சர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950 | சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐநூறுக்கும் சர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950 சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் படேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும், தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். இவர் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி மரணம் அடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment