வீடுகள் மற்றும் குடியிருப்புகள் வாங்கப்படும் சமயத்தில் அதற்கான பதிவுக் கட்டணங்கள் மற்றும் முத்திரைக் கட்டணங்கள் ஆகியவை செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து சொத்திற்கான வரியை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செலுத்தப்படுவது அவசியம்.
பல்வேறு சேவைகள்
சுற்றுப்புறத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தூய்மை, சுகாதாரம், பூச்சிகள் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சேவைகளை வழங்க ஊராட்சி அல்லது நகராட்சிகள் இத்தகைய வரி வசூல் பல்வேறு சேவைகளை அளிக்கின்றன.
தவறாது செலுத்த வேண்டும்
ஏதேனும் காரணங்களால் சொத்து வரி செலுத்தப்படாத நிலைகளில் நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கான இணைப்பு உள்ளிட்ட சில சேவைகளை வழங்க மறுக்கலாம். அதனால், வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருக்கும் பட்சத்திலும், சொத்து வரிகளை சரிவர செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சொத்துவரிக் கணக்கீடு
சொத்துவரி விதிப்பு என்பது நகர் மன்ற நிர்வாக முடிவின் அடிப்படையில் சொத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டிய கட்டணமானது கீழ்க்கண்ட அடிப்படைகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
* சொத்து அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அளவுகள்.
* சொத்தின் நிலையானது, குடியேறும் நிலையில் உள்ளதா அல்லது கட்டுமான பணிகள் நடந்து கொண்டுள்ளதா என்பதை பொறுத்தும் வரிவிதிப்பு அமையும்.
* சொத்தின் உரிமையாளர் ஆணா அல்லது பெண்ணா என்ற நிலையும் வரி விதிப்பில் கணக்கில் கொள்ளப்படுகிறது. பெண்ணாக இருக்கும் பட்சத்தில் வரி விதிப்பில் சில தள்ளுபடிகள் அளிக்கப்படும்.
* சொத்து உரிமையாளர் மூத்த குடிமக்களாக இருந்தால் சில பொருந்தக் கூடிய தள்ளுபடிகளும் தரப்படுகிறது.
* நகராட்சி மன்ற நிர்வாகத்தால் அளிக்கப்படும் குடியிருப்புகளுக்கான பல்வேறு வசதிகளையும் கணக்கில் கொண்டு கட்டணத்திற்கான சலுகைகள் தீர்மானிக்கப்படும்.
உரிமைக்கான ஆதாரம்
சமீப காலங்களில், சொத்து வரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கான மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்து வரியின் மதிப்பு தீர்மானம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சொத்து ஒருவருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பதில் சொத்து வரி செலுத்திய ரசீதும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் சொத்தின் உரிமையாளர் யாரென்பதையும் சொத்து வரி செலுத்திய ரசீது தீர்மானிக்கிறது. மேலும், சொத்துக்களின் மீது வங்கிக்கடன் பெறுவதற்கான ஆவணங்களில் சொத்து வரி செலுத்திய ரசீதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து வரி விலக்கு
தொழுகைக்காக பயன்படுத்தும் காலி இடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு சொத்து வரி கிடையாது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
முன்னேற்றங்கள் எப்போதுமே உடனே சாத்தியப்படுவதில்லை. வழக்கமான செயல்பாடுகள் வெற்றியைத் தர தாமதமாகலாம். நமது செயல்பாடுகளில் சின்னச்சின்ன மாற்ற...


No comments:
Post a Comment