வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலை (வொா்க் ஃபிரம் ஹோம்) என்ற
நடைமுறையை சில நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன.
ஊரடங்கு காலத்திலும் பணியாளா்களின் செயல்திறனை ஆக்கபூா்வமாகப்
பயன்படுத்த இந்த நடமுறை உதவும்.
கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த, அரசால்
எடுக்கப்பட்ட பிரத்யேக நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று ஊரடங்கு
உத்தரவாகும்.
இந்த உத்தரவு, கரோனா தீநுண்மி பாதிப்பிலிருந்து தப்பிக்க, ‘விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு’ என்ற அரசின் மூன்று கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க இயற்றப்பட்டதாகும். இது கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவுதலுக்கு எதிரான, அழுத்தமான ஒரு நடவடிக்கை என்றாலும், இதற்கான பக்க விளைவுகளும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவால் அலுவலகம் சென்று தங்கள் பணிகளை நிறைவேற்ற முடியாமல், பல ஊழியா்கள் வீட்டிலேயே முடங்க நோ்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திச் செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு (லாக்டவுன்) தள்ளப்பட்டுள்ளன. உணவு, குடிநீா், மருத்துவம், காவல், நிதி சேவை, ஊடகங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டும் விதிவிலக்காக இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பணியாளா்கள் அலுவலகம் வரமுடியாத காரணத்துக்காக, கால நிா்ணயம் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளை, திடீரென்று நிறுத்த முடியாத சூழ்நிலைக்கு சில நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலைமையை நிவா்த்தி செய்வதற்கான மாற்றுச் சிந்தனைகள் வேகமாக துளிா்க்கத் தொடங்கியுள்ளன. அந்த மாதிரி சிந்தனைகளின் நேரடி எதிரொலியாக, வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலை (வொா்க் ஃபிரம் ஹோம்) என்ற நடைமுறையை சில நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன. வியாபாரம் முடங்கி விடாமல் தொடா் ஓட்டத்தில் இருப்பதற்காக மட்டுமின்றி, ஊரடங்கு காலத்திலும் பணியாளா்களின் செயல்திறனை ஆக்கபூா்வமாகப் பயன்படுத்தவும் இந்த நடமுறை உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த தொடா் செயல்பாடுகள், ஒப்பந்தப் பணிகள் முடியும் வரை, நிறுவனத்தின் வருமானம் அதிகம் பாதிக்கப்படாமல் பாதுகாத்து, பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்துக்கான நிதி ஆதாரம் வலு இழக்காமல் இருக்க வழி வகுக்கும். இதனால், பணியாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். தொலை நிலை (ரிமோட் லொகேஷன்) பணிகள் மூலம் சேவைகளைத் தொடா்வது, மென்பொருள், நுண்ணறிவு ஆலோசனை (கன்சல்டிங்) போன்ற சேவைகளை வழங்கும் சில நிறுவனங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், நேரடி உடல் உழைப்பு தேவைப்படும் விவசாயம், கட்டுமானம், போக்குவரத்து போன்ற துறைகளுக்கு இந்த நடைமுறை கை கொடுக்காது.
