்ப்பரேஷன் தலைவராக சித்தரஞ்சன் தாஸ் இருக்க, நேதாஜி போஸ் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். மாநகர நிர்வாகம் சூடுபிடித்தது; தேசியம் வீதியெங்கும் பரவியது.

இந்த நிலையில், பிரிட்டிஷ் அரசு 'ஆள் தூக்கிச் சட்டம்' என்ற அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி, காரணம் சொல்லாமலும், விசாரணை இல்லாமலும் சுபாஷ் சந்திரபோஸைக் கைது செய்து கல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. அவரை விடுவிக்கக் கோரி மகாத்மா காந்தி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, மோதிலால் நேரு போன்றோர் கல்கத்தாவுக்குச் சென்று போராடினர்.

மாண்டலே சிறைவாசம் மற்றும் விடுதலை:

பயந்துபோன பிரிட்டிஷ் அரசு சுபாஷை பர்மா மாண்டலே சிறைக்கு மாற்றியது. மாண்டலே சிறைவாசம் போஸின் உடல்நலனை வெகுவாகப் பாதித்தது. இக்காலகட்டத்தில், சித்தரஞ்சன் தாஸ் மரணமடைந்ததால் போஸ் கலங்கிப் போனார்.

"மன்னிப்புக் கேள்! விடுதலை செய்கிறோம்" என்று பிரிட்டிஷ் அரசு கூறியபோது, போஸ் அதை மறுத்துவிட்டார். உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், சிறைக்குள் அவர் இறந்தால் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என அஞ்சிய பிரிட்டிஷ் அரசு அவரைக் கட்டாயமாக விடுதலை செய்தது.

பூரண சுதந்திரத்திற்கான போராட்டம்:
  • 1927-இல் சென்னைக்கு வந்த போஸ், அங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "இந்தியாவின் லட்சியம் பூரண சுதந்திரம்" எனத் தீர்மானம் நிறைவேற்ற உதவினார்.
  • 1928-இல் மகாராஷ்டிரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் அதே தீர்மானத்தை வலியுறுத்தினார்.
  • "குடியேற்ற அந்தஸ்து இப்போதைக்கு போதுமே" என்று மோதிலால் நேருவும் அவரது ஆதரவாளர்களும் கூறியபோது, போஸ் அதை ஏற்கவில்லை.
காந்தியுடன் முரண்பாடு மற்றும் தலைமைப் பொறுப்பு:

1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டிலிருந்துதான் மகாத்மா காந்திக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் இடையே கொள்கை முரண்பாடு தொடங்கியது. காந்தியின் தீர்மானத்தை வரவேற்ற போஸ், அதில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்: "பரிபூரண சுதந்திரத்திற்கான போராட்டம் ஒருபுறம் நடைபெறட்டும்; மறுபுறம் நாம் 'சுதந்திர இந்திய போட்டி அரசாங்கம்' என்று ஒன்றை பிரகடனம் செய்து நடத்த வேண்டும்." இதை மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, முதலாம் உலகப் போர் காந்திஜியையும் போஸையும் எதிரெதிர் முனைகளில் நிறுத்தியது. அயர்லாந்து மக்களைப் போல பிரிட்டனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார் நேதாஜி. ஆனால், மகாத்மா காந்தி பிரிட்டனை ஆதரித்து படையில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

மகாத்மா காந்தி, பண்டித நேரு உட்பட யாரும் ஆதரிக்காத நிலையிலும், சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஃபார்வர்ட் பிளாக் மற்றும் ஆயுதப் போராட்டம்:

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, மக்களைத் திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து பரிபூரண விடுதலையைச் சாதிப்பதே அவரது திட்டமாக இருந்தது. ஆனால், மகாத்மா, பண்டித நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு ஒத்துழைக்கவில்லை.

பின்னர், காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்த நேதாஜி, 'ஃபார்வர்ட் பிளாக்' என்ற அமைப்பை உருவாக்கி நாடு முழுவதிலும் பொறுப்பாளர்களை நியமித்தார்.

இந்திய தேசிய ராணுவம் மற்றும் தியாகம்:

ஆயுதம் திரட்டி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி பரிபூரண சுதந்திரம் அடைய, இந்தியாவை விட்டு வெளியேறி படை திரட்டி புதிய அரசாங்கம் அமைத்து "சலோ டெல்லி" என்று முழங்கினார். இதனால் பிரிட்டிஷ் அரசு அதிர்ச்சி அடைந்தது.

நேதாஜி போஸ் இந்திய தேசிய ராணுவம் அமைத்தார். "என் தாய் திருநாட்டை அடிமை செய்ய எவருக்கும் உரிமை இல்லை; என் உயிரைக் கொடுத்தும் என் தாய் நாட்டை விடுதலை செய்வேன்!" என்று முழங்கி நடைபயின்ற அந்தத் தலைவன் இந்திய மண்ணுக்குள் வரவில்லை; லட்சியப் போர் பயணம் பாதியில் நின்றுபோனது.

களம் கண்ட நேதாஜி களத்திலேயே மறைந்து போனார். இந்திய சுதந்திர சேனையும் நேதாஜியும் தில்லிக்கு வந்திருந்தால் மவுண்ட்பேட்டனின் அரசியல் சூது தோற்றுப் போயிருக்கும்; நாடு பிளவுபட்டிருக்காது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement