Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பலவீனங்கள் பலமாகட்டும்...!


கரோனா தீநுண்மி பரவலானது, சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்ட பாசிமணிகள் போல எல்லாத் திசைகளிலும் சென்றடைந்துள்ளது. சென்னை போன்ற சில இடங்களில் நோய்த்தொற்று அதிகரித்தாலும், பெரும்பாலான பகுதிகளில் அது கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்தக் கட்டத்தில், அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கான தொலைநோக்கு பார்வை அவசியம்.

புலம்பெயர்ந்தோர் பிரச்னை மற்றும் கல்வி சீர்திருத்தம்:
  • நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் எனப் புலம்பெயர்ந்த இந்தியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் ஆகியோர் எந்தப் பேரிடர் நிகழ்ந்தாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணம், நமது கல்வி முறை அறிவுத் தேடலை ஊக்குவிக்காமலும், ஆராய்ச்சிக்கு வாய்ப்பளிக்காமலும், திறமைக்கு அங்கீகாரம் கொடுக்காமலும் இருப்பதுதான். கல்வி கற்க வாய்ப்பில்லாதவர்களும் அதிகம்.
  • வசதி படைத்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் கல்வி பெரும் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கிறது. இதை மாற்றுவது அரசின் கடமை.
  • மாணவர்கள் நம் நாட்டிலேயே படிக்கும் வகையில் பாடத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். கல்வி வெறுமனே ஏட்டளவில் இல்லாமல், வேலைவாய்ப்பை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும்.
  • எந்தக் கல்விப் பிரிவிலும், எந்தக் கட்டத்தில் வெளியே வந்தாலும், அவர்களின் படிப்புக்கும் திறமைக்கும் தகுந்த வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
  • அதிக அளவில் புலம்பெயரும் துறைகளில் அரசு கவனம் செலுத்தி, வேலைவாய்ப்புடன் கூடிய பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
  • இது ஒரு நாளில் செய்யக்கூடியதல்ல; தொலைநோக்குப் பார்வை, தெளிவான திட்டமிடல், பொருட்செலவு, சிறந்த கட்டமைப்பு, தரமான கல்வி நிலையங்கள், திறமையான ஆசிரியர்கள், அறிவார்ந்த நூல்கள் ஆகியவை இருந்தால் மட்டுமே சாத்தியம்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு:
  • திறன்சார் தொழிலாளர்கள் (கொத்தனார், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், தச்சர்), மென்பொறியாளர்கள், மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். இது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க உதவுகிறது.
  • வெளிநாடுகளில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டு அவர்களை அனுப்புவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
  • சீனர்கள் உலகம் முழுவதும் குடியேறியிருந்தாலும், தங்கள் தாய்மொழியையும், தாய்நாட்டுடனான தொடர்பையும் விட்டுவிடுவதில்லை. சீனா அரசு இந்தத் தொடர்பை அறுந்துவிடாமல் பாதுகாக்க கவனமாக உள்ளது.
  • இந்தியாவுக்குள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு ஊர், மாநிலத்தின் சூழல், மக்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்க வேண்டும்.
அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் நிவாரணப் பணிகள்:
  • வீட்டுவேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதைக் கடைக்காரர்கள், தினக்கூலி வாங்குபவர்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
  • அரசு அறிவித்த உடனடி நிவாரணத்தைப் பெறக் கூட்டம் கூட்டமாக அலைமோதியதால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டது. கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் உணவுப் பொருள் வழங்கியதும் இதற்குக் காரணம்.
  • நிவாரணப் பணிகளை அரசு மட்டுமே, அரசு இயந்திரத்தைக் கொண்டு முறைப்படுத்திச் செய்திருக்க வேண்டும்.
  • அரசு முயன்றபோது, எதிர்க்கட்சிகள் அதை ஆளுங்கட்சியின் சதியாக வர்ணித்தது அரசியல் சோகம்.
  • இந்தச் சிக்கலைத் தவிர்க்க, மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் அனைத்து விவரங்களும் ஒவ்வொரு மாநில அரசிடமும் துல்லியமாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றம் இதைச் சாத்தியமாக்கும்.
  • விவரங்கள் இருந்திருந்தால், சொந்த மாநிலங்களுக்கு மக்கள் படையெடுத்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்களைத் திருமண மண்டபங்களில் தங்க வைத்து, உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை எளிதாக வழங்கியிருக்கலாம். மாறாக, மக்களை இடம் மாற அனுமதித்து, பிறகு துரத்தித் தேடிப் பிடித்தது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல் இருந்தது.
வேளாண் துறை சவால்கள்:
  • பொது முடக்கத்தால் விவசாயிகள் அடைந்த துன்பம் சொல்லி மாளாது. மற்ற துறைகளைப் போல வேளாண் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடியாது.
  • வேளாண் துறையில் பாதுகாப்பு விதிகளுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி, முன்னுரிமையின் அடிப்படையில் வேலைகளைச் செய்திருக்க வேண்டும்.
  • விளைபொருள்களை வீணாக்காமல், அரசு கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்க வேண்டும். போதுமான கிடங்குகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் நாம் பின்தங்கியுள்ளோம்.
  • குறைந்த தொழிலாளர்கள், அதிக இயந்திரங்கள் உதவியுடன் விவசாயப் பணிகள் நடந்திருந்தால், பொது முடக்கம் விவசாயிகளை அதிகம் பாதித்திருக்காது.
  • உணவு உற்பத்தி குறைவதும், பகிர்மானம் தடைபடுவதும் வரும் ஆண்டுகளில் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
அரசு நிர்வாகத்தின் செயல்திறன்:
  • அரசும் மக்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் எத்தகைய பேரிடரையும் சமாளிக்கலாம். மக்கள்தொகை நம் நாட்டின் பலவீனம்; அதைச் சீனாவைப்போலப் பலமாக மாற்றி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • கரோனா தீநுண்மி பாதிப்பின்போது அரசின் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன.
  • மற்ற நாள்களில் இதே துறைகள் நேர்மையாகவும் திறம்படவும் செயல்படாததற்குக் காரணம்: அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம், அங்கீகாரமின்மை, அரசியல் தலையீடு, ஊழல். இவை அரசு இயந்திரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிட்டன.
  • இதைச் சரி செய்ய மத்திய, மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.
பொது முடக்கம் தளர்த்தப்பட்டாலும், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுடன் நாம் தொடர்ந்து வாழ வேண்டும். நம்பிக்கையோடு புதியதொரு சகாப்தத்தைத் தொடங்குவோம்.

Post a Comment

2 Comments

Anonymous said…
Bet on Sports Online at Klahomacasinoguru
› casino › casino Bet on sports online at 아시안부키 Klahomacasinoguru. Online Gambling is a 바카라검증 casino game that is 빡촌 후기 widely played on the internet, and has been 포커 규칙 developed by the likes of JackpotCity Casino bet365가상축구 and

Ad Code

Responsive Advertisement