Tuesday 10 December 2019

பிளஸ் 2 ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற டிப்ஸ் ...

பிளஸ் 2 ஆங்கிலத்தைப் பொறுத்த வரை தேர்ச்சி பெறுவது எளிது. ஆனால், அதிக மதிப்பெண்கள் பெற கூடுதலாக நேரம் ஒதுக்கி, ஆர்வத்துடன் படித்தாக வேண்டும்.

படித்ததை எழுதிப் பார்ப்பதுடன், மாதிரி தேர்வுகள் மேற்கொள்வதும் முழு மதிப்பெண்ணுக்கு வழி செய்யும். வினாத்தாள் அடிப்படையிலான வழிகாட்டுதல்களை முதலில் பார்ப்போம்.

Part I: சரியான விடையை எடுத்தெழுதும் இப்பகுதியில், ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 கேட்கப்படும். Synonym, Antonym, Abbreviation, Acronyms, Singular and plurals, Compound words, Clipped words, Blended words, Idiom, Definition of the term, Syllabification, Prefix and suffix, American English, Phrasal verbs, Prepositions, Question tags, Sentence Patterns ஆகியவற்றில் இருந்து இதற்கு தயாராகலாம்.

Part II: Poetry (வி.எண்.21-26) மற்றும் Grammar(வி.எண்.27-30) என 2 பிரிவுகளில் இருந்து, சாய்ஸ் உடனான இரு மதிப்பெண் வினாக்கள் 7 கேட்கப்படுகின்றன.

Section I: பாடல் வரிகளை பலமுறை முழுமையாக வாசிப்பதும், புதிய வார்த்தைகளுக்கு பொருளறிவதும், poetic devices தயார் செய்வதும் உதவும்.

Section II: பாடநூலின் வழக்கமான பயிற்சிகள் மற்றும் grammar revision exercises பார்ப்பதுடன், பருவத் தேர்வுமுதல் திருப்புதல் வரையிலான தேர்வுகளின் வினாக்களில் திருப்புதல் செய்ய வேண்டும்.

Part III: 3 மதிப்பெண்களுக்கான இப்பகுதி, ‘சாய்ஸ்’ வசதியுள்ள 3 பிரிவுகளில் இருந்து மொத்தம் 7 வினாக்களுக்கு பதிலளிப்பதாக உள்ளது.

Section I: பாடல் பகுதியின் ERC வினாக்களுக்கு பதிலளிக்க பாடல் மற்றும் அதன் ஆசிரியர் விபரங்களை எழுதி 2 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். பாடல்களின் பொருள் மற்றும் மையக்கருத்து அறிந்திருப்பதன் மூலம் மிச்சமுள்ள ஒரு மதிப்பெண்ணையும் பெற்று விடலாம். கூடுதலாக Comment எழுதுவதும் நல்லது.

Section II: Prose பகுதியின் 2 சிறு வினாக்களுக்கு பதிலளிக்கும் இப்பிரிவுக்கு, மொத்தம் உள்ள 6 பாடங்களில் உரைநடை இடம்பெறாத 5-வது பாடம் தவிர்த்த, 5 பாடங்களில் ஏதேனும் நான்கில் இருந்து தயாராகலாம்.

Section III: மதிப்பெண் குறைய வாய்ப்புள்ள, Strategic competencies பகுதியில் இடம்பெறும் pie chart, proverb completion, describing the process, dialogue writing ஆகிய வினாக்களுக்கு கொடுக்கப்பட்ட format-ல் விடையளித்து பழக வேண்டும்.

வி.எண்கள்.41-43: முதல் 3 வினாக்களும் முறையே prose, poetry மற்றும் supplementary பகுதியிலிருந்து கேட்கப் படுகின்றன. ‘ப்ளூ பிரின்ட்’ வழிகாட்டுதல் இல்லாததால், அனைத்துப்பாடங்களையும் படிப்பது அவசியமாகிறது. முழு மதிப்பெண்ணுக்கு தகுந்த Quotation எழுதிப் பழகலாம்.

வி.எண்.44: summary ‘அல்லது’ ‘notemaking’ வினாக்களில், summary எழுதுவதாயின், rough copy, fair copy, title ஆகியவை முக்கியம். Note Making எழுதுவதாயின், main topic மற்றும் sub topic அவசியம்.

வி.எண்.45: Bio-data ‘அல்லது’ General paragraph கேட்கப்படுகிறது. Prepare Bio-data என்றிருப்பின் covering Letter அவசியமில்லை. அதுவே Respond to the Advertisement என்பதாக கேட்டிருப்பின் covering letter எழுத வேண்டும்.

வி.எண்.46: Identify the relativefield ‘அல்லது’ Spotting the error வினாக்களில் முழு மதிப்பெண்ணுக்கு முதல் வினாவை தேர்வு செய்யலாம். இரண்டாவது வினாவுக்கு முறையான பயிற்சி அவசியமாகிறது.

வி.எண்.47: prose Comprehension ‘அல்லது’ கோடிட்ட இடங்களை நிரப்பும் வகையில் Homophones, Modals, semi-modals, Tense தொடர்பான வினாக்கள் இடம்பெறும். இரண்டில், படிக்க அவசியமில்லாத, பயிற்சி மட்டுமே போதுமான முதல் வினா எளிமையானது.

சதத்துக்கு குறிவைப்பவர்கள் paragraph வினாக்களுக்கு General quotations தயார் செய்வதுடன் அதனை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி பயிற்சி பெற வேண்டும். மதிப்பெண் இழக்க வாய்ப்புள்ள 27-30 வினாக்களுக்கு கூடுதல் கவனமும் பயிற்சியும் அவசியம். முழு மதிப்பெண்ணில் சறுக்கக் காரணமாகும், எழுத்துப் பிழைகள் மற்றும் அலட்சியத் தவறுகளை தவிர்க்க தினந்தோறும் தனிப் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கலாம். அப்போது எழுதிப் பார்ப்பதுடன், அவற்றை சுயமாக திருத்தி, சரிபார்ப்பது நமது நோக்கத்தை முழுமையாக்கும்.

இதுவரையிலான தேர்வுகளின் வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அடிப்படையில் மெல்லக் கற்போர் தேர்வுக்குத் தயாராகலாம். அவர்களின் தேர்ச்சியை உறுதி செய்வதுடன் கூடுதல் மதிப்பெண்களும் பெற கீழ்கண்டவை உதவும்.

1. பாடங்களின் Glossary பகுதியிலிருந்தே Synonyms (வி.எண்.1-3) தயாராகலாம்.

2. Lexical competencies(வி.எண்.7-20) பகுதியில் American English, clipped words, blending words, prefix and suffix, question tags and sentence patterns ஆகியவை எளிமையானவை.

3. பாடல்களின் ‘figures of speech’ பகுதியின் மூலம் பதில் அளிக்கக் கூடிய வி.எண்.21-26.

4. Proverb completion(வி.எ.37- 40)

5. Paragraph questions பகுதிக்கு 1,2 மற்றும் 6 பாடங்களிலிருந்து சுலபமாக தயாராகலாம்.

6. Bio-data பகுதியில் குறைந்தது 5 விபரங்களேனும் எழுதலாம்.

பொதுவாக American English, question tags, sentence pattern, poetic devices, inversion of if clause, proverbs, bio data, summary writing, paragraphs ஆகிய பகுதிகளை மட்டுமே குறிவைத்து, 90-க்கு 30 மதிப்பெண்களை பெற்றுவிடலாம்.

வினாத்தாளின் 66 மதிப்பெண்கள், பாடநூலின் பயிற்சி வினாக்களில் இருந்தே இடம்பெறுகின்றன. ஏனைய 24 மதிப்பெண்கள் பாடத்தின் உள்ளிருந்து Application & Analysis முறையிலான வினாக்களாக இடம்பெற வாய்ப்புள்ளது. இதற்கு பாடக் கருத்தை புரிந்துகொள்வதுடன், கேட்கப்படும் சூழலுக்கு உகந்தவாறு பதிலளிக்க பயிற்சி பெற வேண்டும். இந்த 24-ல் 2 மதிப்பெண்களேனும் QR Code மற்றும் பாடங்களின் இறுதியிலுள்ள ICT Corner பகுதிகளில் இருந்து இடம்பெற வாய்ப்புள்ளது.


No comments:

Popular Posts