ஜல்லிக்கட்டு: தமிழரின் கம்பீரம்...!
தொளசம்பட்டி குமார் மாணிக்கம்,நூலகர்.
ஜ ல்லிக்கட்டு இது தமிழரின் அடையாளம்! தமிழரின் கம்பீரம்! கி.மு இரண்டாயிரத்திலே ஏறுதழுவல் என்ற காளையை அடக்கும் வீர விளையாட்டு இருந்ததை இலக்கியங்களில் காணலாம். சிந்து சமவெளி கால கல்வெட்டில் காளையை அடக்குவது போலவும் அந்த காளைமனிதனை தூக்கி வீசுவது போலவும் சாட்சியாக நிற்கிறது.
புது டெல்லி தேசிய மியுசியத்தில் சல்லி என்பது காளையின் கழுத்தில் அணியும் புளியங்கம்பினாலான ஒரு வளையம் இது இன்றும் வழக்கத்திலுள்ள ஒன்றாகும். வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே நாணயங்களுக்கு “சல்லிகாசு” என்ற பெயர் இருந்தது இந்த சல்லி காசுளை காளையின் கொம்பில் கட்டப்பட்டு ஜல்லிக்கட்டின் போது இளைஞர்கள் பரிசாக பெறுவார்கள் இதுவே பிற்காலத்தில் பேச்சுவழக்கில் ஜல்லிக்கட்டு என்று பெயரானது.
ஜல்லிக்கட்டு பலவகைகளில் நடத்தப்படுகின்றன. அதில் குறிப்பாக வேலி ஜல்லிக்கட்டில் ஒரு திடலில் முரட்டுக்காளைகள் அவிழ்த்துவிடப்படும் அவற்றை இளைஞர்கள் அடக்குவார்கள்.மற்றொன்று வாடிவாசல் ஜல்லிக்கட்டு இது தென்மாவட்டங்களில் அலங்காநல்லூர் போன்ற உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டாகும். ஸ்பெயின், மெக்சிகோ போன்ற பவேறு நாடுகளிலிருந்து தமிழரின் வீரத்தைக்காண சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த வகையில் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக “பராக்”.அதை இளைஞர் காளையன்கள் சீறிப் பாய்ந்து திமிலை பிடித்து அடக்குவது ஒருவகையாகும். இன்னொரு வகை வடம் மஞ்சுவிரட்டு இதில் காளையின் இருபுறமும் கயிறால் கட்டப்பட்டு பலர் பிடித்துக் கொள்ள சிலர் கொம்பில் உள்ள பரிசு காசுகளை பறித்து வருவார்கள். சங்க காலத்திலிந்தே வீரமும் காதலும் தமிழரின் ரத்தம் சதை நாடி நரம்பெல்லாம் ஊறிப்போன ஒன்றாக இருந்து வந்த நிலையில் வீரத்திற்கு காரணமான காளைகளை குறிவைத்தான் 1755- ல் ராபர்ட்கிளைவ் என்ற வெள்ளைக்காரன் அவன் ஆச்சரியத்துடன் பார்த்தது தமிழனின் விவசாய முறை!
அதற்கு காரணமான நாட்டு மாடுகள். நாட்டு மாடுகளை அழிக்கும் சூழ்ச்சி கிபி 1760 -ல் பசுவதை கூடங்கள் திறந்ததுதான். ஒன்றிரண்டாக இருந்த பசுவதை கூடங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல ஆயிரங்களாக அதிகரித்தது. அதே நேரத்தில் வெள்ளையர் ஆட்சியில் இந்திய நாட்டு மாடுகளின் விந்தணுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. மகாத்மா காந்தியிடம் ஒருமுறை பத்திரிகையாளர்கள் பசுவதை கூடங்கள் பற்றி கேட்டபோது இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கும் நாள் அனைத்து பசுவதை கூடங்களும் மூடப்படும் என்றார். காளைகளுக்கு உரிய கன்னிப் பெண்கள் காளைகளோடு அணிவகுத்து நிற்பது இந்த காளையை அடக்குபவனுக்கு இவள் உரியவள் என்பதை போல் தோன்றும். காளையை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கிறார்களே தவிர வேறு நோக்கத்திற்காக அல்ல. நாட்டு மாடுகளின் பெருக்கத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளையும் கோவில் காளைகளையும் விவசாயிகள் நம்பியுள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டால் நாட்டு மாடுகள் பெருகுவதற்கான ஒரு சந்தையை உருவாக்குகிறதென்றால் அது மிகையல்ல. தைமாதம் புதிய உழவுக்காலம் தொடங்குகிறது. இதே நேரத்தில் கால்நடைகளின் இனபெருக்க காலமும் என்பதால் ஜல்லிக்கட்டில் வலிமையான காளைகள் அடையாளம் காணப்பட்டு இனப் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. 2016-ம் ஆண்டில் காட்சிபடுத்தப்படும் பிராணிகள் பட்டியலில் காளைகளை சேர்க்கப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு தடை வந்தது .தமிழரின் கலாசாரத்திற்கு ஏற்ப்பட்ட தடைக்காக இன்றைய “ஆண்ட்ராய்டு” யுகத்தின் இளையதலைமுறை நாம் முதல் தலைமுறை பட்டதாரி என்ற அளவிலேயே இருந்துவிடுமோ? அல்லது கடைசி தலைமுறை விவசாயி என்பதை மறந்துவிடுமோ என தமிழ் சமுதாயம் கலங்கிய நேரத்தில் அதே “ஆண்ட்ராய்டு” வளர்ச்சியை வைத்தே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் கணினி வைரஸை போல் ஊடுருவி மெரினா புரட்சியாக அகிம்சை வழியின் வெற்றியினால் இரண்டாயிர வருட பாரம்பரியத்தை மீட்டெடுத்தது தமிழகம்.
தமிழக காளை வகைகளில் தொகுகாங்கேயம் காளை, உப்பளஞ்சேரி காளை, தேனி மலைமாடுகள் இதுமட்டுமல்ல நாட்டு மாடு வகைகளில் தொண்ணூற்று இரண்டு வகைகள் இருந்தன. ஆனால் இன்றைய தேதியில் எத்தனை வகை இனங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். அழிந்துவரும் பட்டியலில் நாட்டுமாடுகள் மட்டுமல்ல நாட்டுக் கோழியினங்கள், ஆட்டு இனங்கள்,இன்னும் உற்று நோக்கினால் நாட்டுநாய்களும் குறைந்து வருவது அதிர்ச்சிதான்! .தமிழர் திருநாள் போகியில் தொடங்கி தை முதல் நாள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் இதேநாளை வடமாநிலங்களில் மகரசங்கராந்தி விழாவாக கொண்டாடுகிறார்கள். தை இரண்டாம் நாள் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவது தமிழர் காளைகளை போற்றி கொண்டாடுகிறான் என்பதற்கு இதுவும் உதாரணம்.தை மூன்றாம் நாளில் காளைகளின் வீரத்திற்கான கொண்டாட்டம் காணும்பொங்கல். வரும் ஜனவரி பதினேழாம் தேதி தமிழக ஜல்லிக்கட்டில் “பார்க்கத்தானே போறிங்க” இந்த காளைகளோட ஆட்டத்தை!!
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
இறுதி வெற்றி நேர்மைக்கே...! பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இன்று (டிசம்பர் 9-ந்தேதி) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம். ‘இன்னைக்கி நான் ஊருக...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
No comments:
Post a Comment