கைப்பேசியின் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?
இ ன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் மேல் நாட்டம் கொண்ட மனிதர்கள், பழக்க வழக்கங்களை, பழமையை தொலைத்து எந்திரங்களாவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மனிதன் மறந்த ஒரு உன்னதமான பொக்கிஷம் டைரி. நமது அன்றாட நிகழ்வுகள் என்பது காலங்காலமாக இதயத்தை தாங்கி நிற்பதாகும். ஆனால் அந்த நினைவுகள் நமது எண்ண அலைகளில் முழுவதும் பதிவாவதில்லை.
அந்த நினைவுகளை செதுக்கி வைப்பதற்காகவே மனிதன் கண்டுபிடித்த மிகச்சிறந்த பழக்கம் டைரி எழுதும் முறை. நாம் அன்றாடம் செய்த நல்ல நிகழ்வுகளையும், செயல்களையும், பெற்ற கசப்பான அனுபவங்களையும், நண்பர்களிடம் பழகிய இனிமையையும், சிறந்த உறவுகளையும், சிக்கலான நேரங் களில் எடுத்த முடிவுகளையும் தாங்கிநிற்கும் ஒரு வாழ்க்கை சரித்திரம் தான் டைரி.
டைரி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. அதற்கு நாள் என்று அர்த்தம். 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ் என்பவர் எழுதிய டைரி குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்பிறகுதான் மேலைநாடுகளில் டைரி எழுதும் பழக்கம் வழக்கத்துக்கு வரத்தொடங்கியது.
டைரி என்ற உடன் வழவழப்பான அட்டையுடன், நாள் குறிப்புடன் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. சாதாரண நோட்டை எடுத்து அதில் குறிப்பிட்ட தேதியை எழுதி டைரியாகவும் பயன்படுத்தலாம். டைரியில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று எந்த நடைமுறையும் கிடையாது. நமக்கு விருப்பப்படி அன்றாட நிகழ்வுகளை எழுதலாம்.
சிலர் தாங்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் ரகசிய குறியீடு (கோடுவேர்டு) மூலமும் டைரிகளை எழுதுவது உண்டு. கட்டுரை வடிவிலும், கதை வடிவிலும், கவிதை வடிவிலும் எழுதலாம். அதுமட்டுமின்றி நமக்கு தெரிந்த சாதாரண வார்த்தைகளை கொண்டும் எழுதலாம்.
சாப்பாட்டு டைரி, அலுவலக டைரி, சம்பள டைரி, பயண டைரி, மருத்துவ டைரி, நடிகர்-நடிகைகளின் கால்ஷீட் டைரி, தன்னிலை விளக்க டைரி, வீட்டு வரவு-செலவு டைரி, பள்ளி டைரி என பலவகையான டைரிகள் உள்ளன. அதில் முக்கியத்துவம் பெற்றது தன்னிலை விளக்க டைரிதான். அதில் தான் அன்றாட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது.
இதன்காரணமாகத்தான் எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அதற்கு ஆதாரமாக போலீசாரால் தேடப்படும் ஒரு பொருளாக டைரி இருந்து வருகிறது. அது வழக்கின் முக்கிய சாட்சியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவரின் ரகசியத்தை அம்பலத்தில் ஏற்ற அது பயன்படுத்தப்படுகிறது.
டைரி எழுதும் பழக்கம் பெரும்பாலும் பிரபலமானவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், நடிகர்- நடிகைகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் உண்டு என்று பலரும் நினைப்பது உண்டு. அதுதான் இல்லை. சாமானியனும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தங்களது செயல்களை, நினைவுகளை பதித்து வைக்கவும் டைரியை பயன்படுத்தி வருகின்றனர்.
டைரி எழுதும் பழக்கம் என்பது நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது என்று சொல்வார்கள். ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டோம் என்பதற்கு அது அடையாளமாக அமையும். அது மட்டுமின்றி தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தால் மன அழுத்தம் குறையும் என்றும் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்த மொழியில் அன்றாட நிகழ்வுகளை எழுதுவது என்பது, வருங்காலத்தில் அதை அசைபோட்டு பார்க்க உதவும். அதுமட்டுமின்றி வருங்கால சந்ததிக்கு அது ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும்.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின்போது கவர்னர் மாளிகையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஆனந்தரங்க பிள்ளை தினசரி எழுதிய நாட்குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன.
ஆனால் தற்போது சாமானியன் என்றாலும் சரி, பணக்காரர்கள் என்றாலும் சரி டைரி எழுதும் பழக்கம் அவர்களிடத்தில் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை. மாறி வரும் கால ஓட்டத்திற்கு ஏற்ப டைரி நமது நினைவு அலைகளில் இருந்து அடித்து செல்லப்பட்டு விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை வருட இறுதியில் கடைகளில் டைரி விற்பனை களைகட்டும். புத்தாண்டின்போது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டைகளுடன் டைரியையும் சிலர் பரிசளித்து வந்தனர்.
ஆனால் இன்றைய சூழலில் அச்சடிக்கப்படும் டைரிகள் பலவும் கடைகளிலேயே தங்கள் வாழ்நாளை வேதனையுடன் கழித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆதிக்கம் செலுத்தி வருவது கைப்பேசிகள்தான். கைப்பேசியின் வருகை காரணமாகவும், கணினி பயன்பாடு காரணமாகவும் அன்றைய நிகழ்வுகளையும், நினைவுகளையும் அதிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் பழக்கம் நம்மிடையே அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் பல புதிய செயலிகளை அதற்காக கொடுத்துள்ளது. அந்த செயலிகளை பயன்படுத்தும் நாம், உன்னதமான செயலான டைரி எழுதும் பழக்கத்தை மறந்தே போய்விட்டோம்.
பழைய நினைவுகளை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துவதில் ஒரு புகைப்பட ஆல்பம் போன்றதுதான் டைரி. நமது வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி நிற்கும் நண்பனாக இருப்பது டைரிதான். எனவே, புத்தாண்டில் புதிய டைரியோடு நமது வாழ்க்கை பயணத்தை தொடங்குவோம். அதில் அழுத்தமாக அன்றாட வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்வோம்!.
-எஸ்.முத்துக்குட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment