தி இந்து வில் நான் பலமுறை உங்கள் குரலில் கேட்டுக்கொண்டது இன்று என் கனவு நிறைவேறியது என்று கூட சொல்லலாம். ஆம் நுழைவுத் தேர்வு எழுதுபவர்களான மாணவர்கள் அவர்களிடம் விவாதியுங்கள்! என்று நான் பலமுறை எடுத்துரைத்தேன் அதன் விளைவு என்று நான் இத்தலைப்பை வரபிரசாதமாகக் கருதுகிறேன். தொடர்ச்சியாக நாம் விவதிதிருக்கு வருவோம் : 1)முதலில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துபோகி தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வேண்டுகோளுக்கிணங்க மாநில பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
2)கிராமப் புறமாணவர்கள்/மெல்லகற்கும் மாணவர்கள் என்ற நிலையை மாற்ற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். 3)நான் மலையடிவார முழு கிராமப்புற மாணவன். நான் மருத்துவ (அறிவுப் போட்டி ) நுழைவுத்தேர்வை கட்டாயம் வரவேற்கின்றேன் .நானும் மெல்லக்கற்கும் மாணவன்தான் நிச்சயமாக என் மதிப்பெண் பத்தாம் வகுப்பில் 324/500 மட்டுமே. 4)நமக்கு நன்றாகப் படிப்பவர்கள் முக்கியம் கிடையா. அறிவுத்திறமை,புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான் முக்கியம். 5)பொதுவாகவே போட்டித்தேர்வு ( COMPETITIVE EXAMS ) பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி (ACADEMIC EXAMS ) தேர்வுகளைவிட கடினம். காரணம் பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி தேர்வுகளில் வினாத்தாள் திட்ட வரைவை (BLUE PRINT ) மட்டுமே பயன்படுத்தி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் பாடதிற்குள்ளிருந்து வினா அமைத்து விட்டால் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துவிடுவார்கள் மற்றும் பல இன்னலுக்கு ஆளாகிவிடுவார்கள் .அவ்வளவு தாழ்வுமனபான்மை உள்ளவர்கள் மாணவர்கள். 6)மாநிலப்பாடக்கல்விமுறை மிகவும் எளிதாக உள்ளது அதவே குறைக்க சொல்கிறார்கள் சிலர் அப்புறம் எப்படி அறிவு பெற முடியும். 7)மருத்துவம் மட்டும் அல்ல அனைத்து துறைக்களுக்குமே நுழைவுதேர்வு வைக்கலாம் பொதுவாக கலை-அறிவியல் மாணவர்களைக்கூட நுழைவுத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.அப்போதுதான் முன்புபடித்தபாடத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.நான் 2010 இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன் இன்றுவரை இவ்வருட மாணவர்களின் வினாத்தாள் -பாடத்திட்டம் வரை வருடா வருடம் வினாத்தாள்களை ஆராய்ந்து வருகிறன். அதுபோல மாணவர்கள் தங்கள் படிப்படை கூர்தீட்டிகொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் போட்டித்தேர்வு,போட்டி நுழைவுத்தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர் கொள்ளலாம். 8)நுழைவுத்தேர்வால் பயிற்சிமையங்கள் அதிகரிக்கலாம் உண்மைதான். இன்று பல அரசுஉதவிபெறும்/தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை.இங்கே எப்படி பாருங்களேன். இது பயிற்சி மையதைக்கட்டிலும் கட்டாயம் கொடுமை தானே? 9)என்னால் மிகப்பலமுறை உங்கள் குரலில் பதிவு செய்துள்ளேன் மெட்ரிக் பள்ளிகள் ஒன்றுகூட அரசின் பருவத்தேர்வுகளை நடத்துவதில்லை என்னால் இதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும் முடியும். 10)மற்றும் கையெத்து நன்றாக இருக்காது போனதால் குறைந்த மதிப்பெண் பெற்ற/பெறும் மற்றும் மெல்லக்கற்றாலும்-தெளிவாகக்கற்கும் என்னைபோன்ற மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு தேர்வு என்றும் வரபிரசாதமே.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெறும் மாணவனே என்னிடம் தான் ஒரு மதிப்பெண் வினா-விடைக்கு விடைகேட்பான். 10)நுழைவுதேர்வுக்கல்வி அறிவுகல்வியே!!! இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் இருவகை நுழைவுதேர்வு எழுதினால்தான் சேர்க்கை பெறவே முடியும் அதைப்பார்க்கிலும் இம்மருத்துவ நுழைவு வரவேற்கத்தக்கதே. 11)குருட்டு மனப்பாடம் பண்ணவைப்பவர்கள்/குருட்டு மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுபவர்களே இங்கே பாதிக்கபடுகிறார்கள் அறிவாளிகள் ஒருவரும் ஒருபோதும் பாதிக்கபடுவதில்லை. வெல்லட்டும் அறிவு !!!! நிகழட்டும் நுழைவுதேர்வு!!!!!! கட்டணமில்லா நுழைவுத்தேர்வு ஆலோசகர் கணேஷ்குமார் இளநிலை மாணவ மருந்தியலாளர்.தொடர்புக்கு : ganeshkumarscience@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment