வானில் இருந்த சிறு, சிறு துகள்கள், நாளடைவில் அல்டிமேட் டூலி கிரகமாக உருவாகி இருக்கலாம் என்பதை விளக்கும் படம்.
நா ம் வசிக்கும் பூமி, மற்றும் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கோள்கள் அனைத்தும் சேர்ந்து ‘சூரிய குடும்பம்’ என்று அழைக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தில் இது போன்ற கிரகக் கூட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வானத்தில் சஞ்சரிக்கும் சூரிய குடும்பமும், மற்ற கிரகங்களும், எப்போது, எதில் இருந்து, எவ்வாறு தோன்றின என்ற ஆரம்ப கால சூட்சுமம் இன்னும் ஆதாரபூர்வமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வானில், ‘பிக் பேங்க்’ எனப்படும் பெரு வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் பூமி உள்ளிட்ட கிரகங்கள் உருவாகி இருக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறப்படும் கருத்து எல்லோராலும் ஏற்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், இந்த கொள்கைக்கான உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடுவதில் வானவெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வில் அமெரிக்காவின் ‘நாசா’ முன்னணி வகிக்கிறது.
இதற்காக அண்டவெளியை நோக்கி ஏற்கனவே சில விண்கலன்களை அனுப்பிய நாசா, ‘ஹப்பிள்ஸ்’ என்ற வான்தொலைநோக்கி மூலம், 2014-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி, வானவெளியில் மிக அதிக தொலைவில் உள்ள சிறிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்தது.
ஏறக்குறைய நிலக் கடலை வடிவில், ஆனால் தெளிவு இல்லாமல் காணப்பட்ட அந்த கிரகம் தான் வானவெளியில் மிகத் தொலைவில், சூரிய குடும்பத்தின் கடைக்குட்டி கிரகம் எனக் கருதப்பட்டது.
அந்தக் கிரகம் மிக அதிக தொலைவில் இருப்பதால், அது வானவெளியில் கிரகங்கள் உருவான ரகசியம் பற்றி இதுவரை அறிந்து கொள்ளப்படாத தகவல்களைக் கொண்டு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினார்கள்.
வானவெளியின் கடைசியில், தொலைதூரத்தில் இருக்கும் அந்தக் கிரகத்திற்கு ‘அல்டிமேட் டூலி’ என்று பெயர் சூட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து, வானில் செலுத்தப்பட்ட மற்றொரு ஆய்வுக்கலமான ‘நியூ ஹொரைசன்’ மூலம் இந்த கிரகம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக்கலன் மணிக்கு 31 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து, மிகத் தொலைவில் உள்ள புளூட்டோ கிரகத்தை 2015-ம் ஆண்டு கடந்து சென்றது.
‘நியூ ஹொரைசன்’ ஆய்வுக்கலம் கடந்த வாரம், அல்டிமேட் டூலி கிரகத்தின் அருகே சென்றது.
அந்த கிரகத்தில் இருந்து 25 ஆயிரம் மைல் தொலைவில் இருந்தபடி, அந்த கிரகத்தின் படங்களை நியூ ஹொரைசன் பூமிக்கு அனுப்பியது.
நேற்று முன்தினம் அல்டிமேட் டூலி கிரகத்தின் தெளிவான படங்கள் கைக்குக் கிடைத்ததும், நாசா விஞ்ஞானிகளிடம் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
அல்டிமேட் டூலி கிரகம் 30 மைல் நீளம் கொண்டதாக இருக்கிறது.
பனிக்கட்டியில் விளையாடுவதற்காக மனித உருவ பொம்மை செய்வது உண்டு. அது ஏறக்குறைய தஞ்சாவூர் பொம்மை வடிவில் இருக்கும்.
அதே போன்ற தோற்றத்தில், அதாவது ஒரு பகுதி சிறிய உருண்டையாகவும் மற்றொரு பகுதி சற்று பெரிய உருண்டையாகவும் இந்தக் கிரகம் உள்ளது. இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து அல்டிமேட் டூலி கிரகம், ஒரு பொம்மை வடிவில் காணப்படுகிறது.
அந்த குட்டிக் கிரகம் சிவப்பாக உள்ளது.
பூமியில் படும் சூரிய ஒளியைவிட 1,600 மடங்கு குறைவான சூரிய ஒளி அதன் மீது விழுவதால் அந்த கிரகம் பனி வடிவில் உள்ளது.
இந்த குட்டிக் கிரகம் 298 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அல்டிமேட் டூலி கிரகம், இரண்டு பகுதிகளைக் கொண்டு இருப்பதால், அவை ஒரு காலத்தில் சிறு, சிறு துகள்களாக இருந்து, பின்னர் நாளடைவில் ஒன்று சேர்ந்து இரண்டு கோளங்களாக ஆகி, பின்னர் அவை ஒன்றோடொன்று இணைந்து இருக்கலாம் என்று இப்போது தெரியவருகிறது.
வானவெளியில் ஏற்பட்ட பெருவெடிப்பின் போது உருவான சிறிய துகள்கள் தான், பல ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்து, பூமியாகவும், சந்திரனாகவும், செவ்வாயாகவும் மற்றும் இதுபோன்ற கிரகங்களாகவும் உருவாகி இருக்கலாம் என்ற வானவெளி ரகசியத்தின் திறவுகோலாக இந்தக் கண்டுபிடிப்பு இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
சூரிய குடும்பத்தில் இருந்து மிக அதிகமான தொலைவில் இருப்பதாலும், மிகப் பழமையானது என்பதாலும், அல்டிமேட் டூலி கிரகம் தொடர்பாக மேலும் நடைபெறும் ஆய்வுகள், பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற அதிசய தகவலைத் தரும் என்று நாசா விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள்.
அல்டிமேட் டூலி கிரகம் பற்றிய ஆய்வுகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த விண்வெளி ரகசிய தகவல்களுக்காக நாமும் காத்து இருப்போம்.
- அமுதன்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment