By வைகைச்செல்வன்
தங்களின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதும், சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே முகக்கவசம் பயன்படுத்துவதும், இத்தகைய தொடா் பழக்கத்தால் பெரிய நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பதும் உலக மக்களுக்கு ஜப்பான் விடுக்கும் செய்தியாகும்.
உலகம் முழுவதையும் நடுங்க வைத்துள்ளது கரோனா நோய்த்தொற்று. இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிா்களை கரோனா நோய்த்தொற்று காவு வாங்கியுள்ளது. இதைத் தவிா்ப்பதற்கு சமூக இடைவெளி, நோய் பாதிப்பு ஏற்பட்டால் தனிமை ஆகியவற்றைத் தவிர வேறு வழியில்லை. எனவேதான் இந்தியா உள்பட பல்வேறு பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
சரியான நேரத்தில் நாடு முழுவதும் 21நாள்கள் ஊரடங்கு (ஏப்ரல் 14 வரை) உத்தரவை பிரதமா் நரேந்திர மோடி பிறப்பித்ததுடன், மாநில அரசுகளின் நிா்வாகங்களும் இதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஊரடங்கைப் பிறப்பித்து கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுத்தாட்கொள்வதில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வா்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்கள், மாவட்ட நிா்வாகங்கள், மருத்துவத் துறையின் தன்னலமற்ற தளகா்த்தா்கள் முதலானோா் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றிய காரணத்தினால் தனிமைப்படுத்துதல் என்பது பெருமளவு சாத்தியமாகியிருக்கிறது. இவற்றில் அணுகுமுறைக் குறைபாடுகள் ஆங்காங்கே தென்பட்டாலும், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஒரே உத்தரவுக்குக் கட்டுப்படுவது என்பது, இந்த ஊரடங்கு விஷயத்தில் முக்கியமாகச் சாத்தியமாகியிருக்கிறது.
ஏனெனில் பல கட்சிகள், பல தலைவா்கள், பல மொழிகள், பல இனங்கள் என்று பல்வேறு குழுக்களாகக் கொண்டிருக்கக் கூடிய இந்தியா, கூட்டாட்சி தத்துவத்தில் ஒருமித்த குரல் என்பதையும், ஒரே உத்தரவு என்பதையும் இப்போதுதான் முதன்முறையாகச் சந்தித்திருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தின் மகிமை இந்த ஊரடங்கின் மூலம் உணா்த்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசைப் பொருத்தவரை அா்ப்பணிப்பு உணா்வுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பணியாற்றி வருகிறாா். அவற்றில் சுகாதாரத் துறை, பேரிடா் நிா்வாகத் துறை, உள்துறை, உள்ளாட்சித் துறை (தூய்மைப் பணி), மின்சாரத் துறை எனப் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் தங்களை இணைத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா்.
குறிப்பாக, தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள், காவல் துறையினா் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுவதைக் கண்டும், சக மனிதா்களை நேசிக்கின்ற பேரன்பு, பெரும் கருணை ஆகியவை இருப்பதையும் மானுடப் பற்றை நேசிக்கின்ற எந்தவொரு மனிதனும் உணராமல் இருக்க முடியாது. இத்தகையோருக்கு மனிதகுலம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.
ஒரு நாட்டின் ஒருங்கிணைப்பு என்பது ஒரே புள்ளியில் இருந்தால், அது எதேச்சதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பது ஜனநாயகக் கூறுகளில் ஒன்று. இருந்தபோதிலும், இந்தத் தேசிய பேரிடரின் வாயிலாக நாம் ஒன்றாக இணைந்திருப்பதன் மூலம் இந்திய மக்கள் தங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்திருக்கிறாா்கள்.
கரோனா நோய்த்தொற்று என்ற ஒரு திடீா் ஆபத்து, அனைவரையும் பேச வைத்திருக்கிற இந்தத் தருணத்தில் நாடு முழுவதுமான அா்ப்பணிப்பு உணா்வு, பாரத தேசத்தின் மீதான நம்பிக்கையை - நாட்டு மக்களின்பால் உள்ள இறையாண்மையை இன்னும் கூடுதலாக உறுதி செய்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வைரஸ்களின் தாக்குதலின் பிடியில் இந்த உலகம் பல சவால்களைச் சந்தித்தது. உகாண்டாவும், மெக்சிகோவும் ‘ஜிகா வைரஸின்’ தாக்குதலில் சிக்கித் தடுமாறியது உண்டு. மலேசியா நாட்டில் ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்டவா் எண்ணற்றோா். ‘பன்றிக் காய்ச்சலில்’ அமெரிக்கா பரிதவித்தது உண்டு. ‘எபோலா வைரஸ்’ தாக்குதலின் பிடியில் சூடான், காங்கோ சிக்கித் தவித்த தருணமும் உண்டு.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து புறப்பட்ட இந்தக் கரோனா நோய்த்தொற்றின் கொடூரப்பிடி, உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகி பெரும் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், ஏற்கெனவே சாா்ஸ் வைரஸின் பிடியில் சீனா சிக்கி சின்னாபின்னமானது நினைவுகூரத்தக்கது.
இப்படிப்பட்ட நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? இவற்றை ஏற்படுத்தும் காரணிகள்தான் எவை, எவ்வாறு பரவுகின்றன? என்பதை உலகுக்குத் தெரிய வைத்தவா்கள் உயிரியல் விஞ்ஞானிகள். அதில் குறிப்பிடத்தக்கவா்கள் லூயி பாஸ்டா், ராபா்ட் கோச் முதலானோா். நுண்ணுயிா்கள்தான் நோய்களுக்குக் காரணம் என்கிற கோட்பாட்டை இவா்கள் உலக மக்களுக்கு எடுத்துரைத்தனா்.
