புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய புதிய மரபணுக்கள்
தொகுப்பு: ஹரிநாராயணன்
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்று வளர்ச்சிக்கு ஒரு இலக்கணம் வகுத்தார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
புத்திக்கூர்மை என்பது உயிர் வளர்ச்சி மற்றும் பரிணாமம் ஆகியவற்றின் முக்கியமான பண்புகளுள் ஒன்று. மனிதர்களாகிய நாம் மிகவும் சக்திவாய்ந்த உயிரினமாக இந்த பூமியில் வாழ்கிறோம். டைனோசர் உள்ளிட்ட மிக மிகப்பெரிய உடல் அமைப்பு விலங்குகள் இந்த பூமியில் வாழ்ந்துள்ளன. ஆனாலும் அவற்றை விட அளவில், உருவில் மிகச்சிறிய மனிதர்களுடன் ஒப்பிடுகையில், டைனோசர்கள் மிகவும் பின்தங்கிய உயிரினம் என்பதே நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.
அதற்குக் காரணம், மனிதனின் சக்திவாய்ந்த மூளையும், அதனால் உருவாகும் அவனது அறிவு, புத்திக்கூர்மையும் டைனோசர் போன்ற ராட்சத விலங்குகளின் உடலில் இல்லை என்பதுதான்.
ஆக, இவ்வுலகில் உள்ள பிற உயிர்களிடமிருந்து மனிதனை தனித்துக் காட்டுவது அவனது புத்திக்கூர்மைதான். இதற்கு காரணமான அறிவியல் காரணிகள் மற்றும் உயிரியல் மூலக்கூறுகள் எவை என்பதைக் கண்டறியும் ஆய்வுப்பணி கடந்த சில நூற்றாண்டுகளில் பலமடங்கு முன்னேறியுள்ளது.
அந்த வரிசையில், புத்திக்கூர்மைக்கு காரணமான மரபணுக்களை கண்டறியும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 1,016 மரபணுக்கள் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையதாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மரபணுக்களில் பெரும்பாலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படவில்லை என்பதும், அறிவியல் உலகத்துக்கே பரிச்சயமில்லாத புதிய மரபணுக்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்தில் உள்ள வ்ரிஜே யுனிவர்ஸ்டெய்ட் ஆம்ஸ்டர்டாம் எனும் பல்கலைக்கழகத்தின் மரபியலாளர் டேனியல் போஸ்துமா தலைமையிலான ஆய்வுக்குழு இந்த மனித புத்திக்கூர்மை-மரபியல் தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியது. இதில், சுமார் 14 ஐரோப்பிய பரம்பரைகளைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த ஆய்வில், மனித மரபுத்தொகையில் உள்ள மற்றும் மனித புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய சுமார் 190 புதிய மரபணு மையங்களும், 939 புதிய மரபணுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம், மனித புத்திக்கூர்மைக்கு காரணமான மரபியல் அடிப்படை மூலக்கூறுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆய்வில் பங்குபெற்ற மக்கள் ‘நியூரோ காக்னிடிவ் டெஸ்ட்’ எனப்படும் புத்திக்கூர்மை தொடர்பான பரீட்சைகளையும் மேற்கொண்டனர் என்பதும், அதன்மூலம் அவர்களின் புத்திக்கூர்மை பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது.
புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய, மியூட்டேஷன்கள் எனப்படும் மரபணுத் திரிபுகளும் இந்த ஆய்வில் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட சுமார் 90 லட்சம் (single nucleotide polymorphisms, SNPs) வகை மரபணுத் திரிபுகளில் சுமார் 205 மரபியல், டி.என்.ஏ பகுதிகள் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையதாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட, புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய மரபணுக்கள், மக்களின் சூட்டிகைத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அல்செய்மர்ஸ் நோய், மனச்சோர்வு, ஸ்கீசோப்ரீனியா ஆகிய நோய்கள் ஏற்படாமல் மக்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வினோதமாக, இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள, புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய மரபணுக்கள் மூளை வளர்ச்சி குறைபாடுகளுள் ஒன்றான ஆட்டிசம் ஏற்படும் ஆபத்து மற்றும் மக்களின் நீண்ட ஆயுள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாய் இருந்தது கண்டறியப்பட்டதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும்.
இதன்மூலம், புத்திக்கூர்மையுடன் தொடர்புடைய மரபணுக்கள் அல்லது மரபணு மாற்றங்களைக் கொண்ட மனிதர்கள் அதீத புத்திக்கூர்மை கொண்டவர்களாகவும், நீண்ட ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர் என்கின்றன இந்த ஆய்வின் முடிவுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
பெண்ணுரிமை போற்றிய பல்துறை வித்தகர் திரு.வி.க. பேராசிரியை பானுமதி தருமராசன் திருவாரூர் விருத்தாசல முதலியாரின் மகன் திரு.வி.கல்யாணசுந்...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
காலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பேராசிரியர், முனைவர் பி.யோகீசுவரன் தமிழ்க் கவிஞர்கள் கூட்டத்தில் முதன்மையானவர் கவிமண...
-
பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வ...
-
'நீட் ' இனி என்ன செய்யும்? 'நீட் ' தேர்வு (National Eligibility Cum Entrance Test - NEET) நெடுவாசலை போன்று முக்கிய...
No comments:
Post a Comment