வெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்


வெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளுக்காக அறியப்படுபவர். இவரின் பெண் கல்வி உரிமை பிரசாரத்தினால் தாலிபான் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப்பின் உயிர் பிழைத்தார். தனக்கு கிடைத்த உலகளாவிய ஆதரவுடன் தனது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்தார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற இவரே, மிகவும் சிறுவயதில் இப்பரிசினை பெற்றவராவார். நான் மலாலா என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

1.      ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆசிரியரால் உலகை மாற்ற முடியும் என்பதை நினைவில் வைப்போம்.

2.      பெண்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

3.      பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், போருக்கு எதிராகப் போராடுவதற்குமான சிறந்தவழி பேச்சுவார்த்தையே.

4.      எனக்குத் தேவைப்படுவதெல்லாம் கல்வியே, எதற்கும் நான் பயப்படுவதில்லை.

5.      உங்கள் மகள்களை கௌரவப்படுத்துங்கள். அவர்கள் மதிப்பிற்குரியவர்கள்.

6.      நான் சொல்கிறேன், நான் பயத்தை விட வலிமை வாய்ந்தவள்.

7.      எதிர்கால தலைமுறையின்மீது கவனம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் உங்கள் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

8.      ஒவ்வொரு நாட்டிலும், அரசியலானது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே கருதப்படுகிறது.

9.      நான் விரும்பும் வழியில் எனது வாழ்வை வாழ்வதற்கு எனக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கின்றேன்.

10.    நீங்கள் எங்கு சென்றாலும், சொர்க்கமே என்றாலும் கூட, உங்கள் வீட்டில் இல்லாத குறையை உணர்வீர்கள்.

11.    உலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல் கூட ஆற்றல் மிக்கதாக ஆகிவிடுகின்றது.

Comments