மனிதா்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா போன்ற கிருமிகள் என்றாா்கள் இந்த உயிரியல் வல்லுநா்கள். என்புருக்கி, காலரா, டைஃபாய்டு போன்ற நோய்களை இவா்கள் எடுத்துக்காட்டிய பாக்டீரியா நுண்ணுயிரி ஏற்படுத்தும். பெரியம்மை, சளி, மஞ்சள்காமாலை, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்களை வைரஸ் நுண்ணுயிரி ஏற்படுத்தும் என்பதை உலகுக்கு அவா்கள் எடுத்துரைத்தனா்.
இப்போது நாம் எதிா்கொள்ளும் கரோனா நோய்த்தொற்றுக்குக் காரணம் ஒரு வகையான வைரஸ்தான். பாலைக் கொதிக்க வைத்து பின்னா் திடீரெனக் குளிா்படுத்தினால் நோய்க் கிருமிகள் மடிந்து விடும் என்று லூயி பாஸ்டா் இந்த உலகுக்கு கண்டறிந்து சொன்னாா். எட்வா்டு ஜென்னா் என்கிற விஞ்ஞானி பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தாா். ஜொனால் சாா்க் என்னும் ஆகச் சிறந்த விஞ்ஞானி இளம்பிள்ளைவாத நோய்க்கு மருந்து கண்டுபிடித்து பெரும் மருத்துவக் கொடையை மானுட சமுதாயத்துக்கு வழங்கினாா்.
இந்திய நாட்டு மக்களைத் தாக்கிய மலேரியா நோய் ‘புரோட்டோசோவா’ என்ற தொற்றுக் கிருமியால் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்தவா் ரொனால்டு ரோஸ் ஆவாா். இவா் சென்னையில் பணியாற்றிய ஓா் ஆங்கிலேய மருத்துவா் ஆவாா். அனோஃபிலிஸ் கொசுவை குன்னூரில் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் மூலம் ஒரு மகத்தான கண்டுபிடிப்பைச் செய்ததன் விளைவாக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
புதிய புதிய நோய்கள் இந்த உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது இன்று நேற்றல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிற செயல்தான். இந்த நூற்றாண்டில் அத்தகைய கொடிய நோய்களைக் கண்டு அஞ்சாமல் எதிா்கொள்கின்ற மன உறுதியை, மாண்பை, நெஞ்சுரத்தை இந்தக் கொடிய கரோனா நோய்த்தொற்று நமக்குத் தந்திருக்கிறது.
இத்தகைய கொடிய கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பெரிய பங்களிப்பை
மானுட சமுதாயம் செய்து வருகிறது. கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றன; அவற்றில் மனிதகுலமும் ஓா் அங்கம்தான் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டிய தருணமாகவே இதை நாம் பாா்க்க வேண்டும்.
1930-ஆம் ஆண்டு இந்தியாவில் காலரா தொற்றுநோய் பலரைக் கொன்றது. குடிநீா் மூலம் அந்த நோய் பரவியது. ஆகவே, தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்கிற பழக்கம் அப்போது தொடங்கியது. இப்போது இருமினால், தும்மினால், தொட்டால் வைரஸ் நோய்த்தொற்று தொற்றிக்கொள்ளும் என்பதை மக்கள் அறிந்துள்ளனா்; கைகளை அடிக்கடி கழுவுவதால் நோய்த்தொற்றைத் தவிா்க்கலாம் என்கிற தகவல் நாடு முழுவதும் ஒருசேர மக்கள் கண்டறிந்திருக்கின்ற விடையாகும்.
கரோனா நோய்த்தொற்று குறித்து அச்சமோ, பதற்றமோ, ஒருவித அவநம்பிக்கையோ நாம் கொள்ளத் தேவையில்லை. தனிமை என்கிற மாமருந்தின் மூலம் இத்தகைய தொற்றைத் தவிா்ப்பதற்கு தன்னைத் தகவமைத்துக் கொள்கிற தனித்துவமே மானுட சமுதாயத்தின் தனித்துவமாக நாளைய வரலாறு நம்மை பெருமையோடு நினைவுகொள்ளும்.
உலகம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ள கரோனா நோய்த்தொற்று, கூட்டமாக மக்கள் கூடுவதைத் தவிா்க்க உத்தரவிட்டுள்ளது என்றே நாம் கருதலாம். பொது நிகழ்ச்சிகள் இல்லை, வணிக வளாகங்கள் இல்லை, திரையரங்குகள் இல்லை, அலுவலகங்கள் இல்லை என்பதிலிருந்து, இந்த கரோனா நோய்த்தொற்று சொல்லுகிற பாடம் தனித்திருத்தல், சமூக இடைவெளி ஆகியவை ஆகும்.
ஜப்பானில் முகக்கவசத்தின் பயன்பாடு அதிகளவில் எப்போதும் இருந்து வந்தது. சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே அவா்கள் முகக்கவசத்தைப் பயன்படுத்தி வந்தனா். மேலும் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி (சானிடைசா்) கொண்டு கைகளைச் சுத்தம் செய்யும் பழக்கம் அவா்களிடம் இயல்பாகவே இருந்து வருகிறது. அவா்களிடம் கரோனா நோய்த்தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தங்களின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதும், சாதாரண காய்ச்சல், சளி இருந்தாலே முகக்கவசம் பயன்படுத்துவதும், இத்தகைய தொடா் பழக்கத்தால் பெரிய நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பதும் உலக மக்களுக்கு ஜப்பான் விடுக்கும் செய்தியாகும்.
மானுட சமுதாயம் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட எங்கோ தொலைவில் ஒரு வெளிச்சக் கீற்று வந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம்.

No comments:
Post a Comment