Thursday, 29 June 2017

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? | பான் எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத் தரவு அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக வருமான வரி கணக்கு தொடர்பான இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in. என்ற பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. வழிமுறைகள் வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையப் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இதற்கு எந்த ரிஜிஸ்ட்ரேஷனும் நீங்கள் செய்ய வேண்டாம். பின்னர் அதில் கேட்கப்பட் டுள்ள `பான்' எண்ணுடன் `ஆதார்' எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்க வேண்டும். வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும். எஸ்.எம்.எஸ். மூலம் இணைப்பு ஆதார் எண்ணை பான் எண் ணுடன் இணைப்பதற்கு குறுஞ் செய்தி வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைபேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டு இதனை என்ற 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப்படும். ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும். `பான்' எண்ணுடன் `ஆதார்' எண் இணைப்பை ஏற்படுத்த பய னாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவ சியம். பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால்: ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்கு மாயின் இணைப்பு தோல்வி யடையும். வரி செலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டி யிருக்கும், அதாவது ஆதார் தரவுப் பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங் கைத் திருத்த வேண்டியிருக்கும். பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவசியம்  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 10 June 2017

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 4

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  4 |
 அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அண்ணா பேசிக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் விநாயகம் ஒரு கேள்வி கேட்டார், ""பேருந்துகளில், யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்ற குறள் யாருக்காக எழுதப்பட்டுள்ளது? பேருந்து ஓட்டுநருக்கா அல்லது பேருந்து நடத்துநருக்கா?'' என்றார். அதற்கு அண்ணா சட்டென்று பதில் சொன்னார், ""நா உள்ள (நாக்கு உள்ள) ஒவ்வொருவருக்காகவும்.''

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 3


அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  3 |
சாக்ரடீஸின் சீடர் ஒருவர், ""ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார். உடனே அவர், ""அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார். சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார். அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை. கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர். உடனே கிழவர் அவரை அழைத்து, ""நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார். ""நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர். ""நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர். சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும் சாக்ரடீஸ், ""அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம்!'' என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் - 2 |


​அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -  2 |
காமராஜரை, சென்னை, திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சந்திக்க வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். காமராஜர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வருகிறவர்களிடம் பேசுவாரே தவிர, அவர்களிடம் "சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்க மாட்டாராம் காமராஜர். இதற்கான காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகே பலருக்கும் தெரிய வந்தது. காமராஜர் சாப்பிடும் உணவில் போதுமான உப்போ, புளிப்போ, காரமோ இருக்காதாம். டாக்டர் ஆலோசனைப்படி, உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சமைக்கப்பட்ட உணவாக அது இருந்தது. அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து சங்கடப்படுத்த காமராஜர் விரும்பவில்லை. மேலும், பெரும்பாலும் கஞ்சி உணவையே அவர் சாப்பிடுவார். எனவேதான் யாரையும் சாப்பிடுங்கள் என்று சொன்னதில்லை. ஆனால் வெளியூர்பயணம் என்றால், தனது சாப்பாடு முடிந்தால் சரி என்கிற நினைப்பு அவருக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. உடன் வந்த போலீஸ், பத்திரிகையாளர்கள், டிரைவர்கள் "எல்லோரும் சாப்பிட்டாயிற்றா' என்று கேட்டு, "ஆச்சு' என்று பதில் வந்தபின்புதான் பயணத்தைத் தொடருவார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் 1

அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் 1 |

தெருவிளக்கில் படித்து, தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர். அவர் எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு - ஒருசமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலயேரின் வீட்டுத் தோட்டத்தில் நுழைந்ததற்காக ஒருவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடி வாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்குத் தொடுத்தார். அந்த வழந்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஐயரிடம் வந்து, ""குற்றம் சுமத்தப்பட்ட ஆங்கிலேயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். நேரில் வந்து வழக்கில் ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதம் விதித்தார். ஓர் இந்தியக் குடிமகனுக்காக ஆங்கிலேய ஆட்சியில் ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையையும் துணிச்சலையும் அனைவரும் வியந்து பாராட்டினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts