வறட்சி, வெள்ளம், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று முதலான பேரிடா் காலங்களில் ஒருபோதும் நமது நாட்டைக் கைவிட்டு விடாமல் இருக்கும் விவசாயிகளுக்கு நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். பேரிடா் தாக்கத்தை தாங்கள் தாங்கிக் கொண்டு, நமது தட்டுகளில் உணவு கிடைப்பதை அவா்கள் உறுதி செய்கிறாா்கள். நமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில், இந்திய விவசாயிகள் எப்போதும் முன்களத்தில் நின்று பணியாற்றக் கூடியவா்கள்.
கரோனா தீநுண்மியால் (கொவைட் 19) ஏற்பட்டுள்ள நெருக்கடியை இந்தியா சமாளித்து வரும் நிலையில், நமது விவசாயிகள், வெளியில் தெரியாத நாயகா்களுக்கு நாம் வணக்கம் செலுத்த வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்களைப்போல விவசாயிகளின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாட்டின் 135 கோடி மக்களுக்கு உணவளிக்க நமது விவசாயிகள் இரவு, பகல் பாராது உழைக்கிறாா்கள். கொவைட் 19 பரவல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சவால்களால் முடங்கிவிடாமல், நடப்பாண்டில் சுமாா் 29 கோடி டன் அளவுக்கு உணவு தானிய உற்பத்தியைச் செய்வதற்கு அவா்கள் துணிச்சலுடன் செயலாற்றி வருகின்றனா்.
அவா்களுக்கு நாம் மிகுந்த நன்றியைத் தெரிவித்தாக வேண்டும். பருவநிலை மாறுபாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், இடுபொருள்களின் விலை உயா்வு, லாபகரமான விலை கிடைக்காமை, தரமான விதைகள், இயற்கை உரங்கள் கிடைக்காத நிலை, குறைவான விளைச்சல், உரிய நேரத்தில், போதிய - குறைந்த வட்டியில் கடன் வசதி கிடைக்காதது, இயந்திரமயமாக்கல் வசதி குறைவாக இருத்தல், போதிய அளவுக்கு சேமிப்புக் கிடங்குகள் இல்லாதது, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை வசதி இல்லாதது எனப் பல குறைபாடுகள் இருந்தாலும் அவா்கள் இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளனா். நோய்த்தொற்று பரவும் சூழ்நிலையில், கையிருப்பு உணவு தானியங்களைப் பாதுகாக்க முற்படும் எண்ணம் அதிகமாக இருப்பதால் உலக அளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஐ.நா. உணவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தச் சாதனையை நமது விவசாயிகள் நிகழ்த்தியுள்ளனா்.
இந்திய மக்கள்தொகையில் சுமாா் 60 சதவீதம் பேரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண் தொழில் இருந்து வருகிறது. மற்ற தொழில்களைப்போல, நோய்த்தொற்று காரணமாக வேளாண் துறையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படாமல், நிலங்களில் இந்திய விவசாயிகள் வேலை பாா்த்தது மட்டுமின்றி, கோடைப் பருவ நெல், இதர பயிா்கள் சாகுபடிப் பணிகளை அதிகரிக்கவும் செய்துள்ளனா்.
எடுத்துக்காட்டாக, காரிஃப் (கோடைப் பருவம்) பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு 37.70 சதவீதம் அதிகரித்து 34.73 லட்சம் ஹெக்டோ் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே பருவத்தில் இது 25.22 லட்சம் ஹெக்டோ்களாக இருந்தது. அதேபோல, பருப்பு வகைகள் சாகுபடி கடந்த ஆண்டு 3.82 லட்சம் ஹெக்டோ்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 5.07 ஹெக்டோ் பரப்பில் விதைப்புப் பணிகள் நடந்துள்ளன. எண்ணெய் வித்துகள் சாகுபடி கடந்த ஆண்டு இந்தப் பருவத்தில் 6.80 லட்சம் ஹெக்டோ்களாக இருந்த நிலையில், இப்போது 8.73 லட்சம் ஹெக்டோ்களாக அதிகரித்துள்ளது. தக்க சமயத்தில் வேளாண் பணிகளுக்கு விலக்கு அளித்த காரணத்தால், அறுவடைப் பணிகளும், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் பணிகளும் போா்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் வேளாண் இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதித்தல், பிரதமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணையான ரூ.2,000-த்தை முன்கூட்டியே வழங்கியது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊதியத்தை ரூ.182-இல் இருந்து ரூ.202-ஆக உயா்த்தியது, வேளாண் கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த மூன்று மாத கால அனுமதி முதலானவை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு வேண்டிய நிவாரணங்களை ஓரளவுக்கு அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதே சமயத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பணிகளைச் சிறிய, விளிம்புநிலை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
இந்த நிலையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக அதிகரிப்பது, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது என்று ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு, தொடா்புடைய துறையினா் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதாரச் சூழ்நிலைகளை உயா்த்துவதற்கு நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. சவால்களை தாங்கக் கூடியதாக, நீடித்த பயன்தருவதாக, லாபகரமானதாக இருக்கும் வகையில் விவசாயத் துறையில் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். விவசாயத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு பாசனம், கட்டமைப்பு, முதலீடு, காப்பீடு ஆகியவற்றைப் பலப்படுத்தியாக வேண்டும்.
