Thursday 16 November 2017

55" Class The Frame 4K UHD TV சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம்

சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம் | சாங்சங் இந்தியா நிறுவனம் தி ஃப்ரேம் என்கிற பெயரில் புதிய அதிநவீன டிவியை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் ப்யூஷ் குன்னபல்லி கலந்து கொண்டு பேசுகையில், வாடிக்கையாளர்களில் தேவையறிந்து அதி நவீன தொழில்நுட்பங்களில் சாம்சங் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்தர புத்தாக்க முயற்சியாக தி ஃப்ரேம் அறிமுகமாகிறது. தொலைக்காட்சி திரையை பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி, நமது விருப்பங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புகைப்பட சட்டக அனுபவத்தையும் தி ஃபிரேம் டிவி அளிக்கும். புகழ்பெற்ற வெஸ்பெகர் நிறுவனத்துடன் இணைந்து இதன் வடிவமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இந்திய டிவி சந்தையில் முன்னணி பிராண்டாக சாம்சங் 30 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதில் 52 அங்குலம் உள்ளிட்ட உயர்ரக மாடல்கள் சந்தை யில் 42 சதவீத சந்தை சாம்சங் வசம் உள்ளது. உயர்ரக பிரிவில் தமிழக அளவில் 54 சதவீத சந்தையுடன் முன்னிலையில் இருக்கிறோம். தற்போது உயர்ரக மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் புத்தாக்க முயற்சியாக சாம்சங் தி ஃப்ரேம் விளக்கும் என்றார். இந்த டிவியை சாம்சங் நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கிறது. 55 அங்குல டிவியின் விலை ரூ.2,74,900 ஆகவும், 65 அங்குல டிவியின் விலை ரூ.3,99,900 ஆகவும் இருக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது | தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது. இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும். இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பணியாளர்கள் பழைய ஆவணங்களை தேடிப்பிடித்து சான்றிதழ் மற்றும் மதிப்பெண் விவரங்களை சரிபார்ப்பார்கள். அதன் பின்னரே மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்று அளிக்கப்படும். அண்மைக் கால சான்றிதழ்களை தேர்வுத்துறையினர் விரைவில் கண்டறிய முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களாக இருப்பின் பழைய ஆவணங்களை தேடிப்பிடிப்பதே மிகப்பெரிய பணியாக இருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மைத்தன்மை சான்று கிடைக்க காலதாமதமாகும். இதன் காரணமாக, அவர்கள் தகுதிகாண் பருவம் முடிப்பதும், பணிவரன்முறை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். இதனால், அவர்கள் பல்வேறு பலன்கள் பெறுவதும் பாதிக்கப்படலாம். காலதாமதத்துக்கு முற்றுப்புள்ளி இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்கி உள்ளது. அதன்படி, கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரையில் ஒரு கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அதிகாரி மேலும் கூறும்போது, "டிஜிட்டல்மயமாக்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் பிரத்யேக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசிய எண்) வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைனிலையே ஒருநொடியில் ஆய்வு செய்துவிட முடியும். மேலும், இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் மூலம் ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 6 November 2017

5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும்



* 1980 சமயத்தில் கார்களில் ஆண்டனா உதவியோடு பயன் படுத்தப்பட்ட ஏ.எம்.பி.எஸ். (ஆடோமேடிக் மொபைல் போன் சர்வீஸ்) சேவையே முதல் தலைமுறை செல்போனாகும்.


* 1990-களில் பயன்பாட்டுக்கு வந்த ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. தொழில்நுட்ப அலைபேசிகள் இரண்டாம் தலைமுறை செல்போன்கள்.


* ஜி.எஸ்.எம். (குளோபல் சிஸ்டம் பார் மொபைல்) தொழில்நுட்பத்தில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்றவை இயங்குகின்றன.


* சி.டி.எம்.ஏ. (கோடு டிவிஷன் மல்டி ஆக்சஸ்) தொழில்நுட்பத்தில், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ் போன்றவை இயங்குகின்றன.


* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு புழக்கத்துக்கு வந்த 2.5 ஜி தலைமுறை செல்போன்கள் ஜி.பி.ஆர்.எஸ், இ.டி.ஜி.இ. தொழில்நுட்பங்களில் இயங்கின.


* மூன்றாம் தலைமுறை செல்போன்கள் ஏ.எம்.டி.எஸ்., சி.டி.எம்.ஏ.2000 எனும் இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் இயங்கின.


* நான்காம் தலைமுறை செல்போன்கள் வை-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்குபவை.


* செல்போன்களில் பயன்படும் சிம் கார்டு என்பதன் விரிவாக்கம், 'சப்ஸ்கிரைபர் ஐடென்டிடிட்டி மொடுல் கார்டு' என்பதாகும்.


* செல்போன்களில் இடம் பெறும் என்ற குறியீட்டிற்கு ஆக்டோதார்ப் என்று பெயர்.


* 5-ம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் 2020-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts