Sunday 29 December 2019

சைக்கிள் ஓட்டினால் மன அழுத்தம் குறையும்

சைக்கிள் ஓட்டுவதற்கு எல்லா குழந்தைகளும் ஆசைப்படும். வயது அதிகரிக்கும்போது சைக்கிள் ஓட்டும் ஆர்வம் குறைந்துபோய்விடும். ஆனால் தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு ஈடானது. இளமை தோற்றத்துடன் மிளிர்வதற்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சி பலன் கொடுக்கும். சருமம், எலும்புகள் மற்றும் பிற உறுப்புகளும் சைக்கிள் ஓட்டுவதால் புத்துணர்ச்சி பெற்று இளமைக்கு வழிவகுக்கும்.

உடல் இயக்க திறனும் அதிகரிக்கும். சைக்கிள் ஓட்டும்போது வேகமாக சுவாசிப்பீர்கள். அதனால் உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். அது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சைக்கிள் ஓட்டுவது ஏரோபிக் உடற் பயிற்சியுடன் தொடர்புடையது. இதயநோய்களுக்கான அபாயத்தை குறைக்க உதவும். மூளையில் செரோடோனின், டோபமைன் பினைல்தைலமின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து எல்லா நேரமும் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் வழிவகை செய்யும்.

உடல் பருமன் காரணமாக நீரிழிவு, கல்லீரல் நோய் பாதிப்புகள் நேரும். தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது உடல் பருமன் பிரச்சினையில் இருந்து விடுபட வழிவகை செய்யும். சைக்கிள் ஓட்டும்போது ஏராளமான கலோரிகள் செலவாகுவதால் உடல் கட்டுக்கோப்பாக மாறும்.

நீரிழிவு நோயாளிகள் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்னும், பின்னும் சர்க்கரையின் அளவை சரிபார்ப்பது அவசியம். சைக்கிள் ஓட்டுவது மன அழுத்தத்திற்கான அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முதுமை பருவத்தில் எலும்புகள் பலவீனமடைவதால் வலி தோன்றும். எழுந்திருக்கக்கூட நிறைய பேர் சிரமப்படுவார்கள். அவர் களுக்கு மிதமான, பாதுகாப்பான சைக்கிள் பயிற்சி ஏற்றது.

No comments:

Popular Posts