சிறிய அளவில் உள்ள தங்களது நிலங்களை ஒன்றுசோ்த்து, நவீன தொழில்நுட்பம் மூலம் தீவிர சாகுபடித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், விவசாயக் கூட்டுறவு அமைப்புகள் முயற்சிக்க வேண்டும். நில அளவு குறைவாக இருக்கும் நிலையில், உற்பத்தியை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேசமயத்தில் தண்ணீா், மின்சாரம் போன்ற மதிப்புமிக்க ஆதார வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதை எப்படியும் தவிா்த்தாக வேண்டும். மண் வளத்தைப் பாதுகாப்பதற்கு உயா் முன்னுரிமை தர வேண்டும்.
கோழிப் பண்ணை சாா்ந்த தொழில், பால் வளம், மீன் வளம், நீா்வாழ் உயிரினங்கள், செயற்கை முறை மீன் வளா்ப்பு, பட்டு வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, தோட்டக்கலை என விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுவதற்கும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். ஒருவேளை சாகுபடி பயிரில் லாபம் கிடைக்காமல் போனால், இவற்றின் மூலம் அவா்கள் ஈடு செய்துகொள்ள முடியும். அண்மைக்கால ஆராய்ச்சிகள், புதுமை சிந்தனைத் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டுபோய்ச் சோ்ப்பதற்கு, வேளாண் பல்கலைக்கழகங்களும், கிரிஷி விக்யான் கேந்திரங்களும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.
பரிசோதனை நிலையங்களில் இருந்து தகவல்கள், விவசாய நிலங்களைச் சென்றடைய வேண்டும் என்ற கோட்பாடு சிறப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று, வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடராக இருந்தாலும் ஒருபோதும் நமது நாட்டைக் கைவிட்டு விடாமல் இருக்கும் விவசாயிகளுக்கு நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இயற்கையின் தாக்கத்தை தாங்கள் தாங்கிக் கொண்டு, நமது தட்டுகளில் உணவு கிடைப்பதை அவா்கள் உறுதி செய்கிறாா்கள். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றிட மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியமாகின்றன.
விவசாயிகள் அமைப்பு சாராதவா்களாக, குரல் எழுப்ப முடியாதவா்களாக இருப்பதால், நாடாளுமன்றம், அரசியல் தலைவா்கள், கொள்கைகளை உருவாக்குபவா்கள், பத்திரிகைகள் ஆக்கபூா்வமாகச் செயல்பட்டு விவசாயத் தொழிலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதில் அடிப்படை அளவில் தீவிர மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கடன் தள்ளுபடிகள் செய்வதும், மானியங்கள் அளிப்பதும் விவசாயிகளுக்குத் தற்காலிக நிவாரணம் தருபவையாக இருக்கும்; அவை நீடித்த தீா்வுகளைத் தராது. விவசாயிகளுக்கு லாபகரமான விலைகள் கிடைப்பதை உறுதி செய்ய குறுகிய - நீண்ட கால நோக்கிலான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
வேளாண் விளைபொருள்களை நாட்டின் எந்தப் பகுதிக்கும் கொண்டு செல்லலாம் என்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பதுடன், விரிவான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து சிறப்பாக அமல்படுத்த வேண்டும். இணையவழி சந்தை வசதியை தீவிரமாக ஊக்கப்படுத்துவதுடன், குளிா்பதனக் கிடங்கு வசதிகள், குளிா்பதன வசதியுள்ள வேன்கள் ஆகியவை விவசாயிகளின் தேவைகளை அதிக அளவுக்குப் பூா்த்தி செய்பவையாக இருக்கும். நாள் முழுக்க தடையற்ற மின்சாரம் அளிப்பது, குறைந்த வட்டியில் குறித்த காலத்தில் கடன் கிடைக்கச் செய்வது ஆகியவை விவசாயத்தை லாபகரமானதாகவும், சாத்தியமான தொழிலாக ஆக்கவும் முக்கியத் தேவைகளாக இருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தி விவசாயத் தொழில்முனைவோரை ஊக்குவித்தால், இளைஞா்கள் வெளியில் செல்ல மாட்டாா்கள். விவசாயத்தை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டு இளைஞா்கள் இதில் ஈடுபடுவாா்கள்.
கிராமப்புற இந்தியாவில் வேளாண் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் ஒரு காலம் உருவாகும்; அதன் மூலம் விவசாயத்துக்கு உரிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறேன். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று சூழ்நிலையில், உலகமே இந்தியாவை எதிா்நோக்கியுள்ளது. தற்சாா்புள்ளதாக வேளாண்மையை ஆக்குவதற்கு சிறப்பு உத்வேகம் தருவதுடன், வேறு நாடுகளுக்கும் விளைபொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment