ஜோதிடக்கலை அறிவியல் தன்மை பெறுமா? | மகா.பாலசுப்பிரமணியன் |துணைப்பதிவாளர் | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி | ஜோதிடக்கலை உலகளவில் பெரும் புகழ்பெற்று விளங்குகிறது. இது வானவியலும், ஆன்மிகமும் கலந்த ஒரு விந்தை. நாளை என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் இல்லாத மனிதன் உலகத்திலேயே கிடையாது. ஆண்டி முதல் அரசன் வரை இதில் விதிவிலக்கு இல்லை. நெப்போலியன், ஹிட்லர், சீஸர், அலெக்சாண்டர், சர்ச்சில் உள்பட மிகப்பெரிய தலைவர்கள் பலரும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கென்று ஆஸ்தான ஜோதிடர்கள் இருந்தனர். ஒரு மனிதனுடைய வாழ்வின் முக்காலத்தையும் ஜோதிடம் துல்லியமாக படம் பிடித்து காட்டி விடுகிறது. வீம்புக்காவது ஜோதிடத்தை பொய்யென்று அடித்து பேசுபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பிரிவினர் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இவர்களுடைய ஜாதக அமைப்புதான் இவர்களை இத்தகைய இயல்புடையவர்களாக ஆக்கியிருக்கிறது. எனவே, இப்படிப்பட்டவர்களிடம்; வாதம் செய்வதில்லை எனக் கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
ஜோதிடத்தை நம்புகிறவர்கள் அறிவிலிகள், தன்னம்பிக்கையில்லாத கோழைகள் என்ற கருத்து மேடைகள் தோறும் பரப்பப்படுகிறது. தோல்வி அடைந்தவர்கள், தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்வதற்காக கண்டுபிடித்ததுதான் ஜோதிடம் எனவும் வயதாகி நாடி தளர்ந்தவர்கள் நாடுவது தான் ஜோதிடம், இளைஞர்களுக்கு அது தேவையில்லாதது எனவும், ஜோதிடத்தைப் பற்றி பல்வேறு எதிர்மறையான அபிப்பிராயங்கள் உள்ளன. எதிர்க்கருத்து கூறுபவர்களெல்லாம் ஜோதிட சாஸ்திரம் பற்றி சிறிதளவு கூட ஆராயாமல் பேசி வருகின்றனர். ஜோதிடம் சார்ந்த எந்த புத்தகத்தையும் படிக்காமல், எந்தவித ஆய்விலும் ஈடுபடாமல், ஜோதிடம் என்றாலே பொய்தான் என்று சிலர் கூறுகிறார்கள். சில ஜோதிடர்களிடம் ஜோதிடம் கேட்டு அவர்கள் கூறிய பலன்கள் நடக்காமல் போனதனால், ஜோதிடம் பொய், நான் என் அனுபவத்தில் கண்டறிந்து விட்டேன் என்று கூறலாம். நியாயப்படி அவர்கள், ஜோதிடர் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் மாறாக ஜோதிடம் தவறானது என்று கூறுகிறார்கள். ஜோதிடத்துறையில் மட்டும் அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறு அந்தத் துறையின் மீதே ஏற்றிக்கூறப்படுகிறது. ஓரிரு ஜோதிடரின் கணிப்பு தவறிவிட்டால், ஜோதிடக் கணிப்பு எல்லாமே தவறாகக்கூடியதுதான் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மருத்துவத்துறையிலும் தவறு செய்யும் மருந்துவர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது தான் குற்றம் சுமத்தப்படுமே தவிர, மருத்துவத்துறையே தவறானது என்று யாரும் விமர்சனம் செய்வதில்லை. எது நடக்குமோ அது நடந்தே தீரும். அதுவும் ஜாதகப்படியே நடக்கும்.
எதிர்காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமோ, எப்படியெப்படி இயங்க வேண்டுமோ, நமக்கு எது நடக்க வேண்டுமோ அவை அனைத்தும் ஒரு சாப்ட்வேர் போல் நாம் பிறக்கும்போதே நம்முடைய மூளைக்குள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. அந்த அடிப்படையில்தான் நம் வாழ்க்கை முழுக்க அமைகிறது. ஜாதகம் என்பது அந்த பதிவைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக உதவுகிறது என கூறுபவர்கள் உண்டு. இந்த உலகத்தில் நடப்பவையெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நிரூபணம் செய்து கொண்டேயிருக்கிறது. அதை மனிதர்கள் பலர் உணராமல் இருக்கலாம். ஆனால் வாழ்வை உற்று நோக்குபவர்களுக்கு, எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை நிச்சயம் புலப்படுகிறது. ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல, அது ஒரு போலி அறிவியல். ஜோதிடத்திற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதால், இம்மூடநம்பிக்கையால் தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி கவலை அடைந்த நோபல் பரிசு பெற்ற 19 அறிவியலாளர்கள் ஒன்றுபட்டு 1975-ம் ஆண்டில் ஓர் அற்புதமான அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில். “பல்வேறு துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகள் உலகின் பல பகுதிகளில் ஜோதிடத்தை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருவதைப் பற்றி கவலை அடைந்துள்ளனர். விண்ணியலாளர்கள் மற்றும் இதரத் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள், ஜோதிடர்களால் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் கணிப்புகளை, ஏற்றுக்கொள்ளாமல் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் எனவும், ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ள விரும்புவோர், அதன் கொள்கைகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதை உணர வேண்டும் எனவும் ஜோதிடம் பழங்கால மனிதர்களின் உலகம் பற்றிய மாயமான கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த படியால், ஜோதிடர்களின் கணிப்புகளையும் ஆலோசனைகளையும் மக்கள் நம்பி வந்தனர்.
விண்ணிலுள்ள கோள்களை கடவுளின் இல்லங்களென்றோ சகுனங்கள் என்றோ நம்பியதால், இங்கு பூமியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாகத் தொடர்புபடுத்திக் கொண்டனர். பூமிக்கும், கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள மிக நீண்ட தூரத்தைப் பற்றி எந்த கோட்பாடும் பழங்காலத்தில் இல்லை. தற்போது இந்த தூரங்கள், கணக்கிடப்பட்டு உள்ளதால், தூரத்தில் உள்ள கோள்களாலும், அவற்றை விட நெடுந்தொலைவிலுள்ள நட்சத்திரங்களாலும் ஏற்படுத்தப்படும் ஈர்ப்பு விசையோ, இதர பாதிப்புகளோ மிகச்சிறிய அளவினதாகவே ஆகும் என்பதைக் காண நம்மால் இயல்கிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் இந்த கோள்களோ நட்சத்திரங்களோ பிரயோகிக்கும் ஆற்றல் நமது எதிர்காலத்தை எந்த வழியிலாவது வடிவமைக்கும் என்று கற்பனை செய்துகொள்வதே ஒரு தவறாகும். குறிப்பிட்ட வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சில குறிப்பிட்ட நாட்களிலோ, காலத்திலோ நெடுந்தொலைவில் உள்ள இந்த விண்கோள்கள் ஆதரவளிக்கின்றன என்பதோ, ஒருவர் பிறந்த குறிப்பிட்ட ராசி மற்ற ராசி மக்களுடன் அவர் இணக்கமாகச் செல்வதையோ, இணக்கமற்றுச் செல்வதையோ தீர்மானிக்கிறது என்பது உண்மையல்ல. நிச்சயமற்ற இன்றைய காலகட்டங்களில் எதைப்பற்றியும் முடிவெடுப்பதில் தங்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல் கிடைக்காதா என பலர் ஏங்குகின்றனர். தங்களின் கட்டுப்பாட்டினை மீறிய இத்தகைய கோள்களின் ஆற்றலால் தங்களின் எதிர்காலம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதை நம்ப அவர்கள் விரும்புகின்றனர்.
எவ்வாறாயினும், நாம் அனைவருமே உலகை எதிர்கொள்ள வேண்டியவர்களே என்பதால், நமது எதிர்காலம் நம்மிடமே உள்ளதென்பதையும், நட்சத்திரங்களில்லை என்பதையும் நாம் உணரத்தான் வேண்டும். ஜோதிடத்தில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ள தனிமனிதர்களின் நம்பிக்கைக்கு அறிவியலில் எந்த விதத்திலும் சரிபார்க்கப்பட்ட அடிப்படை இல்லை. சொல்லப்போனால் அதற்கு மாறாக அதன் போலித்தனம் பற்றி வலுவான ஆதாரங்கள் உள்ளன என ஜோதிட எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். எனவே ஜோதிடத்தை ஆன்மிகமாகவும், அறிவியலாகவும் உண்மைத் தன்மை அடிப்படையில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும், மூடநம்பிக்கை மற்றும் போலி அறிவியல் அடிப்படையில் அதனை வரவேற்க கூடாது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

No comments:
Post a Comment