Monday 6 January 2020

இந்தியாவின் சாதனைகள்...

1. எல்லை பாதுகாப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மைக்காக துல்லியமாக படம்பிடிக்கும் ‘கார்டோசாட்-3’ செயற்கை கோளை இந்தியா நவம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பியது. இத்துடன் 13 அமெரிக்க செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதேபோல ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு பணிக்காக ‘எமிசாட்’ என்ற மற்றொரு செயற்கை கோளும் அனுப்பப்பட்டது. மாணவர் தயாரித்த ‘கலாம்சாட்’ சிறிய செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

2. சந்திரயான்2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்த விக்ரம் லேண்டர் ஆய்வுக்கலம் நிலவில் தரையிறங்கிய சமயத்தில் விபத்துக்குள்ளாகி செயலிழந்தது.

3. கங்கை நதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணுயிர்ச்சூழலை ஆராயும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. புதிய நுண்ணுயிர்கள் உள்ளனவா? அவற்றால் மனித இனத்துக்கு நோய்பரவுமா, புதிய நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் நுண்ணுயிர்கள் இருக்கின்றனவா? என்று இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

4. அறிவியலை வளர்க்கும் விதமாக டி.டி. சயின்ஸ் மற்றும் இந்தியா சயின்ஸ் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட்டது. இந்தியா சயின்ஸ் சானல் இணையதளத்தில் மட்டும் செயல்படும். பிரதமர் மோடி இந்த சேனல்களில் அவ்வப்போது உரையாற்றுகிறார்.

5. ராணுவ ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ., குறைந்தபட்ச தொலைவுக்குள் துல்லிய தாக்குதல் நடத்தும் ‘ஆஸ்திரா’ ஏவுகணை சோதனையை நடத்தியது. இது முக்கிய நகரங்கள், தளவாடங்களில் நடைபெறும் தாக்குதல்களை முறியடிக்க பயன்படுத்தப்படும்.

6. மனிதனை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 7 நாட்கள் தங்க வைக்கும் ‘ககன்யான்’ திட்டத்தை 2022-ல் செயல்படுத்தவும், 2030-ல் இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவவும் திட்டங்கள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. இதேபோல மாணவர்களை விண்வெளி ஆய்வுக்கு ஊக்குவிக்கும் ‘யங் சயின்டிஸ்ட் புரோகிராம் (யுவிகா)’ திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.

No comments:

Popular Posts