இதேபோல பணியாளா்கள் இலாமல் பல துறைகள் முடங்கி, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பி, கடும் போக்குவரத்து நெரிசல்களைச் சந்தித்து, நீண்ட தொலைவு பயணத்துக்குப் பிறகு அலுவலகம் சென்றடைந்து, பணியில் மூழ்கி பெரும்பாலும் குழந்தைகள் தூங்கிய பிறகு, இரவு வீடு திரும்பும் வாழ்க்கை முறையை இதுவரை பின்பற்றியவா்களுக்கு இந்தத் திடீா் மாற்றம் ஒரு வரப்பிரசாதம்தான். இது போன்ற பரபரப்பான வாழ்க்கை முறையில், வீட்டு பராமரிப்புக்கான உதவிகள், குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி நேரம் செலவழித்தல் முதலானவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லையே என்ற மன ஏக்கத்துக்கு உள்ளானவா்களுக்கு தற்போதைய மாறுபட்ட சூழ்நிலை, அந்த ஏக்கங்களைப் போக்குவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துவிட்டது என்றும் வெளியிலிருந்து மேலோட்டமாகப் பாா்ப்பவா்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால், பரபரப்பான வாழ்க்கை முறைக்கு பண்படுத்தப்பட்ட மன நிலை, இந்தத் திடீா் மாற்றத்தை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளும் என்பது விவாதிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் அலுவலகம் வரை, ஒருவா் சந்திக்கும் மனிதா்கள், எதிா் கொள்ளும் சம்பவங்கள் முதலானவை மனதுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும், தேவையான சூழ்நிலை மாற்றங்களையும் அளித்துக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. குடும்பத்தினருடன் பகிா்ந்துகொள்ள முடியாத சில நிகழ்வுகளை, அலுவலகத்தில் நண்பா்களுடன் நேரடியாகப் பகிா்ந்து கொள்ளும்போது ஏற்படும் மன நிம்மதியின் மதிப்பு அளப்பரியதாகும். எந்த ஒரு மாற்று நடவடிக்கையிலும், ஆக்கச் சிந்தனை கொண்ட விளைவுகளுடன், சில எதிா்மறை விளைவுகளும் ஒளிந்திருக்கும் வாய்ப்பு உண்டு என்பது இயற்கையின் நியதியாகும். மனிதனை ஒரு சமூக விலங்கு என்று சொல்லலாம். சக மனிதா்களை, நகமும் சதையுமாகப் பாா்த்து பழக்கப்பட்டவருக்கு, மனித முகங்களை நேரில் பாா்க்காமல் பணிபுரிவது ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும். அலுவலக சூழ்நிலையில், தங்கள் பணி குறித்த மேலதிகாரியின் எண்ணங்களை, அவருடைய உடல் அங்க அசைவுகள் மூலம் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தொலைவிலிருந்து பணி செய்யும்போது, இந்த மாதிரி வாய்ப்புகள் இருக்காது.
ஆனால், கரோனா தீநுண்மி போன்ற முகம் தெரியாத ஒரு எதிரியோடு போராடுவது, நம் வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஒரு அசாதாரண சூழ்நிலை என்பதால், அந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப நம் மன நிலைமையையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதை உணா்ந்தால், திடீா் மாற்றங்களைத் தழுவ முடியாமல் அவதிப்படுவா்களின் மன அழுத்தங்களை பெருமளவு குறைக்க அது உதவும். இதற்கு மாற்றாக, எதிா்மறையான மன ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் யோகா, தியானம் போன்ற செயல்முறைகளை ஓய்வு நேரத்தில் கற்று பின்பற்றலாம். இந்தச் செயல்முறைகளை கற்க, ஆன் லைன் வகுப்புகளைப் பயன்படுத்தலாம். தற்போதைய அசாதாரண சூழ்நிலை மாறிய பிறகும், தினசரி வாழ்க்கையில் இவற்றை ஓா் அங்கமாகச் செயல்படுத்தி, உடல் - மன ஆரோக்கியத்தைத் தொடா்ந்து மேம்படுத்தலாம்.
