Monday 6 January 2020

நெஸ்ஸி

உலகின் ராட்சத உயிரினங்களான டைனோசர்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நீரில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத உயிரினம் நெஸ்ஸி எனப்படுகிறது. உலகின் பல இடங்களில் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கருத்துகளும் உள்ளன. அவை பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோமா?...

நெஸ்ஸி என்பது என்ன?

நெஸ்ஸி என்பது டைனோசர் போன்ற ராட்சத உயிரினமாகும். ஸ்காட்லாந்தின் ‘லோக் நெஸ்’ என்ற ஏரியில் வசித்த உயிரினம் என்று அறியப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது.

நெஸ்ஸி எப்போது அறியப்பட்டது?

வரலாற்றின் மத்திய காலத்தில் இருந்தே நெஸ்ஸி பற்றிய கருத்துகள் மக்களிடம் உள்ளன. நவீன காலத்தில் அதற்கான பல சான்றுகள் கிடைத்தன. டைனோசர்களைப் பற்றிய ஆய்வுகள் புத்துயிர் பெற்ற பின்பு 1930-களில் இருந்து நெஸ்ஸி பற்றிய கருத்துகளும், ஆய்வுகளும் தீவிரமடைந்தன.

ஆய்வாளர்கள் நெஸ்ஸிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

நீரடியில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்பட சான்றுகள் நெஸ்ஸி வாழ்ந்ததற்கான சான்றுகளாக கிடைத்துள்ளன. பல்வேறு ராட்சத டைனோசர்கள் புகழ்பெற்ற ஏரிகளில் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்துகளுக்கு இது உயிரூட்டுவதாக அமைந்தது.

எந்த வகை டைனோசர்கள் நெஸ்ஸி என்று கருதப்படுகின்றன?

கிடைத்துள்ள சான்றுகளின்படி ‘பிளெய்சியோசார்’ டைனோசர் இனத்துடன் நெருங்கிய தொடர்புள்ள உயிரினமாக நெஸ்ஸி கருதப்படுகிறது.

எங்கெல்லாம் நெஸ்ஸி மான்ஸ்டர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது?

ஸ்காட்லாந்து போல, கனடாவின் ஒகேநகன் ஏரியில் வாழ்ந்த ராட்சத உயிரினம் ஓகோபோகோ என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்வாழ் ராட்சத இனம் (நெஸ்ஸி) வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. சான்றுகளும் கிடைத்துள்ளன.

No comments:

Popular Posts