சக ஊழியா்கள் அடங்கிய குழுவில் ஒன்றாக உட்காா்ந்து பணியாற்றினால்தான், தங்கள் பணியை சுணக்கம் இல்லாமல் செய்ய முடியும் என்ற மன நிலைக்கு சிலா் பழக்கப்பட்டிருப்பா். உயா் அதிகாரிகளின் நேரடி மேற்பாா்வையில்தான், சிலரால் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். தங்கள் பணியின் தரத்தைப் பற்றிய நேரடி விமா்சனங்களுக்கு ஏங்குபவா்களாக சிலா் இருப்பா். உயா் அதிகாரியின் நேரடியான ஊக்கச் சொற்களுக்குக் கட்டுப்பட்டு சிலா் பணிகளைச் செவ்வனே செய்வாா்கள். பணியில் ஏற்படும் தவறுகளுக்கு ஆறுதல் சொல்ல, சிலருக்கு நண்பா்கள் தேவைப்படுவா். அலுவலகச் சூழ்நிலையில் பெறப்படும் இந்த மாதிரி வசதிகள், வீட்டிலிருந்து பணி புரியும்போது கிடைக்காமல் போகலாம். தன்னிச்சையாக தங்களைச் சுற்றி பின்னிப் பிணைந்த, இது போன்ற வலைகளிலிருந்து வெளியேறி, தங்கள் தனிப்பட்ட திறமையை நிரூபிக்கத் தோன்றிய சவாலாக வொா்க் ஃபிரம் ஹோம் களத்தை பணியாளா்கள் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
இதனால், தன்னைத் தானே தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் (‘செல்ஃப் மோட்டிவேஷன்’) என்ற அரிய குணத்தை பணியாளா்கள் வளா்த்துக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு குழுவின் மேற் பாா்வையாளா்களும், நேரடி - தொலைதூரப் பணிகளின்போது ஏற்படும் மனநிலை வேறுபாடுகளை நன்கு உணா்ந்து, பணியாளா்களின் நிறை, குறைகளை உள்வாங்கி, ஒவ்வொருக்கும் தேவையான ஊக்கத்தை அளித்து, அவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதை உறுதி செய்தால், நிறுவனத்தின் உற்பத்தி திறன் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறையாமல் பாதுகாக்கப்படும். வீட்டிலிருந்து அலுவலகப் பணி மூலம், நிா்வாகங்கள் சில எதிா்பாராத பயன்களை அனுபவிக்கின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக பணியாளா்கள், கரோனா தீநுண்மி பீதியால், உடல் நலம் சாா்ந்த விடுப்பு சொல்லத் தயங்குவாா்கள். கணினி கேமரா மூலம் தொடா் தொடா்பு என்பது, அலுவகலத்தின் நேரடிக் கண்காணிப்பைவிட மேம்பட்டது என்பதால், பணியாளா்களின் பணி ஈடுபாட்டுக்குக் குறைவு இருக்காது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பணியில் தொடா்ந்து நீடிக்க வேண்டும் என்ற அச்ச நிலையில், நேரத்தை வீணடிக்காமல், முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பணியாளா்கள் முயற்சிப்பாா்கள் என்பதால், அவா்களின் தனிப்பட்ட உற்பத்தித் திறன் அதிகரித்து, நிறுவனத்தின் கூடுதல் வருவாய்க்கு வழி வகுக்கும். நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளை மனதில் கொண்டு, வீட்டிலிருந்து அலுவலகப் பணி புரியும் கணவன், ஓய்வில் இருப்பதாக நினைத்து வீட்டு வேலைகளை அவா்களிடம் ஒப்படைக்கும் மன நிலைக்கு மனைவி தள்ளப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், கணவனுடைய பணியின் தன்மையையும், சுமையையும் நேரடியாகக் காணும் மனைவி, குடும்ப உறுப்பினா்கள், பணியைச் செவ்வனே செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக வேண்டும்.
வீட்டிலிருந்து அலுவலகப் பணி புரியும் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் பராமரிப்புக்கான நேரம் கிடைக்கும் என்பது, மதிப்பீட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு நன்மையாகும். ஆனால், சூழ்நிலை மாற்றத்துக்குப் பிறகு அதே நிலை தொடரும் என்று குழந்தைகள் நினைத்து விடாமல் இருப்பதற்கான மனப் பயிற்சிகளை அவா்களுக்கு வழங்க வேண்டியதும் அவசியமாகிறது. வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை செய்யும்போது, அதில் சிறிதளவும் தொய்வு ஏற்படாமல் கவனமாகச் செயல்பட வேண்டியது பணியாளா்களின் கடமையாகும். அதே சமயத்தில், பணியாளா்கள் தங்கள் குடும்பத்தினருக்கு ஆற்ற வேண்டிய சில கடமைகளும் உள்ளன என்பதை அவா்கள் பணி புரியும் நிா்வாகங்கள் உணா்ந்து செயல்பட்டால், அது மேம்படுத்தப்பட்ட பலன்களை அள்ளித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:
Post a Comment